யோபு 37

Job 37
அத்தியாயம் 37

“இதினால் என் இருதயம் தத்தளித்து, அப் 16:26அப் 16:29தானி 10:7-8யாத் 19:16ஆப 3:16எரே 5:22யோபு 21:6யோபு 4:14

தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.

தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், யோபு 36:33யோபு 37:5யாத் 19:16-19யோபு 38:1சங் 104:7சங் 29:3-9யோபு 36:29

அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள்.

அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், யோபு 38:13மத் 24:27ஏசா 11:12சங் 97:4சங் 77:13வெளி 11:19

பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.

அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, சங் 29:3-9சங் 68:33உபா 33:26யாத் 15:7-8யோபு 36:27-33

தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்;

அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.

தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; யோபு 5:9ரோம 11:33பிரச 3:11ஏசா 40:28யோபு 9:10யோபு 26:14யோபு 36:26வெளி 15:3

நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.

அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், யோபு 36:27யோபு 38:22எசேக் 13:13சங் 147:16-18ஆமோ 9:6எசேக் 13:11எஸ்றா 10:13எஸ்றா 10:9

தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து:

பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.

தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, சங் 111:2சங் 109:27பிரச 8:17ஏசா 26:11ஏசா 5:12யோபு 12:14யோபு 36:24யோபு 5:12

அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார்.

அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, சங் 104:22யோபு 38:40

தங்கள் கெபிகளில் தங்கும்.

தெற்கேயிருந்து சூறாவளியும், யோபு 9:9ஏசா 21:1சங் 104:3யோபு 38:1சகரி 9:14

வடகாற்றினால் குளிரும் வரும்.

தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; யோபு 38:29-30சங் 147:16-18சங் 78:47

அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும்.

அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, யோபு 36:27-30ஏசா 18:4யோபு 36:32மத் 17:5

மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார்.

அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், சங் 148:8யாக் 5:17-18யோவே 2:23சங் 104:24ஆமோ 4:7எரே 14:22சங் 65:9-10வெளி 11:6

அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி,

அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார்.

ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், 1 இராஜா 18:451 சாமு 12:18-19யோபு 38:26-27யோபு 36:312 சாமு 21:10யாத் 9:18-25எஸ்றா 10:9யோபு 37:6

ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார்.

யோபே, இதற்குச் செவிகொடும்; யாத் 14:13சங் 111:2சங் 145:10-12ஆப 2:20யோபு 36:24சங் 145:5-6யோபு 26:6-14சங் 46:10

தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.

தேவன் அவைகளைத் திட்டமிட்டு, ஏசா 40:26யோபு 36:30-32யோபு 37:11யோபு 38:4-41யோபு 28:24-27யோபு 34:13சங் 119:90-91

தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ?

மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், யோபு 36:4ஏசா 40:22எரே 10:12-13யோபு 36:29நீதி 3:19-20யோபு 26:8சங் 104:2-3சங் 104:24

பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,

தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, யோபு 38:31யோபு 6:17லூக் 12:55சங் 147:18

உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ?

செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? ஏசா 44:24சங் 104:2யாத் 38:8ஏசா 40:22ஆதி 1:6-8ஏசா 40:12யோபு 9:8-9நீதி 8:27

அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 கொரி 13:121 யோவா 3:2யோபு 12:3யோபு 13:3யோபு 13:6யோபு 26:14யோபு 28:20-21யோபு 38:2

இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம்.

நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? யோபு 11:7-8யோபு 6:3மத் 12:36-37சங் 139:4

ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே.

இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது, யோபு 26:9யோபு 36:32யோபு 38:25

ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; சங் 104:1எபி 12:29யூதா 1:251 நாளாக 29:11ஆப 3:3-19எபி 1:3யோபு 40:10நாகூ 1:3

தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.

சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; 1 தீமோ 6:16ரோம 11:33யோபு 36:5புலம் 3:32-33சங் 99:4யோபு 9:4எசேக் 18:23எசேக் 18:32

அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்;

அவர் மகா நீதிபரர்;

அவர் ஒடுக்கமாட்டார்.

ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; மத் 10:281 கொரி 1:26ஏசா 5:21யோபு 5:13மத் 11:25-26சங் 130:4ரோம 2:41 கொரி 3:19

தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.