எலிப்பாஸின் வார்த்தைகள்
அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, லூக் 17:10கலா 6:7-8யோபு 35:6-8நீதி 3:13-18சங் 16:2யோபு 21:15பிரச 7:11-12மத் 5:29
தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? 2 கொரி 7:1நீதி 15:8நீதி 11:1நீதி 12:22சங் 147:10-111 நாளாக 29:17அப் 24:16யோபு 23:10-12
நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது
அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, யோபு 14:3சங் 143:2ஏசா 3:14-15வெளி 3:19யோபு 16:21யோபு 19:29யோபு 23:6-7யோபு 34:23
உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், யோபு 15:5-6சங் 40:12யோபு 11:14யோபு 11:6யோபு 15:31-34யோபு 21:27யோபு 32:3யோபு 4:7-11
உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, யாத் 22:26எசேக் 18:12எசேக் 18:16உபா 24:10-18யோபு 24:3உபா 24:6யோபு 24:9-10யோபு 31:19-20
ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், யோபு 31:17ஏசா 58:7மத் 25:42எசேக் 18:16எசேக் 18:7உபா 15:7-11ஏசா 58:10யோபு 31:31
பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; ஏசா 9:151 இராஜா 21:11-15ஏசா 3:3யோபு 13:8யோபு 29:7-17யோபு 31:34மீகா 7:3சங் 12:8
கனவான் அதில் குடியேறினான்.
விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; எசேக் 22:7யோபு 24:21யோபு 24:3ஏசா 10:2யோபு 31:21உபா 27:19யாத் 22:21-24எசேக் 30:22
தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; யோபு 13:21யோபு 18:8-10யோபு 6:41 தெச 5:3நீதி 1:27சங் 11:6யோபு 19:6நீதி 3:25-26
திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, புலம் 3:54சங் 69:1-2யோனா 2:3யோபு 18:18யோபு 18:6யோபு 19:8யோபு 38:34யோபு 5:14
பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? பிரச 5:2ஏசா 66:1யோபு 11:8சங் 8:3-4ஏசா 57:15சங் 115:3சங் 115:16
நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
நீர்: தேவன் எப்படி அறிவார், எசேக் 8:12சங் 10:11எசேக் 9:9சங் 73:11ஏசா 29:15சங் 59:7சங் 94:7-9சங் 64:5
இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; சங் 97:2சங் 139:11-12சங் 33:14எரே 23:24யோபு 26:9யோபு 34:22லூக் 12:2-3சங் 139:1-2
வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? லூக் 17:26-27ஆதி 6:11-13ஆதி 6:5
காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; யோபு 15:32ஆதி 7:17-241 பேது 3:19-202 பேது 2:5ஆதி 7:11மத் 24:37-39சங் 55:23பிரச 7:17
அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், யோபு 21:14-15சங் 4:6ரோம 1:28ஏசா 30:11யோபு 21:10மல்கி 3:14மத் 8:29மத் 8:34
அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும்,
சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. யோபு 21:16யோபு 12:61 சாமு 2:7அப் 14:17எரே 12:2சங் 17:14சங் 1:1அப் 15:16
எங்கள் நிலைமை அழியாமல், சங் 58:10சங் 107:42சங் 52:6யோபு 9:23நீதி 11:10சங் 48:11சங் 97:8வெளி 18:20
அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். 2 பேது 2:6-7ஆதி 19:24யோபு 1:16யோபு 20:26யோபு 15:30யோபு 15:5-6யோபு 20:18-19யோபு 21:27-28
நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; 1 நாளாக 28:9ஏசா 27:5பிலி 4:7சங் 34:10எபே 2:14-172 கொரி 5:20அப் 10:36யோவா 17:3
அதினால் உமக்கு நன்மைவரும்.
அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, சங் 119:11யோபு 23:12உபா 4:1-2உபா 6:6-9எரே 15:16நீதி 4:21நீதி 4:4லூக் 2:19
அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், யோபு 11:13-14சகரி 1:3யோபு 8:5-6ஏசா 55:6-7ஓசி 14:1-22 தீமோ 2:19அப் 26:20யோசு 7:13-16
திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், 1 இராஜா 9:28ஏசா 13:121 இராஜா 10:211 இராஜா 22:482 நாளாக 1:52 நாளாக 9:102 நாளாக 9:27ஆதி 10:29
ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். ஏசா 33:6சங் 16:5-6ஆதி 15:1சங் 18:2சங் 84:11ஏசா 41:10யாக் 2:52 கொரி 6:10
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். ஏசா 58:14சங் 37:4யோபு 27:10யோபு 11:15ரோம 7:22சங் 86:41 யோவா 3:20-21சங் 143:8
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; ஏசா 58:91 யோவா 5:14-15சங் 116:1சங் 91:15சங் 50:14-15யோபு 33:26சங் 66:17-20பிரச 5:4
அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; மத் 21:22சங் 90:17சங் 20:4ஏசா 30:21நீதி 4:18யோவா 8:12புலம் 3:37மல்கி 4:2
உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, யாக் 4:6யோபு 5:19-271 பேது 5:5லூக் 1:52மத் 23:12சங் 91:14-16ஏசா 66:2லூக் 18:9-14
தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; யோபு 42:7-8யாக் 5:15-16ஆதி 18:26-32சங் 18:20அப் 27:24மல்கி 1:9மத் 17:19-20சங் 24:4
உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.