ஏழு தூதர்களும் ஏழு வாதைகளும்
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது. லேவி 26:21வெளி 15:6-7தானி 4:2-3வெளி 21:9வெளி 19:15தானி 12:6-7தானி 6:27மத் 13:41-42 அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன். வெளி 4:6வெளி 12:11வெளி 19:1-7வெளி 5:81 பேது 1:7வெளி 21:18மத் 3:11வெளி 13:14 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சங் 111:2யாத் 15:1-18சங் 139:14வெளி 5:9-13சங் 145:17எபி 3:5ஓசி 14:9ஏசா 33:22
“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே,
தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்;
பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், சங் 86:9எரே 10:7மல்கி 1:11சங் 22:27வெளி 11:15வெளி 14:7ஏசா 25:3ஏசா 45:23
உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்?
தேவரீர் ஒருவரே பரிசுத்தர்,
எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்;
உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது; வெளி 11:19எண் 1:50மத் 27:51யாத் 38:21எண் 1:53யாத் 25:21 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். வெளி 1:13வெளி 15:1எசேக் 44:17-18யாத் 28:5-8லூக் 24:4வெளி 14:15 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. வெளி 10:6வெளி 16:2வெளி 5:8வெளி 15:1வெளி 21:9எரே 25:15சங் 75:8வெளி 4:6-9 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை. ஏசா 6:41 இராஜா 8:10-11யாத் 40:34-352 நாளாக 5:13-142 தெச 1:9சங் 29:9வெளி 15:1எரே 15:1