மத்தேயு 18

Matthew 18
அத்தியாயம் 18

பரலோகராஜ்யத்தில் பெரியவன்

அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள். மாற் 9:33-37லூக் 9:46-48மத் 20:20-28லூக் 22:24-27பிலி 2:3மத் 23:11மாற் 10:35-45மாற் 10:14-15 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: மத் 19:13-141 இராஜா 3:7மாற் 9:36-37எரே 1:7 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற் 10:14-151 பேது 2:2மத் 19:141 கொரி 14:20லூக் 18:16-17சங் 131:2யோவா 3:5யோவா 3:3 ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான். யாக் 4:10மாற் 10:43லூக் 14:11லூக் 9:48மத் 20:26-27மத் 23:11-121 பேது 5:5ஏசா 57:15 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். மத் 25:40யோவா 13:20மாற் 9:37கலா 4:14லூக் 17:1-2லூக் 9:48மத் 10:40-42மத் 25:45 என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும். மாற் 9:42லூக் 17:1-2மத் 18:102 தெச 1:6-9மத் 18:14ரோம 15:1-3சங் 105:151 கொரி 8:9-13 இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! லூக் 17:11 கொரி 11:19மத் 26:241 தீமோ 4:1-3யூதா 1:42 தீமோ 3:1-5யூதா 1:11-13வெளி 2:14-15 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். மத் 5:29-30பிலி 3:8-9லூக் 18:22-23ரோம 13:12எசேக் 18:31லூக் 14:26-27மத் 25:46வெளி 14:10 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். அப் 14:22மத் 18:8மத் 5:22மத் 5:29வெளி 21:27எபி 4:11லூக் 9:24-25மத் 16:26

காணாமல்போன ஆடுபற்றிய உவமை

இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். சங் 91:11எபி 1:14சங் 34:7லூக் 16:222இராஜா 6:16-17அப் 12:7-11மத் 1:20மத் 18:14 மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார். உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ? எசேக் 34:12லூக் 15:4-7எசேக் 34:16எசேக் 34:28ஏசா 53:61 பேது 2:25எசேக் 34:6எரே 50:6 அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 15:5-10செப்ப 3:17சங் 147:11யாக் 2:13யோவா 4:34-36லூக் 15:23-24மீகா 7:18ஏசா 53:11 இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல. யோவா 17:122 பேது 3:9யோவா 6:39-40ஏசா 40:11யோவா 10:27-30சகரி 13:7யோவா 21:15லூக் 12:32

உனக்கு விரோதமாக குற்றம் செய்யும் சகோதரன்

உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். லேவி 19:17கலா 6:1லூக் 17:3-42 தெச 3:15கொலோ 3:13யாக் 5:19-20நீதி 25:9-10ரோம 12:21 அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. உபா 19:152 கொரி 13:1யோவா 8:171 தீமோ 5:19எபி 10:28உபா 17:6எண் 35:301 இராஜா 21:13 அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக. 2 தெச 3:61 கொரி 5:92 தெச 3:14-151 கொரி 5:3-52 யோவா 1:10-11எபே 5:11-123 யோவா 1:9-10எபே 4:17-19 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 16:192 கொரி 2:10யோவா 20:231 கொரி 5:4-5வெளி 3:7-8அப் 15:23-31 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 7:71 யோவா 5:14-16மாற் 11:24யோவா 14:13-14யோவா 16:23பிலி 1:19யாக் 5:14-16மத் 21:22 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். 1 கொரி 5:4வெளி 21:3மத் 28:20சகரி 2:5யோவா 20:26யோவா 20:19வெளி 2:1யாத் 20:24

இரக்கமற்ற ஊழியனைப்பற்றிய உவமை

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான். லூக் 17:3-4மத் 18:15 அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். கொலோ 3:13மாற் 11:25எபே 4:31மத் 6:14-15ஆதி 4:24எபே 4:26ரோம 12:211 தீமோ 2:8 எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. மத் 13:24ரோம 14:12மத் 3:2மத் 13:44-45லூக் 16:1-2லூக் 19:12-27மத் 13:471 கொரி 4:5 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சங் 130:3-4சங் 38:4எஸ்றா 9:6லூக் 13:4லூக் 16:5சங் 40:121 நாளாக 29:7லூக் 16:7 கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். நெகே 5:52இராஜா 4:1லேவி 25:39லூக் 7:42நெகே 5:8யாத் 21:2ஏசா 50:1 அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான். லூக் 7:43மத் 18:29மத் 8:2ரோம 10:3 அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். சங் 145:8சங் 86:15ஓசி 11:8நெகே 9:17நியாயாதி 10:16சங் 78:38சங் 86:5 அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். எசேக் 45:9மத் 20:2உபா 15:2ஏசா 58:3நெகே 10:31நெகே 5:10-11நெகே 5:7 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். மத் 18:26மத் 6:12பிலே 1:18-19 அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான். 1 இராஜா 21:27-291 இராஜா 22:27 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். ரோம 12:15எபி 13:3மாற் 3:5ஆதி 37:2எபி 13:17எரே 9:1லூக் 14:21லூக் 19:41 அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். லூக் 19:22ரோம 3:19மத் 25:26 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, கொலோ 3:13எபே 4:32மத் 6:12லூக் 6:35-36மத் 5:44-45 அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். யாக் 2:13மத் 5:25-26லூக் 12:58-592 தெச 1:8-9மத் 18:30வெளி 14:10-11 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். மத் 6:14-15யாக் 2:13லூக் 6:37-38மாற் 11:25மத் 6:12நீதி 21:2நீதி 21:13மத் 7:1-2