ஆதியாகமம் 4

Genesis 4
அத்தியாயம் 4

காயீனும் ஆபேலும்

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். 1 யோவா 3:12ஆதி 3:15ஆதி 4:25ஆதி 5:29எண் 31:17 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். 1 யோவா 3:121 யோவா 3:15லூக் 11:511 யோவா 3:10ஆதி 47:3யோவா 8:44யாத் 3:1சங் 78:70-72 சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். எண் 18:12லேவி 2:1-111 இராஜா 17:7நெகே 13:6 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். எபி 11:4நீதி 3:9யாத் 13:12எண் 18:171 பேது 1:19-202 நாளாக 7:1எபி 9:22லேவி 3:16-17 காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது. எபி 11:4யோபு 5:2அப் 13:45ஏசா 3:10-11லூக் 15:28-30மத் 20:15சங் 20:3ஆதி 31:2 அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது? ஏசா 1:18யோபு 5:2லூக் 15:31-32எரே 2:31மத் 20:15மீகா 6:3-5எரே 2:5யோவா 4:8-11 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார். யாக் 1:15ரோம 2:6-10ஏசா 3:10-11ரோம 6:16எபி 11:4எண் 32:23ரோம 12:1ரோம 7:8-9 காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான். 1 மத் 23:351 யோவா 3:12-15யூதா 1:11நீதி 26:24-26லூக் 11:512 சாமு 14:6எபி 12:24சங் 24:3-6 யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான். நீதி 28:13யோவா 8:44சங் 9:12சங் 10:13-14அப் 5:4-9ஆதி 37:32ஆதி 3:9-11யோபு 22:13-14 அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. எபி 12:24எபி 11:4சங் 72:14ஏசா 5:7யாக் 5:4சங் 9:12எண் 35:33வெளி 6:9-10 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். கலா 3:10யோபு 16:18உபா 28:15-20ஆதி 3:14உபா 27:16-26உபா 29:19-21ஆதி 4:14ஏசா 26:21 நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார். ஓசி 9:17லேவி 26:20லேவி 26:36உபா 28:23-24உபா 28:65-66ஆதி 3:17-18ஆதி 4:14எரே 20:3-4 அப்பொழுது காயீன் யெகோவாவை நோக்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது. யோபு 15:22வெளி 16:9வெளி 16:11வெளி 16:21 இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான். எண் 35:19யோபு 15:20-24சங் 143:72 தெச 1:9உபா 28:65நீதி 28:1ஆதி 4:15-16ஆதி 9:5-6 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க யெகோவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். எசேக் 9:4சங் 79:12எசேக் 9:6ஆதி 4:24வெளி 14:11வெளி 14:91 இராஜா 16:7ஓசி 1:4 அப்படியே காயீன் யெகோவாவுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் 2 என்னும் தேசத்தில் குடியிருந்தான். 2இராஜா 13:232இராஜா 24:20யாத் 20:18ஆதி 3:8ஆதி 4:14எரே 23:39எரே 52:3யோபு 2:7 காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான். தானி 4:30பிரச 2:4-11சங் 49:112 சாமு 18:18ஆதி 11:4ஆதி 5:18ஆதி 5:22லூக் 17:28-29 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான். ஆதி 36:2ஆதி 5:21 லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பெயர், மற்றொருவளுக்குச் சில்லாள் என்று பெயர். ஆதி 2:24ஆதி 2:18மத் 19:4-6மத் 19:8 ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். 1 நாளாக 2:50-521 நாளாக 4:4-5ஆதி 25:27ஆதி 4:2ஆதி 4:21எபி 11:9எரே 35:9-10யோவா 8:44 அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான். ஆமோ 6:5ஆதி 31:27ஏசா 5:12யோபு 21:12ரோம 4:11-12 சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். 2 நாளாக 2:7உபா 33:25உபா 8:9யாத் 25:3எண் 31:22 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: யாத் 20:13லேவி 19:18எண் 23:18நியாயாதி 9:7

“ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்;

லாமேக்கின் மனைவிகளே,

நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்;

எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்;

எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;

காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்” என்றான். மத் 18:22ஆதி 4:15

சேத்து.

பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். ஆதி 4:8லூக் 3:381 நாளாக 1:1ஆதி 4:1-3ஆதி 4:10-11ஆதி 5:3-4 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் யெகோவாவுடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள். சங் 116:171 இராஜா 18:24யோவே 2:32செப்ப 3:9ஆதி 12:8ஆதி 26:25எரே 33:16லூக் 3:38