தாவீதின் துதிப் பாடல்
யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: யாத் 15:1நியாயாதி 5:1ஏசா 12:1-62 தீமோ 4:18சங் 103:1-6சங் 116:1-19சங் 34:19வெளி 7:9-17
“யெகோவா என்னுடைய கன்மலையும், சங் 18:2-50சங் 31:3சங் 71:3உபா 32:4சங் 144:2சங் 91:21 சாமு 2:2மத் 16:18
என்னுடைய கோட்டையும்,
என்னுடைய இரட்சகருமானவர்.
தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், சங் 9:9ஏசா 12:2நீதி 18:10நீதி 30:5சங் 18:2உபா 33:29ஆதி 15:1சங் 115:9-11
என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும்,
என்னுடைய உயர்ந்த அடைக்கலமும்,
என்னுடைய இருப்பிடமும்,
என்னுடைய இரட்சகருமானவர்;
என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே.
துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; சங் 18:3சங் 116:2ரோம 10:13சங் 116:13சங் 116:4சங் 34:6சங் 48:1சங் 50:15
அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன்.
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, யோனா 2:3சங் 69:14-151 தெச 5:3ஏசா 59:19எரே 46:7-8சங் 18:4சங் 93:3-4வெளி 12:15-16
பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது.
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; சங் 116:3அப் 2:24யோபு 36:8யோனா 2:2நீதி 13:14நீதி 14:27நீதி 5:22சங் 140:5
மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, சங் 18:6யோனா 2:7சங் 116:4யாத் 3:7சங் 120:1சங் 27:4சங் 34:15-17ஆப 2:20
என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்;
தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்;
என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது.
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; யோபு 26:11சங் 97:4நியாயாதி 5:4சங் 77:18மத் 28:2சங் 18:7அப் 4:31நாகூ 1:5
அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
அவர் நாசியிலிருந்து புகை வந்தது, எபி 12:29சங் 18:152 சாமு 22:132 சாமு 22:16உபா 32:22யாத் 15:7-8யாத் 19:18யாத் 24:17
அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது,
அதனால் தீப்பற்றிக்கொண்டது.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 1 இராஜா 8:12சங் 97:2யாத் 20:21சங் 144:5உபா 4:11ஏசா 64:1-3லூக் 23:44-45மத் 27:45
கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். சங் 104:3ஆதி 3:24எபி 1:14சங் 18:10சங் 80:1சங் 99:11 சாமு 4:4யாத் 25:19
காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார்.
வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். 2 சாமு 22:10யோபு 36:29சங் 18:11-12சங் 97:2சங் 27:5
அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. 2 சாமு 22:9
யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 1 சாமு 2:10யோபு 37:2-5சங் 29:3-91 சாமு 12:17-181 சாமு 7:10யாத் 19:6எசேக் 10:5ஏசா 30:30
சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
அவர் அம்புகளை எய்து, உபா 32:23ஆப 3:11யோசு 10:10சங் 144:6-7சங் 18:14சங் 45:5சங் 7:12-13
அவர்களைச் சிதறடித்து,
மின்னல்களை உபயோகித்து,
அவர்களைச் சிதறடித்தார்.
யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, நாகூ 1:4யாத் 15:8-10ஆப 3:8-10சங் 114:3-72 சாமு 22:9யாத் 14:21-27யோபு 38:11மத் 8:26-27
பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, ஏசா 43:2சங் 144:7சங் 18:16சங் 130:1சங் 32:6சங் 124:4-5சங் 59:1-2சங் 93:3-4
என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
என்னைவிட பெலவானாக இருந்த 2 கொரி 1:102 தீமோ 4:17சங் 3:7சங் 56:92 சாமு 22:1
என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார்.
என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; சங் 71:20-211 சாமு 19:11-171 சாமு 23:26-27சங் 118:10-13சங் 23:42 சாமு 15:10-13ஏசா 26:19ஏசா 50:10
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், சங் 31:82 சாமு 15:26சங் 118:5சங் 149:4சங் 22:8சங் 147:11அப் 2:32-361 நாளாக 4:10
என்னைத் தப்புவித்தார். 1
யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; 1 சாமு 26:23சங் 24:41 இராஜா 8:32சங் 7:8யாக் 4:81 கொரி 15:582 சாமு 22:25யோபு 17:9
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி
எனக்குச் சரிக்கட்டினார்.
யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நீதி 8:32ஆதி 18:19சங் 128:1சங் 119:1சங் 36:31 சாமு 12:32 கொரி 1:12எபி 10:38-39
நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; சங் 119:102சங் 119:30யோவா 15:14உபா 6:1-2உபா 6:6-9உபா 7:12உபா 8:11லூக் 1:6
நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, ஆதி 6:9ஆதி 17:1யோபு 1:1எபே 1:4எபி 12:12 கொரி 5:11யோவா 1:47நீதி 4:23
பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், 2 சாமு 22:212 கொரி 5:10ரோம 2:7-8ஏசா 3:10நீதி 5:21
தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார்.
