யாத்திராகமம் 15

Exodus 15
அத்தியாயம் 15

மோசே மற்றும் மிரியாம் பாடின பாடல்

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: வெளி 15:3யாத் 15:21சங் 106:12ஏசா 12:1-6ஏசா 51:10-11சங் 107:8யாத் 18:11சங் 107:21-22

யெகோவாவைப் பாடுவேன்;

“அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்;

குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

யெகோவா என்னுடைய பெலனும் ஏசா 12:2சங் 118:14சங் 18:46சங் 59:17ஏசா 25:1சங் 140:7சங் 18:1-2சங் 145:1

என்னுடைய கீதமுமானவர்;

அவர் எனக்கு இரட்சிப்புமானவர்;

அவரே என்னுடைய தேவன்,

அவருக்கு வாசஸ்தலத்தை

ஆயத்தம்செய்வேன்;

அவரே என் தகப்பனுடைய தேவன்,

அவரை உயர்த்துவேன்;

யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; சங் 24:8யாத் 14:14வெளி 19:11-21ஏசா 42:8யாத் 6:6-8சங் 83:18சங் 45:3யாத் 3:15

என்பது யெகோவா அவருடைய நாமம்.

பார்வோனின் இரதங்களையும் யாத் 14:13-28யாத் 14:6-7

அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்;

அவனுடைய முதன்மையான அதிகாரிகள்

செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.

ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; நெகே 9:11யாத் 14:28யாத் 15:10எரே 51:63-64எசேக் 27:34யோனா 2:2மத் 18:6மீகா 7:19

கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.

யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; சங் 118:15-16ஏசா 51:91 நாளாக 29:11-12சங் 2:9சங் 60:5வெளி 2:27ஏசா 52:10மத் 6:13

யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.

உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், ஏசா 5:24மல்கி 4:1ஏசா 47:14உபா 33:26ஏசா 37:29ஏசா 5:16சங் 148:13சங் 83:13

அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.

உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; யோபு 4:9சங் 78:13யாத் 14:21-222 சாமு 22:162 தெச 2:8ஆப 3:10ஏசா 11:4ஏசா 37:7

வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது;

ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், நியாயாதி 5:30யாத் 14:5ஏசா 53:12லூக் 11:22ஆதி 49:27ஆப 3:14ஏசா 36:201 இராஜா 19:2

என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும்,

என்னுடைய பட்டயத்தை உருவுவேன்,

என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.

உம்முடைய காற்றை வீசச்செய்தீர், உபா 11:4யாத் 14:21யாத் 15:5ஏசா 11:15மத் 8:27ஆமோ 4:13யாத் 14:27-28ஆதி 8:1

கடல் அவர்களை மூடிக்கொண்டது;

திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

யெகோவாவே, 1 இராஜா 8:23சங் 89:5-81 சாமு 2:22 சாமு 7:22வெளி 4:8ஏசா 6:3எரே 10:6-7உபா 3:24

தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்?

பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும்,

அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; யாத் 15:6

பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; சங் 77:201 பேது 1:5சங் 106:9சங் 77:14-15சங் 78:52-54ஏசா 63:12-13எரே 2:6எபே 2:4

உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.

மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; உபா 2:25யோசு 2:9-10சங் 48:6ஏசா 14:31யோசு 9:24எண் 14:14உபா 2:4-5ஏசா 14:29

பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.

ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; யோசு 5:1யோசு 2:11யோசு 2:9உபா 2:4ஆதி 36:40சங் 68:21 நாளாக 1:51-541 சாமு 14:16

மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்;

கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.

பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். சங் 74:2உபா 2:251 சாமு 25:37யோசு 2:91 பேது 2:92 பேது 2:1உபா 11:25யாத் 11:7

யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும்,

நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும்,

அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால்

கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.

நீர் அவர்களைக் கொண்டுபோய், சங் 44:2சங் 80:8சங் 78:54-55எரே 32:41சங் 78:68-69ஏசா 5:1-4எரே 2:21எரே 31:23

யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு

நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும்,

ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய

பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.

யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார். சங் 10:16சங் 29:10தானி 2:44ஏசா 57:15சங் 146:10வெளி 11:15-17தானி 4:3தானி 7:14

பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் யாத் 14:28-29எபி 11:29யாத் 14:22-23நீதி 21:31

குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது;

யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்;

இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.

மிரியாம் பாடின பாடல்

ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். சங் 150:41 சாமு 18:6சங் 149:3சங் 68:25நியாயாதி 11:34நியாயாதி 4:4மீகா 6:4எண் 26:59 மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: யாத் 15:1வெளி 15:3வெளி 7:10-12வெளி 5:9வெளி 19:1-61 சாமு 18:72 நாளாக 5:13ஏசா 5:1-30

யெகோவாவைப் பாடுங்கள்,

அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்;

குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்

என்று பாடினாள்.

மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்

பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள். ஆதி 16:71 சாமு 15:7யாத் 3:18ஆதி 25:18 அவர்கள் மாராவிற்கு 1 வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது. எண் 33:8ரூத் 1:20 அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். யாத் 16:2யாத் 14:11எண் 20:2-5எண் 14:1-4சங் 78:19-20யாத் 17:3-4எண் 11:1-61 கொரி 10:10 மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: உபா 8:2சங் 66:10நியாயாதி 3:1நியாயாதி 2:22நியாயாதி 3:42இராஜா 2:21உபா 8:16யாத் 16:4 நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார். சங் 103:3உபா 7:15யாத் 23:25சங் 41:3-4சங் 147:3எரே 33:6ஓசி 6:1உபா 28:1-15

பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள். வெளி 22:2வெளி 7:17எண் 33:9ஏசா 12:3எசேக் 47:12