விசுவாசமும் நியாயப்பிரமாணமும்
புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. கலா 5:7-82 கொரி 11:3கலா 1:6வெளி 2:201 பேது 4:17கலா 3:3கலா 4:9எபி 11:8 ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்? ரோம 10:16-17கலா 3:14அப் 15:8எபே 1:13-14கலா 3:5அப் 8:15எபி 2:4அப் 19:2-6 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா? கலா 5:4-8கலா 4:7-10எபி 7:16-19எபி 9:9-10கலா 6:12-14எபி 9:2 இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே. 2 யோவா 1:81 கொரி 15:2எபி 10:32-392 பேது 2:20-22எசேக் 18:24எபி 6:4-6 அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்? கலா 3:2அப் 14:9-10அப் 19:11-12அப் 14:31 கொரி 1:4-52 கொரி 13:32 கொரி 10:42 கொரி 12:12 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது. ஆதி 15:6ரோம 4:21-22யாக் 2:23ரோம 4:3-6ரோம 4:24ரோம 4:9-11கலா 3:9ரோம 9:32-33 ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். கலா 3:9ரோம 9:7-8கலா 3:26-29சங் 100:3ரோம 4:24யோவா 8:39லூக் 19:9ரோம 4:11-16 மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது. ஆதி 12:3ஆதி 22:18ஆதி 28:14ஆதி 18:18ஆதி 26:4எபி 4:2ரோம 3:28-30கலா 3:22 அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கலா 3:29ரோம 4:16கலா 4:28ரோம 4:24ரோம 4:11கலா 3:14கலா 3:7-8 நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. உபா 27:26ரோம 8:7ரோம 3:19-20உபா 11:26-28யாக் 2:9-11எரே 11:3ரோம 4:15கலா 2:16 நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. ஆப 2:4ரோம 1:17எபி 10:38கலா 2:16பிரச 7:20சங் 130:3-4ஏசா 53:6யோபு 42:6 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான். லேவி 18:5ரோம 10:5-6நெகே 9:29ரோம 4:14எசேக் 20:11லூக் 10:25-28ரோம 4:16ரோம 4:4-5 மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார். 1 பேது 2:24உபா 21:23எபி 9:12எபி 9:151 பேது 1:18-21எபி 10:4-10வெளி 5:9கலா 4:5 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது. கலா 3:28-291 கொரி 12:13எபே 2:18எசேக் 36:26-27கலா 3:2எசேக் 11:19அப் 2:33ரோம 8:26-27
நியாயப்பிரமாணமும் வாக்குத்தத்தமும்
சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதுமில்லை. எபி 9:17ரோம 6:19ரோம 3:51 கொரி 15:32 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே. ஆதி 17:7-8ரோம 4:13லூக் 1:55ஆதி 22:17-18கலா 3:27-29ரோம 4:16ஆதி 12:7ஆதி 26:3-4 ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்காது. யாத் 12:40-41ஆதி 15:13எபி 11:39-40ரோம 4:13-142 கொரி 1:20எபி 6:13-18ரோம 3:31 கொரி 1:17 அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. ரோம 4:13-16கலா 2:21எபி 6:12-15சங் 105:42கலா 3:29லூக் 1:54-55லூக் 1:72-73சங் 105:6-12 அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது. அப் 7:53ரோம 7:7-13எபி 2:2கலா 3:161 தீமோ 1:8-9ரோம 5:20-21ரோம 4:15ரோம 3:19-20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே. 1 தீமோ 2:5உபா 6:4எபி 8:6எபி 9:15யோபு 9:33எபி 12:24ரோம 3:29-30கலா 3:17 அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. கலா 2:21ரோம 9:31ரோம 3:20-22கலா 2:19ரோம 10:3-6கலா 2:17ரோம 3:31ரோம 7:7-13 அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. ரோம 11:32எபி 9:15யோவா 11:25-26கலா 3:231 யோவா 2:25யோவா 3:361 யோவா 3:23-24ரோம 3:9-20 ஆகவே, விசுவாசம் வருகிறதற்கு முன்பே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். கலா 5:18கலா 3:24-25கலா 3:19ரோம 11:32ரோம 6:14-15ரோம 3:191 பேது 1:11-12கலா 4:1-5 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது. ரோம 10:4அப் 13:38-39எபி 10:1-14ரோம 7:24-25கலா 2:16மத் 5:17-18கொலோ 2:17கலா 2:19 விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே. ரோம 6:14ரோம 7:4எபி 10:15-18எபி 7:11-19எபி 8:3-13கலா 4:1-6
தேவனுடைய பிள்ளைகள்
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே. எபே 1:52 கொரி 6:18யோவா 1:12-13கலா 4:5-61 யோவா 3:1-2ரோம 8:14-17பிலி 2:15வெளி 21:7 ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே. ரோம 13:141 கொரி 12:13ரோம 6:3-41 பேது 3:21எபே 4:24கொலோ 3:10அப் 2:38கொலோ 2:10-12 யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள். 1 கொரி 12:12-13கொலோ 3:11ரோம 3:29-30கலா 5:6ரோம 10:12-15யோவா 10:16எபே 2:13-22எபே 4:4 நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள். எபே 3:6ரோம 9:7-8கலா 3:7ரோம 8:17கலா 4:22-31ரோம 4:16-21கலா 4:7தீத் 3:7