யோபு

Job · 42 அதிகாரங்கள்

அதிகாரங்கள் · Chapters

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42

முன்னுரை

ஆசிரியர்

இந்த புத்தகத்தை யார் எழுதினார்கள் என்று சரியான ஆசிரியர் குறிப்பிடபடவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருப்பதாக கருதபப்டுகிறது. வேத புத்தகங்களிலே எழுதப்பட்ட புத்தகங்களில் யோபு தான் முதல் புத்தகம் என்று சொல்லப்படுகிறது. யோபு தன் வாழ்க்கையில் சொல்லிமுடியாத, தாங்கமுடியாத துன்பங்களை அனுபவித்தவன். அப்படிப்பட்ட துன்பம் ஏன் யோபுக்கு வந்தது என்று அவனுடைய நண்பர்கள் காரணம் தேடினார்கள் ஆனால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. யோபு, தேமானியான எலிப்பாஸ், சூகியனான பில்தாது, நாகமாத்தியனான சோப்பார், எலிகூ, இந்த புத்தகத்தின் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

யார் என்று நிச்சயமாக அறிய முடியவில்லை.

சிறைப்பட்டப் பிறகு எழுதப்பட்டிருக்கலாம்.

யாருக்காக எழுதப்பட்டது

பண்டைய யூதர்களுக்கும் வேதம் வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது, எகிப்தில் அடிமைத்தனத்தில் வேதனை அனுபவித்திக்கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்கு யோபுவின் சரித்திரத்தினால் மோசேயினால் ஆறுதல் சொல்லப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

எழுதப்பட்ட நோக்கம்

இந்த புத்தகத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்றால்: சாத்தானால் நமக்கு பணப் பிரச்சனைகளையும் சரீர அழிவுகளை கர்த்தருடைய அனுமதியில்லாமல் கொண்டுவரமுடியாது. உலகில் நடக்கிற அநியாயமான துன்பங்களுக்கு காரணம் என்ன என்று மனித அறிவுக்கு எட்டாததாய் இருக்கிறது. துன்மார்க்கன் தன் அக்கிரமத்துக்கு ஏற்றபடி தீமையை நிச்சயமாக அனுபவிப்பான். நம்மை சுத்திகரிக்க, சோதிக்க, பாடம் கற்றுக்கொள்ள சில சமயங்களில் துன்பங்கள் அனுமதிக்கப்படுகிறது.

மையக் கருத்து

பாடுகள் மூலம் ஆசிர்வாதம்.

பொருளடக்கம்

1. முகவுரையும் சாத்தானால் பாடுபடுவதும் — 1:1-2:13

2. யோபு தன் மூன்று நண்பர்களுடன் தன்னுடைய துன்பங்களை பகிர்ந்துக் கொண்டான் — 3:1-31:40

3. எலிப்பாஸ் தேவனுடைய நன்மைகளை அறிவிக்கிறான் — 32:1-37:24

4. தேவன் தம்முடைய சர்வ வல்லமையை வெளிப்படுத்துகிறார் — 38:1-41:34

5. தேவன் யோபுவை திரும்ப ஸ்தாபிக்கிறார் — 42:1-17