ஈசாக்கின் பிறப்பு
யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். சங் 12:6ஆதி 18:10ஆதி 18:14கலா 4:23ஆதி 17:191 சாமு 2:21மத் 24:35தீத் 1:2 ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கலா 4:22எபி 11:11அப் 7:8ஆதி 17:19ஆதி 17:21ஆதி 18:10ஆதி 18:14லூக் 1:24-25 அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். ஆதி 17:19ஆதி 21:6ரோம 9:7ஆதி 21:12எபி 11:18யோசு 24:3மத் 1:2அப் 7:8 தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான். அப் 7:8உபா 12:32யாத் 12:48ஆதி 17:10-12யோவா 7:22-23லேவி 12:3லூக் 1:59லூக் 1:6 தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் 100 வயதாயிருந்தான். ஆதி 17:17ஆதி 17:1ரோம 4:19 அப்பொழுது சாராள்: “தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.” சங் 126:2ஏசா 54:1ஆதி 17:17லூக் 1:58கலா 4:27-28ஏசா 49:21லூக் 1:14லூக் 1:46-55 “சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள். ஆதி 18:11-12ஏசா 66:82 தெச 1:10உபா 4:32-34எபே 3:10எண் 23:23சங் 86:10சங் 86:8
ஆகாரும் இஸ்மவேலும் வெளியேற்றப்படுதல்
குழந்தை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்தான். 1 சாமு 1:22ஓசி 1:81 இராஜா 3:152 சாமு 3:20ஆதி 19:3ஆதி 26:30ஆதி 29:22ஆதி 40:20 பின்பு எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் கேலி செய்கிறதை சாராள் கண்டு, கலா 4:29ஆதி 16:15கலா 4:22ஆதி 16:12 நாளாக 30:102 நாளாக 36:16புலம் 1:7நீதி 20:11 ஆபிரகாமை நோக்கி: “இந்த அடிமைப்பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகனாகிய ஈசாக்கோடு வாரிசாக இருப்பதில்லை” என்றாள். யோவா 8:351 யோவா 2:19கலா 4:22-311 பேது 1:4ஆதி 36:6-7கலா 3:18கலா 4:7ஆதி 25:19 தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. எபி 12:11ஆதி 17:18மத் 10:372 சாமு 18:33ஆதி 22:1-2 அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: “அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். எபி 11:18ரோம 9:7-8ஆதி 17:191 சாமு 8:71 சாமு 8:9ஆதி 17:21ஏசா 46:10 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன்” என்றார். ஆதி 16:10ஆதி 17:20ஆதி 21:18ஆதி 25:12-18 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள். 1 இராஜா 19:3பிரச 9:10ஆதி 16:7ஆதி 21:31ஆதி 25:6ஆதி 26:31யோவா 8:35நீதி 27:14 தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு, 2இராஜா 3:9யாத் 15:22-25எரே 14:3சங் 63:1யாத் 17:1-3ஆதி 21:14ஏசா 44:12 “சிறுவன் தாகத்தினால் சாகிறதை நான் பார்க்கமாட்டேன்” என்று, அவனைவிட்டு அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். ஏசா 49:151 இராஜா 3:261 சாமு 24:161 சாமு 30:4எஸ்த 8:6ஆதி 29:11நியாயாதி 2:4ரூத் 1:9 தேவன் சிறுவனின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, சிறுவன் இருக்கும் இடத்தில் தேவன் அவனுடைய சத்தத்தைக் கேட்டார். ஆதி 16:11சங் 50:15யாத் 3:7சங் 91:151 சாமு 11:52இராஜா 13:232இராஜா 13:4யாத் 14:13 நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார். ஆதி 21:13ஆதி 16:101 நாளாக 1:29-31ஆதி 17:20ஆதி 25:12-18 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். எண் 22:312இராஜா 6:17-20ஏசா 35:5-6லூக் 24:16-31 தேவன் சிறுவனுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்திரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான். ஆதி 28:15ஆதி 39:21ஆதி 16:12ஆதி 10:9ஆதி 17:20ஆதி 25:27ஆதி 39:2-3ஆதி 49:23-24 அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள். 1 கொரி 7:381 சாமு 25:1ஆதி 24:3-4ஆதி 26:34-35ஆதி 27:46நியாயாதி 14:2எண் 10:12எண் 12:16
பெயர்செபாவில் ஒப்பந்தம்
அந்தகாலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ஆதி 26:26ஆதி 26:28யோசு 3:7ஆதி 20:21 கொரி 14:25ஏசா 8:10ரோம 8:31எபி 13:5 ஆகையால், நீ எனக்காவது, என் மகனுக்காவது, பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான். யோசு 2:12ஆதி 20:141 சாமு 20:131 சாமு 20:171 சாமு 20:421 சாமு 24:21-221 சாமு 30:152 கொரி 1:23 அதற்கு ஆபிரகாம்: “நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன்” என்றான். ஆதி 14:13எபி 6:16ரோம 12:18 ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான். ஆதி 26:15-22யாத் 2:15-17ஆதி 13:7ஆதி 29:8நியாயாதி 1:15மத் 18:15நீதி 17:10நீதி 25:9 அதற்கு அபிமெலேக்கு: “இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்குத் தெரிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதைத்தவிர, இதற்குமுன் அதை நான் கேள்விப்படவே இல்லை” என்றான். 2இராஜா 5:20-24ஆதி 13:7 அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். 1 சாமு 18:3எசேக் 17:13கலா 3:15ஆதி 14:22-23ஆதி 26:28-31ஆதி 31:44ஏசா 32:8நீதி 17:8 ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு?” என்று கேட்டான். யாத் 12:26ஆதி 33:81 சாமு 15:14 அதற்கு அவன்: “நான் இந்தக் கிணறு தோண்டியதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். ஆதி 31:52ஆதி 31:44-48யோசு 22:27-28யோசு 24:27 அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா 1 எனப்பட்டது. ஆதி 26:33ஆதி 21:141 இராஜா 4:252 சாமு 17:11ஆதி 26:23நியாயாதி 20:1யோசு 15:28 அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்துகொண்டபின்பு அபிமெலேக்கும், அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். 1 சாமு 18:3யாத் 13:17ஆதி 10:14ஆதி 14:13ஆதி 21:27ஆதி 26:14ஆதி 26:8ஆதி 31:53 ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான். 1 தீமோ 1:17ஏசா 40:28சங் 90:2எரே 10:10ரோம 16:26உபா 33:27ஆதி 12:8ஆதி 4:26 ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான். 1 நாளாக 29:151 பேது 2:11ஆதி 20:1எபி 11:13எபி 11:9சங் 39:12