யாக்கோபு 5

James 5
அத்தியாயம் 5

செல்வந்தர்களின் பெருந்துன்பங்கள்

செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள். நீதி 11:281 தீமோ 6:9-10நீதி 11:4யாக் 1:11எரே 9:23லூக் 12:16-21லூக் 6:24-25லூக் 16:19-25 உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது. மத் 6:19-20யோபு 13:28லூக் 12:33ஏசா 50:9ஏசா 51:81 பேது 1:4எரே 17:11சங் 39:11 உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். ரோம 2:5யாக் 5:7-8வெளி 21:8ஏசா 2:2வெளி 20:152 பேது 3:32 தீமோ 2:17உபா 32:33-34 இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது. லேவி 19:13எரே 22:13உபா 24:14-15ரோம 9:29மல்கி 3:5யோபு 24:10-11யாத் 22:27யாத் 3:9 பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள். 1 தீமோ 5:6லூக் 16:25லூக் 16:19ஆமோ 6:1எரே 12:3வெளி 19:17-181 சாமு 25:36ஏசா 22:13 நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களிடம் எதிர்த்து நிற்கவில்லை. 1 பேது 2:22-23யோவா 19:9-11அப் 8:32ஏசா 53:7லூக் 22:51-53மத் 5:391 தெச 2:15-16அப் 2:22-23

பெருந்துன்பத்தின்கீழ் பொறுமை

இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான். எபி 12:1-3யாக் 5:8-9யோவே 2:23கலா 6:9உபா 11:14கொலோ 1:112 கொரி 6:4-5ரோம 2:7 நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது. கலா 5:22யாக் 5:9சங் 37:71 பேது 4:7சங் 27:14பிலி 4:51 தெச 3:13புலம் 3:25-26 சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். லேவி 19:181 கொரி 4:5யாக் 4:11மத் 24:33கலா 5:14மத் 6:14-151 பேது 4:9ஆதி 4:7 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள். எபி 11:32-38மத் 5:11-12எபி 13:71 தெச 2:14-15அப் 7:52அப் 3:21லூக் 6:232 நாளாக 36:16 இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே. யாக் 1:12யாத் 34:6யோபு 1:21-22ஏசா 55:6-7மத் 10:22மத் 5:10-11யோபு 2:10யோபு 42:10-17 குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள். மத் 5:33-37மத் 23:16-222 கொரி 1:17-201 பேது 4:8யாக் 3:1-21 கொரி 11:343 யோவா 1:2

துன்பத்தில் ஜெபம்

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும். சங் 50:15யோனா 2:2எபே 5:19அப் 16:24-25எபி 5:7வெளி 19:1-6வெளி 5:9-14ஓசி 6:1 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும். மாற் 6:13அப் 28:8மாற் 16:182இராஜா 4:332இராஜா 5:11அப் 9:40அப் 14:23அப் 15:4 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். 1 யோவா 5:14-16யாக் 5:13யாக் 5:16மத் 21:21-22யாக் 1:6மத் 17:20மாற் 2:5-11ஏசா 33:24 நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது. எரே 29:12-13நீதி 15:29மத் 21:22சங் 34:15யோவா 9:31சங் 145:18-19எரே 33:31 பேது 2:24 எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை. 1 இராஜா 17:1லூக் 4:251 இராஜா 18:1வெளி 11:6அப் 14:15அப் 10:26ரோம 11:2 மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது. 1 இராஜா 18:42-45எரே 14:221 இராஜா 18:18அப் 14:17 சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால், கலா 6:1மத் 18:15யாக் 5:20யூதா 1:22-23லூக் 22:32எசேக் 34:162 பேது 3:171 தீமோ 6:10 தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும். 1 பேது 4:8நீதி 10:121 தீமோ 4:16நீதி 11:30யாக் 5:19ரோம 11:141 கொரி 9:22யாக் 1:15