யெகோவாவுடைய ஊழியக்காரன்
இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். மத் 12:18-21லூக் 3:22ஏசா 52:13ஏசா 43:10ஏசா 61:1பிலி 2:7மத் 17:5மத் 3:16-17 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கச்செய்யவுமாட்டார். மத் 12:16-202 தீமோ 2:241 பேது 2:23மத் 11:29லூக் 17:20சகரி 9:9 அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். எசேக் 34:16எரே 31:25ஏசா 40:11சங் 147:3மத் 11:28ஏசா 11:3-4யோவா 5:30மத் 18:10-14 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும். ஆதி 49:10ஏசா 53:2-12ஏசா 55:5ஏசா 52:13-15சங் 22:27ஏசா 9:7மத் 12:211 கொரி 9:21 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது: ஏசா 40:22ஏசா 45:12எரே 10:12சகரி 12:1ஏசா 48:13சங் 104:2-35ஏசா 44:24சங் 102:25-26 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், யோவா 8:12லூக் 2:32ஏசா 26:3அப் 13:47ஏசா 49:8ஏசா 49:61 பேது 2:9ஏசா 60:1-3 கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாகவும் தேசங்களுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். எபே 1:17-18ஏசா 61:1ஏசா 35:5ஏசா 49:92 தீமோ 2:26எபி 2:14-15மத் 11:51 பேது 2:9 நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன். ஏசா 48:11ஏசா 43:11யாத் 34:14யாத் 20:3-5சங் 83:18யாத் 3:13-15யாத் 4:5யோவா 5:23 ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன். ஏசா 43:19ஏசா 46:9-10யோவா 13:192 பேது 1:19-21ஏசா 44:7-8யோசு 23:14-151 இராஜா 8:15-20ஏசா 41:22-23
யெகோவாவுக்குத் துதியின் பாடல்
கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். சங் 33:3ஏசா 42:4சங் 40:3ரோம 15:9-11சங் 98:1-4ஏசா 49:13வெளி 5:91 நாளாக 16:32 வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. ஏசா 32:16ஏசா 60:7ஏசா 41:18-19சங் 72:8-10ஆதி 25:23ஏசா 16:1ஏசா 21:16ஏசா 35:6 யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. சங் 117:1-2ரோம 15:9-11ஏசா 24:15-16ஏசா 42:4ஏசா 66:18-19சங் 22:27வெளி 5:9-10வெளி 7:9-12 யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார். யாத் 15:1-3ஏசா 59:16-19சங் 78:65ஆமோ 1:2சங் 110:5-6செப்ப 3:8ஓசி 11:10ஏசா 26:11 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். 2 பேது 3:152 பேது 3:9-10பிரச 8:11-12எரே 15:6எரே 44:22லூக் 18:7சங் 83:1-2யோபு 32:18 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன். ஏசா 50:2நாகூ 1:4-6ஏசா 44:27ஏசா 2:12-16வெளி 20:11எசேக் 38:20ஆப 3:6-10ஆகா 2:6 குருடர்களை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச்செய்து, அவர்களைக் கைவிடாமலிருப்பேன். ஏசா 30:21லூக் 3:5ஏசா 35:8ஏசா 60:19-20ஏசா 40:4லூக் 1:78-79எபே 5:8ஏசா 32:3 சித்திரவேலையான சிலைகளை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட உருவங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்று சொல்கிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள். சங் 97:7ஏசா 1:29ஏசா 44:11ஏசா 45:16-17யாத் 32:4யாத் 32:8ஆப 2:18-20ஏசா 44:17
குருடும் செவிடுமான இஸ்ரவேல்
செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள். ஏசா 43:8ஏசா 29:18ஏசா 35:5மாற் 7:34-37நீதி 20:12யாத் 4:11லூக் 7:22வெளி 3:17-18 என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? யெகோவாவுடைய ஊழியக்காரனையல்லாமல் குருடன் யார்? 2 கொரி 4:4எசேக் 12:2எரே 5:212 கொரி 3:14-15ஏசா 26:3ஏசா 29:9-14ஏசா 41:8ஏசா 44:26 நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனிக்காமல் இருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான். உபா 29:2-4அப் 28:22-27உபா 4:9எசேக் 33:31ஏசா 1:3ஏசா 48:6-8ஏசா 58:2எரே 42:2-5 யெகோவா தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். எபி 8:10ரோம 3:31மத் 5:17-20ரோம 7:12ஏசா 1:24-27ஏசா 42:4ஏசா 46:12-13மத் 3:15 இந்த மக்களோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள். சங் 102:20எரே 50:17ஏசா 51:23ஏசா 24:22சங் 50:22ஏசா 42:7ஏசா 52:4-5எரே 51:34-35 உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்? அப் 3:22-23ஏசா 48:181 பேது 4:2-3அப் 3:19உபா 32:29உபா 4:29-31ஏசா 1:18-20எரே 3:13 யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவம்செய்து விரோதித்த யெகோவா அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்திற்குச் செவிகொடாமலும் போனார்களே. 2 நாளாக 15:62 நாளாக 36:17ஆமோ 3:6உபா 28:49உபா 32:30ஏசா 10:5-6ஏசா 30:15ஏசா 45:7 இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், போரின் வலிமையையும் வரச்செய்து, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களை எரித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள். ஓசி 7:9ஏசா 57:11எசேக் 7:8-9மல்கி 2:2உபா 32:22எசேக் 20:34ஏசா 9:13எரே 5:3