சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்துதல்
இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான். 2இராஜா 18:13-372 நாளாக 20:1-22இராஜா 15:192இராஜா 17:62இராஜா 18:11ஓசி 11:5ஏசா 10:5-11ஏசா 36:1 சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது, 2இராஜா 12:17லூக் 9:51லூக் 9:53 நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள். நீதி 15:22நீதி 20:18நீதி 24:62 நாளாக 30:22இராஜா 18:202இராஜா 20:20ஏசா 22:8-11ஏசா 40:13 அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி, அநேகம் மக்கள் கூடி, அனைத்து ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் அடைத்துப்போட்டார்கள். 2 நாளாக 32:301 இராஜா 19:211 இராஜா 3:16-171 இராஜா 3:92 நாளாக 30:142 நாளாக 32:12இராஜா 18:132இராஜா 18:9 அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதில்களையும் கோபுரங்கள் வரை உயர்த்தி, தாவீதின் நகரத்தினுடைய கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்செய்து, 2 நாளாக 25:231 இராஜா 9:242இராஜா 25:42 சாமு 5:9ஏசா 22:9-101 இராஜா 11:272 நாளாக 12:12 நாளாக 14:5-7 மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 2 நாளாக 30:22ஏசா 40:22 நாளாக 17:14-19எஸ்றா 10:9ஆதி 34:3நெகே 8:161 நாளாக 27:3-34நெகே 8:1-3 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம். 2இராஜா 6:16ரோம 8:31எபே 6:101 யோவா 4:42 நாளாக 20:152இராஜா 18:301 நாளாக 28:20தானி 10:19 அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள். எரே 17:52 நாளாக 20:172 தீமோ 4:17அப் 18:102 நாளாக 20:15ஏசா 41:101 யோவா 4:4சங் 46:11
இதன்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழு படையுடன் லாகீசுக்கு எதிராக முற்றுகை போட்டிருக்கும்போது, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்திற்கும், எருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடத்திற்கும் தன் வேலைக்காரர்களை அனுப்பி: 2இராஜா 18:17யோசு 10:31ஏசா 36:2ஏசா 37:8யோசு 12:11யோசு 15:39மீகா 1:13 அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றுகை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் எதன்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்? 2இராஜா 18:19ஏசா 36:4 நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தாலும் சாகும்படி உங்களுக்குப் போதிக்கிறான் அல்லவா? 2 நாளாக 32:152இராஜா 18:272இராஜா 18:302இராஜா 19:10ஏசா 36:12ஏசா 36:18மத் 27:43சங் 11:1-3 அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியர்களுக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா? 2 நாளாக 31:11 இராஜா 7:482 நாளாக 4:12இராஜா 18:222இராஜா 18:4உபா 12:13-14உபா 12:26-27யாத் 27:1-8 நானும் என் முன்னோர்களும் தேசத்து சகல மக்களுக்கும் செய்ததை அறியவில்லையா? அந்த தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ? 2இராஜா 18:33-351 கொரி 8:42 நாளாக 32:192இராஜா 15:292இராஜா 17:5-62இராஜா 19:11-132இராஜா 19:17-19தானி 4:30 என் முன்னோர்கள் பாழாக்கின அந்த மக்களுடைய அனைத்து தெய்வங்களிலும் எவன் தன் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? அப்படியிருக்க, உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கமுடியுமா? யாத் 14:3யாத் 15:9-11ஏசா 10:11-12ஏசா 42:8 இப்போதும் எசேக்கியா உங்களை ஏமாற்றவும், இப்படி உங்களுக்கு போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த மக்களின் தெய்வமும், எந்த ராஜ்யத்தின் தெய்வமும் தன் மக்களை என் கைக்கும் என் முன்னோர்களின் கைக்கும் தப்புவிக்க முடியாமல் இருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, தானி 3:15யாத் 5:2ஏசா 36:181 இராஜா 22:222 நாளாக 32:112இராஜா 18:292இராஜா 19:10அப் 19:26 அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள். யோவா 15:21யோபு 15:25-26சங் 73:9 தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான். 