செப்பனியா 3

Zephaniah 3
அத்தியாயம் 3

எருசலேமின் துன்மார்க்கம்

கலகம் செய்கிறதும், கந்தையும், அழுக்குமாயிருக்கிற நகரத்திற்கு ஐயோ, எரே 6:6ஏசா 30:12ஏசா 59:13எசேக் 22:7மல்கி 3:5சகரி 7:10ஏசா 5:7எரே 22:17 அது சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது யெகோவாவை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை. எரே 22:21எரே 5:3எரே 7:23-28சங் 73:28சங் 78:22உபா 28:15-68ஏசா 29:13ஏசா 43:22 அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் மாலையில் புறப்படுகிறதும் விடியற்காலம்வரை ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். ஆப 1:8எசேக் 22:25-27எரே 5:6எசேக் 22:6ஏசா 1:23எரே 22:17யோபு 4:8-11மீகா 3:1-4 அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்திற்குத் துரோகம்செய்தார்கள். எசேக் 22:26ஓசி 9:7புலம் 2:14மல்கி 2:8ஏசா 56:10-12ஏசா 9:15எரே 23:25-27எரே 5:31 அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது. உபா 32:4புலம் 3:23சங் 145:17செப்ப 3:15உபா 23:14ஏசா 12:6ஏசா 28:19செப்ப 3:17 தேசங்களை அழித்தேன்; அவர்கள் கோட்டைகள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனிதர்கள் குடியில்லாமல்போய் வெறுமையாயின. 1 கொரி 10:6செப்ப 2:51 கொரி 10:11ஏசா 37:24-26எரே 25:9-11ஏசா 10:1-34ஏசா 15:1-9ஏசா 19:1-25 உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள். ஓசி 9:9எரே 36:3எரே 25:5எரே 7:7மீகா 2:1-2செப்ப 3:22 நாளாக 28:6-82 நாளாக 32:1-2 ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும். யோவே 3:2செப்ப 1:18மீகா 7:7சங் 27:142 பேது 3:10சகரி 14:2-3ஆப 2:3ஓசி 12:6 அப்பொழுது மக்களெல்லோரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்களுடைய மொழியை செம்மையான மொழியாக மாறச்செய்வேன். ஆதி 11:1ஏசா 19:18சங் 22:27சங் 86:9-10சகரி 2:11அப் 2:4-13ஆப 2:14சகரி 8:20-23 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு மறுகரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்செய்கிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் மகளானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். ஏசா 11:11சங் 68:31ஏசா 18:11 பேது 1:1ரோம 15:16அப் 24:17அப் 8:27ஏசா 18:7 எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, நீ செய்த உன் எல்லாச் செயல்களினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் தங்கள் பெருமையைக்குறித்து மகிழ்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த மலையில் அகங்காரங்கொள்ளமாட்டாய். ஏசா 54:4ஏசா 11:9யோவே 2:26-27ஏசா 61:71 பேது 2:6தானி 9:16ஏசா 45:17எரே 7:4 உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான மக்களை மீதியாக வைப்பேன்; அவர்கள் யெகோவாவுடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். ஏசா 14:32நாகூ 1:7ஏசா 61:1-3சகரி 13:8-9ஏசா 50:10மத் 5:3யாக் 2:51 கொரி 1:27-28 இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயம்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் சாப்பிட்டுப் படுத்துக்கொள்வார்கள். வெளி 14:5ஏசா 60:21மீகா 4:7செப்ப 2:7எசேக் 34:13-15மீகா 4:4ஏசா 17:2யோவா 1:47

மகிழ்ச்சி

மகளாகிய சீயோனே 1, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய 2எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. ஏசா 12:6மீகா 4:8சகரி 2:10-11ஏசா 65:18-19சங் 95:1-2சகரி 9:9-10ஏசா 24:14-16ஏசா 35:2 யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். ஏசா 51:22ஏசா 60:18ஆமோ 9:15செப்ப 3:5எசேக் 39:29ஆதி 30:23ஏசா 40:1-2எசேக் 37:24-28 அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். எபி 12:12ஏசா 35:3-4ஏசா 41:10எபே 3:13கலா 6:92 கொரி 4:1ஏசா 44:2வெளி 2:3 உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்; 3 அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார். சங் 149:4சங் 147:11எபி 7:25ஏசா 62:4-5எரே 32:41ஏசா 12:2செப்ப 3:15உபா 30:9 உன் சபையின் மனிதர்களாயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாகக் கூட்டிக்கொள்ளுவேன். சங் 42:2-4எசேக் 36:24எரே 23:3எரே 31:8-9புலம் 1:4புலம் 2:6-7செப்ப 3:20எசேக் 34:13 இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின அனைவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த எல்லா தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன். ஏசா 49:25-26ஏசா 60:14எரே 30:16செப்ப 3:15மீகா 7:10ஏசா 61:7எசேக் 34:16மீகா 4:6-7 அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல மக்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். மல்கி 3:12எரே 29:14ஏசா 56:5ஏசா 60:15ஆமோ 9:14யோவே 3:1எசேக் 34:16ஏசா 66:22