யோர்தானைக் கடந்துபோகுதல்
அதிகாலையிலே யோசுவா எழுந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சித்தீமிலிருந்து பயணம்செய்து, யோர்தான்வரைக்கும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இரவு தங்கினார்கள். யோசு 2:1மாற் 1:35ஆதி 22:3எரே 25:3எரே 26:5எரே 7:13மீகா 6:5எண் 25:1 மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய், யோசு 1:10-11 மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள். உபா 31:92 சாமு 6:13உபா 31:25யாத் 13:21-22யோசு 3:8எண் 10:331 நாளாக 15:11-122 சாமு 6:3 உங்களுக்கும் அதற்கும் 3,000 அடிகள் தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். சங் 89:7யாத் 3:5எபி 12:28-291 நாளாக 11:2யாத் 19:12யாத் 4:10ஆதி 31:2ஏசா 30:33 யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் யெகோவா உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். யோசு 7:13லேவி 20:71 சாமு 16:5யோவே 2:16யோவா 17:19யாத் 19:10-15லேவி 10:3சங் 86:10 பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள். யோவா 14:2-3யோசு 3:3மீகா 2:13எண் 10:33எண் 14:15எபி 6:20 யெகோவா யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். யோசு 4:14யோசு 1:51 நாளாக 29:252 நாளாக 1:1சங் 18:35பிலி 2:9-11யோவா 17:1யோபு 7:17 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தான் நதியில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். யோசு 3:17யோசு 3:31 நாளாக 15:11-122 நாளாக 17:8-92 நாளாக 29:152 நாளாக 29:272 நாளாக 29:302 நாளாக 29:4-11 யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய யெகோவாடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். உபா 4:1உபா 12:8 பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: உபா 7:1யாத் 33:2சங் 44:2-3எபி 10:311 சாமு 17:262இராஜா 19:4உபா 31:17யாத் 23:27-30 இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. சகரி 6:5சங் 24:1சகரி 4:14யோசு 3:13மீகா 4:13ஏசா 3:12ஏசா 54:5எரே 10:7 இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். யோசு 4:2யோசு 4:4யோசு 4:9 சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். யாத் 15:8சங் 78:13யோசு 3:11யோசு 3:15-16யாத் 14:19-22ஆப 3:15சங் 114:3-5சங் 33:7 மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள். அப் 7:44-451 கொரி 1:24-25உபா 31:26எபி 9:4எரே 3:16யோசு 3:3யோசு 3:6யோசு 6:6 யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, 1 நாளாக 12:15எரே 12:5எரே 49:19யோசு 3:13யோசு 4:18உபா 16:1-9ஏசா 26:6யோசு 5:10-12 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். யோசு 3:131 இராஜா 4:121 இராஜா 7:46ஆதி 14:3உபா 1:1எண் 34:3சங் 114:3உபா 3:17 எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள். யாத் 14:22யாத் 14:29சங் 66:6ஏசா 25:82இராஜா 2:8யோசு 4:3எபி 11:29