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், மத் 5:7யாக் 2:13
உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
புனிதனுக்கு நீர் புனிதராகவும், மத் 5:8சங் 18:26லேவி 26:23-28ஏசா 45:9சங் 125:5உபா 28:58-61யாத் 18:11
மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; சங் 72:12-13ஏசா 5:15யாக் 4:6-7யாத் 3:7-8ஏசா 2:11-12ஏசா 2:171 பேது 5:5-6தானி 4:37
பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த,
உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது.
கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; சங் 27:1யோவா 8:12வெளி 21:23யோவா 12:46யோபு 29:3மீகா 7:9சங் 112:4ஏசா 50:10
யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன் 2; சங் 18:29பிலி 4:13சங் 118:10-12ரோம 8:37
என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
தேவனுடைய வழி உத்தமமானது; உபா 32:4நீதி 30:5சங் 18:30மத் 5:48சங் 12:62 சாமு 22:3சங் 119:140தானி 4:37
யெகோவாவுடைய வசனம் சுத்தமானது;
தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
யெகோவாவைத் தவிர தேவன் யார்? 1 சாமு 2:2உபா 32:31ஏசா 44:6ஏசா 44:8எரே 10:6-72 சாமு 22:2-3உபா 32:39ஏசா 45:21
நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; எபே 6:10ஏசா 41:10சங் 27:1சங் 28:7-8பிலி 4:13எபி 13:212 கொரி 12:9சங் 119:1
அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உபா 32:13ஏசா 58:14ஆப 3:192 சாமு 2:18ஏசா 33:16உபா 33:25
உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, சங் 144:1சங் 18:33-34எசேக் 39:3எசேக் 39:9-10சங் 46:9
என்னுடைய கைகளை யுத்தத்திற்குப்.
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; எபே 6:16சங் 115:14சங் 84:11சங் 18:35ஆதி 12:2ஆதி 15:1ஆதி 22:17
உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். நீதி 4:12சங் 17:51 சாமு 2:9சங் 121:3சங் 18:36சங் 4:1சங் 94:18
என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; சங் 21:8-92 சாமு 10:142 சாமு 5:18-252 சாமு 8:1-22 சாமு 8:13-14ரோம 8:37
அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன்.
அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; மல்கி 4:3மல்கி 4:1சங் 110:1சங் 110:5-6சங் 118:10-12சங் 18:37
அவர்களை முறியடித்து வெட்டினேன்.
யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, சங் 44:5கொலோ 1:11ஏசா 60:14சங் 18:32சங் 18:391 சாமு 17:49-511 சாமு 23:5ஏசா 45:5
என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர்.
நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, யாத் 23:27யோசு 10:242 தெச 1:8-9ஆதி 49:8லூக் 19:14லூக் 19:27சங் 18:40-41சங் 21:8-9
என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், ஏசா 1:151 சாமு 28:6மீகா 3:4நீதி 1:28எசேக் 20:3யோபு 27:9லூக் 13:25-26மத் 7:22-23
அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை;
யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள்,
அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை.
அவர்களை பூமியின் தூளாக இடித்து, மீகா 7:10ஏசா 10:62இராஜா 13:7சகரி 10:5தானி 2:35உபா 32:26ஏசா 26:15லூக் 21:24
தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன்.
என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, 2 சாமு 8:1-14ஏசா 55:52 சாமு 3:12 சாமு 19:142 சாமு 19:9உபா 28:132 சாமு 18:6-82 சாமு 20:1-2
தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்;
நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள்.
அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, சங் 81:15சங் 66:3அப் 8:13அப் 8:21-23உபா 33:29ஏசா 56:3ஏசா 56:6சங் 18:44-45
என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அந்நியர்கள் பயந்துபோய், மீகா 7:17ஆமோ 9:3ஏசா 2:19ஏசா 2:21ஏசா 64:6யாக் 1:11
தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள்.
யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; சங் 89:262 சாமு 22:3யோபு 19:25உபா 32:39-40லூக் 1:47
என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக.
அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, சங் 94:1சங் 144:21 கொரி 15:251 சாமு 25:301 சாமு 25:392 சாமு 18:192 சாமு 18:31சங் 110:1
மக்களை எனக்குக்
கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; சங் 140:11 சாமு 2:82 சாமு 5:122 சாமு 7:8-9எண் 24:17-19எண் 24:7சங் 140:4சங் 18:48
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல்
என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
இதனால் யெகோவாவே, ரோம 15:9ஏசா 12:1-6சங் 145:1-2சங் 146:1-2சங் 18:49
தேசங்களுக்குள் உம்மைத் துதித்து,
உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்.
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு 2 சாமு 7:12-13சங் 144:10சங் 18:50சங் 89:20சங் 89:292 சாமு 22:2எரே 30:9லூக் 1:31-33
மகத்தான இரட்சிப்பை அளித்து,
தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும்
அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”