ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்? ஏசா 51:2ரோம 4:162 கொரி 11:22அப் 13:26யோவா 8:56லூக் 3:8மத் 3:9ரோம 7:7 ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது. 1 கொரி 1:312 கொரி 11:30பிலி 3:9எபே 2:9கலா 3:221 கொரி 1:291 கொரி 9:162 கொரி 12:1-9 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது. ஆதி 15:6யாக் 2:23கலா 3:6-8ரோம 4:9ரோம 4:22-25ரோம 4:5சங் 106:31ரோம 4:11 வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும். ரோம 11:6ரோம 9:32ரோம 11:35மத் 20:1-16 ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். பிலி 3:9ரோம 3:22தீத் 3:3-7ரோம 10:9-10கலா 3:8-14ரோம 10:3கலா 2:16-171 கொரி 6:9-11 அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக: 2 தீமோ 1:9எபே 2:8-10பிலி 3:9கலா 3:8-91 கொரி 1:302 கொரி 5:21ஏசா 45:24-25ரோம 3:20-22
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, சங் 32:1-2சங் 130:3-4லூக் 7:47-50மீகா 7:18-20சங் 85:2ஏசா 40:1-2சங் 51:8-9எரே 33:8-9
எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான். சங் 32:21 பேது 2:242 கொரி 5:19-201 பேது 3:18ஏசா 53:10-12பிலே 1:18-19
இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே. கலா 3:14கொலோ 3:11எபே 3:8கலா 3:26-28ரோம 4:3எபே 2:11-13ரோம 10:12-13ரோம 15:8-19 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே. கலா 6:15கலா 5:61 கொரி 7:18-19ஆதி 15:16ஆதி 15:5-6ஆதி 16:1-3ஆதி 17:1ஆதி 17:10 மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும், லூக் 19:9ரோம 3:222 கொரி 1:22எபி 11:7எபே 1:13எபே 4:30கலா 3:22கலா 3:29 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான். யோவா 8:39-40நீதி 2:20உன்னத 1:81 பேது 2:212 கொரி 12:18கலா 4:22-31யோபு 33:11லூக் 16:23-31 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. கலா 3:29ஆதி 28:14ஆதி 22:17-18ரோம 9:8சங் 2:8ஆதி 17:4-6கலா 3:16-18ஆதி 17:16 நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும். கலா 3:18-24எபி 7:19பிலி 3:9கலா 2:21எபி 7:28ஏசா 55:11ரோம 3:31ரோம 4:16 மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை. ரோம 5:13கலா 3:101 கொரி 15:56ரோம 3:19-20ரோம 7:7-25கலா 3:19யோவா 3:361 யோவா 3:4 எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது. ரோம 3:24-26எபே 2:8ரோம 9:8கலா 3:22தீத் 3:7எபே 2:5ஏசா 51:2ரோம 15:8 “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான். 1 கொரி 1:28ஆதி 17:4-5யோவா 5:21ரோம 8:29-30யோவா 6:631 பேது 2:10எபே 2:1-5ரோம 8:11 “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான். ரோம 8:24ஆதி 15:5-6ரோம 5:5அப் 27:25மாற் 5:35-36நீதி 13:12எசேக் 37:11ரோம 4:17 அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான். எபி 11:11-19ஆதி 17:17ரோம 4:20-21ஆதி 18:11-14யோவா 20:27-28மத் 14:31மத் 6:30மத் 8:26 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல், லூக் 1:451 கொரி 16:132 கொரி 12:10தானி 10:192 தீமோ 2:1ஏசா 35:4ஏசா 7:92 நாளாக 20:15-20 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான். லூக் 1:37எரே 32:27எபி 11:19எரே 32:17லூக் 1:45ஆதி 18:142 தீமோ 1:12மத் 19:26 எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ரோம 4:3ரோம 4:6 “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 1 கொரி 10:11ரோம 15:41 கொரி 10:62 தீமோ 3:16-171 கொரி 9:9-10 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அப் 2:241 பேது 1:21அப் 13:30ரோம 10:9-10அப் 2:39எபே 1:18-20எபி 13:20-21யோவா 3:14-16 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். 1 யோவா 4:9-10ஏசா 53:5-61 பேது 2:241 பேது 3:182 கொரி 5:21கலா 1:41 யோவா 2:2எபே 5:2