2இராஜா 19:12ஏசா 37:14ஏசா 37:28-292இராஜா 19:142இராஜா 19:222இராஜா 19:282இராஜா 19:9ஏசா 10:15 அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு, 1 சாமு 17:101 சாமு 17:262இராஜா 18:26-28ஏசா 36:13நெகே 6:9 மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள். 2இராஜா 19:18ஏசா 2:81 சாமு 17:362 நாளாக 32:13-172 நாளாக 6:6உபா 27:15உபா 4:28எபி 12:22 இதனால் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தனை செய்து, வானத்தை நோக்கி முறையிட்டார்கள். சங் 91:14-152 நாளாக 14:112இராஜா 19:2-42 நாளாக 20:6-12ஏசா 37:14-202இராஜா 19:14-19ஏசா 37:1-4சங் 50:15 அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள். ஏசா 37:36-38சங் 76:52இராஜா 19:202இராஜா 19:35-372 சாமு 24:16அப் 12:23தானி 6:22ஏசா 10:16-19 இப்படிக் யெகோவா எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார். ஏசா 31:4-52 தெச 3:5ஓசி 1:7யோவா 16:13சங் 144:10சங் 18:48-50சங் 37:39-40ஏசா 10:24-25 அநேகம்பேர் யெகோவாக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிறகு சகல மக்களின் பார்வைக்கும் மதிக்கப்பட்டவனாயிருந்தான். 2 நாளாக 17:52 நாளாக 1:12 நாளாக 9:24மத் 2:111 நாளாக 29:251 இராஜா 10:101 இராஜா 10:251 இராஜா 4:21
எசேக்கியாவின் பெருமை மற்றும் அவனுடைய வெற்றியும் மரணமும்
அந்த நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணமடையும்தருவாயில் இருந்தான்; அவன் யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்செய்து, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார். 2இராஜா 20:1-11ஏசா 38:1-8ஏசா 38:21-22 எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது. 2 நாளாக 24:182 நாளாக 26:162 நாளாக 32:312 சாமு 24:11 நாளாக 21:12-172இராஜா 14:10உபா 8:171 நாளாக 21:1 எசேக்கியாவின் மனமேட்டிமையினினால் அவனும் எருசலேமின் மக்களும் தங்களைத் தாழ்த்தினதால், யெகோவாவுடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை. எரே 26:18-192 நாளாக 33:122 நாளாக 34:27-28யாக் 4:101 இராஜா 21:191 இராஜா 21:292 நாளாக 33:192 நாளாக 33:23 எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் 1 வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும், 1 நாளாக 27:25-312 நாளாக 1:122 நாளாக 17:52 நாளாக 9:27நீதி 10:22 தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சைரசமும் எண்ணெயும் வைக்கும்படியான சேமிப்பு அறைகளையும், அனைத்துவிதமான மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான். 1 இராஜா 4:262 நாளாக 26:102 சாமு 7:8 அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டி ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான செல்வத்தைக் கொடுத்தார். 1 நாளாக 29:121 நாளாக 27:29-311 சாமு 2:71 தீமோ 6:17-182 நாளாக 25:92 நாளாக 26:10உபா 8:18ஆதி 13:2-6 இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து கீழே தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது. 1 இராஜா 1:331 இராஜா 1:381 இராஜா 1:452 நாளாக 32:42இராஜா 20:20ஏசா 22:9-11யோசு 1:7-8சங் 1:1-3 ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் பிரதிநிதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட காரியத்தில் அவன் இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அறிவதற்காக அவனைச் சோதிப்பதற்கு தேவன் அவனைக் கைவிட்டார். உபா 8:2நீதி 17:3யோவா 15:52 நாளாக 32:24ஆதி 22:1உபா 8:16சகரி 13:9ஏசா 39:1-8 எசேக்கியாவின் மற்ற காரியங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. 2இராஜா 18:1-20ஏசா 36:1-222 நாளாக 31:20-21 எசேக்கியா இறந்தபின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் முக்கியமான 2 கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; யூதா முழுவதும், எருசலேமின் மக்களும் அவன் இறந்தபோது அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள்; அவன் மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான். நீதி 10:71 இராஜா 1:211 இராஜா 11:431 இராஜா 2:101 சாமு 2:301 சாமு 25:12 நாளாக 16:142 நாளாக 33:1-20