யோபு 8

Job 8
அத்தியாயம் 8

பில்தாதின் வார்த்தைகள்

அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: யோபு 2:11

“நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? யோபு 15:2யோபு 6:261 இராஜா 19:11யாத் 10:3யாத் 10:7யோபு 11:2-3யோபு 16:3யோபு 18:2

எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 2 நாளாக 19:7உபா 32:4ஆதி 18:25தானி 9:14எசேக் 33:20யோபு 34:10-12ரோம 3:4-6எசேக் 18:25

சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ?

உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் யோபு 1:5யோபு 1:18-19யோபு 5:4ஆதி 19:13-25யோபு 18:16-19ஆதி 13:13

அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

நீர் தேவனை ஏற்கனவே தேடி, யாக் 4:7-10எபி 3:7-8ஏசா 55:6-7யோபு 11:13மத் 7:7-82 நாளாக 33:12-13யோபு 5:8யோபு 22:21-30

சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து,

சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், ஏசா 51:9ஏசா 3:10யோபு 5:24நீதி 15:8சங் 7:6யோபு 16:17யோபு 4:6-7சங் 59:4-5

அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார்.

உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், யோபு 42:12-13மத் 13:31-32நீதி 19:20நீதி 4:18சகரி 4:10சகரி 14:7மத் 13:12உபா 8:16

உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, உபா 32:7உபா 4:32யோபு 15:18ரோம 15:41 கொரி 10:11ஏசா 38:19யோபு 12:12யோபு 15:10

அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; 1 நாளாக 29:15சங் 144:4யோபு 14:2சங் 102:11ஆதி 47:9யோபு 7:6சங் 39:5சங் 90:4

பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, நீதி 18:15மத் 12:35உபா 11:19உபா 6:7எபி 11:4எபி 12:1யோபு 12:7-8யோபு 32:7

தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?

சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? யாத் 2:3ஏசா 19:5-7

தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?

அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, எரே 17:61 பேது 1:24யாக் 1:10-11மத் 13:20சங் 129:6-7

அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ?

தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; சங் 9:17யோபு 11:20யோபு 13:16யோபு 15:34நீதி 10:28உபா 8:11உபா 8:19யோபு 20:5

மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.

அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், ஏசா 59:5-6

அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும்.

ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், யோபு 27:18லூக் 6:47-49மத் 7:24-27யோபு 18:14நீதி 10:28சங் 112:10சங் 49:11சங் 52:5-7

அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.

வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, சங் 80:11எரே 11:16யோபு 21:7-15யோபு 5:3சங் 37:35-36சங் 73:3-12

அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;

அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, ஏசா 40:24ஏசா 5:24எரே 12:1-2யோபு 18:16யோபு 29:19யூதா 1:12மாற் 11:20

கற்பாறையை நாடும்.

அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், யோபு 7:10யோபு 7:8சங் 37:36யோபு 20:9சங் 37:10சங் 73:18-19சங் 92:7

அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும்.

இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; யோபு 20:51 சாமு 2:8சங் 113:7எசேக் 17:24மத் 13:20-21மத் 3:9சங் 75:7

ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.

இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, யோபு 4:7சங் 37:37சங் 37:24ஏசா 45:1சங் 94:14யோபு 21:30யோபு 9:22

பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், சங் 126:2ஆதி 21:6சங் 126:6சங் 32:11லூக் 6:21எஸ்றா 3:11-13ஏசா 65:13-14யோபு 5:22

உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; சங் 132:18சங் 109:29சங் 35:26யோபு 18:14யோபு 8:18யோபு 7:211 பேது 5:5

துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.