யோபு 32

Job 32
அத்தியாயம் 32

எலிகூவின் வார்த்தைகள்

யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள். யோபு 10:7யோபு 33:9யோபு 10:2யோபு 13:15யோபு 27:4-6யோபு 23:7யோபு 29:11-17யோபு 31:1-40 அதினால் ராமின் வம்சத்தானாகிய பூசியனாகிய பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபம் வந்தது, யோபு, தேவனைவிடத் தன்னைத்தான் நீதிமானாக்கினதினால், அவன்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது. ஆதி 22:21எபே 4:26யோபு 27:2யோபு 27:5யோபு 35:2யோபு 40:8யோபு 10:3யோபு 30:21 கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது. யோபு 8:6யோபு 22:5-30யோபு 24:25அப் 24:13அப் 24:5யோபு 15:34யோபு 25:2-6யோபு 26:2-4 அவர்கள் தன்னைவிட வயது முதிர்ந்தவர்களானதினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடியும்வரை காத்திருந்தான். யோபு 32:11-12நீதி 18:13 அந்த மூன்று மனிதரின் வாயிலும் பதில் பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் வந்தது. யாத் 32:19யோபு 32:2 ஆதலால் பரகெயேலின் மகன் எலிகூ என்னும் பூசியன் மறுமொழியாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ வயதானவர்கள்; ஆகையால் நான் பயந்து, என் கருத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன். யோபு 15:101 தீமோ 5:11 பேது 5:5தீத் 2:61 சாமு 17:28-30யோபு 15:7லேவி 19:32ரோம 13:7 முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். நீதி 16:31யோபு 12:12எபி 5:121 இராஜா 12:6-8யோபு 8:8-10நீதி 1:1-4சங் 34:11-12 ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். யோபு 33:4யோபு 38:362 தீமோ 3:16யாக் 1:5நீதி 2:6பிரச 2:261 கொரி 2:10-121 இராஜா 3:12 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல. மத் 11:251 கொரி 1:26-27பிரச 4:13யோபு 12:201 கொரி 2:7-8யாக் 2:6-7யோவா 7:48எரே 5:5 ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன். 1 கொரி 7:251 கொரி 7:40 இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன். பிரச 12:9-10யோபு 29:21யோபு 29:23யோபு 32:4யோபு 5:27நீதி 18:17நீதி 28:11 நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை. யோபு 32:31 தீமோ 1:7 ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனிதனல்ல, தேவனே அவரை வெற்றி கொள்ளவேண்டும். எரே 9:231 கொரி 1:27-291 கொரி 3:18ஏசா 5:211 கொரி 1:19-21எசேக் 28:3ஆதி 14:23ஏசா 48:5 அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை. அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது. யோபு 29:22யோபு 6:24-25மத் 22:22மத் 22:26மத் 22:34மத் 22:46மத் 7:23 அவர்கள் பேசமாட்டார்களா என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் மறுமொழி கொடுக்காமலிருந்ததினால், ஆமோ 5:13யாக் 1:19யோபு 13:5நீதி 17:28 நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன். யோபு 32:10யோபு 33:12யோபு 35:3-4 வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது. சங் 39:3அப் 4:20எசேக் 3:14-27எரே 20:92 கொரி 5:13-14 இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது. மத் 9:17 நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன். யோபு 21:3யோபு 13:13யோபு 13:19யோபு 20:2நீதி 8:6-7 நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக. லேவி 19:15யோபு 13:82 சாமு 14:172 சாமு 14:20அப் 12:22-23அப் 24:2-3உபா 1:17உபா 16:19 நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார். சங் 12:2-31 தெச 2:5நீதி 29:5கலா 1:10யோபு 17:5