இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல்.
பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? சங் 103:17சங் 107:1சங் 94:41 சாமு 21:7ஏசா 59:4நீதி 6:14ஆதி 10:8-9சங் 137:1-2
தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது.
நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், நீதி 18:21நீதி 6:16-19நீதி 12:18சங் 57:4எரே 9:3-4சங் 59:72 கொரி 11:132 கொரி 4:2
கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
நன்மையைவிட தீமையையும், எரே 9:3-5யோவா 8:442 தீமோ 3:4மீகா 3:2வெளி 22:15எரே 4:22எரே 9:8ரோம 1:25
யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்; சங் 120:3யாக் 3:6-91 சாமு 22:18-19
தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; நீதி 2:22சங் 27:13வெளி 21:8ஏசா 38:11யோபு 18:14நீதி 12:19நீதி 19:9ஏசா 22:19
அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி,
நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)
நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து: யோபு 22:19சங் 40:3சங் 37:34வெளி 15:4வெளி 18:20ஏசா 37:22சங் 119:120சங் 58:10-11
இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், எரே 17:5பிரச 8:8சங் 49:6-20சங் 73:18-20யோவா 19:5யோபு 31:24-251 தீமோ 6:17ஓசி 12:7-8
தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி,
தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.
நானோ தேவனுடைய ஆலயத்தில் சங் 92:12-14ஓசி 14:6-8சங் 1:3சங் 13:5எரே 11:16சங் 147:11ரோம 11:24சங் 128:3
பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்,
தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, புலம் 3:25-26சங் 130:5-6சங் 73:28சங் 54:6நீதி 18:10சங் 62:5சங் 73:25-26எபே 3:20-21
உமது பெயருக்குக் காத்திருப்பேன்;
உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.