இயேசுவின் மலைப்பிரசங்கம்
இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். மாற் 3:13மத் 15:29யோவா 6:2-3மாற் 4:1மாற் 3:20மத் 4:25லூக் 6:13-16மத் 10:2-4 அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: அப் 8:35லூக் 6:20-26அப் 10:34மத் 13:35அப் 18:14எபே 6:19நீதி 31:8-9நீதி 8:6
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. ஏசா 66:2நீதி 29:23சங் 34:18நீதி 16:19லூக் 18:142 நாளாக 7:14சங் 51:17ஏசா 57:15
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். வெளி 21:42 கொரி 7:9-10ஏசா 61:2-3யோவா 16:20-22சங் 126:5-6ஏசா 57:18லூக் 6:21வெளி 7:14-17
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். சங் 37:11ஏசா 29:19யாக் 3:13சங் 149:4கலா 5:23கொலோ 3:12மத் 11:29எண் 12:3
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். யோவா 4:14சங் 107:9யோவா 6:27யோவா 6:48-58சங் 145:19ஏசா 55:1-3யோவா 7:37லூக் 6:21
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். எபே 4:32மத் 6:14-152 சாமு 22:26மத் 18:33-35சங் 18:25யாக் 2:13யாக் 3:17கொலோ 3:12
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சங் 24:4சங் 51:10எபி 10:22எபி 12:14எசேக் 36:25-27நீதி 22:11யாக் 4:81 பேது 1:22
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள். எபி 12:14யாக் 3:16-18ரோம 12:18கலா 5:22சங் 120:6ரோம 8:14லூக் 6:35ரோம 14:17-19
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. யாக் 1:121 பேது 3:13-142 கொரி 4:17மத் 5:3யாக் 1:2-5லூக் 6:222 தீமோ 2:122 கொரி 4:8-12
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; 1 பேது 4:14லூக் 21:17மாற் 13:13மத் 24:9லூக் 6:221 பேது 2:23யோவா 15:21ஏசா 66:5 சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. லூக் 6:23யாக் 1:2கொலோ 3:241 பேது 4:13கொலோ 1:24ரோம 5:3ரூத் 2:12சங் 58:11
உப்பும் வெளிச்சமும்
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. கொலோ 4:6லூக் 14:34-35மாற் 9:49-50லேவி 2:13எபி 6:4-62 பேது 2:20-21 நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. பிலி 2:15யோவா 8:12எபே 5:8-141 தெச 5:5நீதி 4:18யோவா 12:36ரோம 2:19-202 கொரி 6:14 விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். லூக் 11:33மாற் 4:21லூக் 8:16எண் 8:2யாத் 25:37 இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 1 பேது 2:12தீத் 2:7யோவா 15:81 யோவா 1:5-7பிலி 2:15-16எபே 5:8ஏசா 60:1-31 பேது 3:16
நியாயப்பிரமாணம் நிறைவேறுதல்
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன். ரோம 10:4லூக் 16:17கலா 4:4-5ரோம 3:31ரோம 8:4ஏசா 42:21கலா 3:17-24மத் 7:12 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 16:17ஏசா 40:81 பேது 1:25சங் 119:89-90மத் 24:34-35ஏசா 51:6மாற் 13:30வெளி 20:11 ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். உபா 12:32யாக் 2:10-11மத் 28:20ரோம 13:8-10மத் 11:111 தீமோ 6:3-4தானி 12:31 தெச 4:1-7 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ரோம 10:2-3பிலி 3:9ரோம 9:30-32லூக் 16:14-15மத் 23:2-5யோவா 3:3-5மத் 23:23-282 கொரி 5:17
கொலை செய்யாதே
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உபா 5:17யாத் 20:13எண் 35:30-34யாத் 21:12-14உபா 21:7-9எண் 35:16-21ஆதி 9:5-6எண் 35:12 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். 1 யோவா 3:14-151 யோவா 4:20-211 யோவா 2:9எபே 4:26-27எபே 4:31-32யாக் 3:6தீத் 3:2மத் 10:28 ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், மாற் 11:25லேவி 6:2-6மத் 5:24மத் 23:19மத் 8:4லூக் 19:81 சாமு 15:22ஓசி 6:6 அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. யாக் 5:16ரோம 12:17-18மத் 18:15-171 பேது 3:7-8யோபு 42:8நீதி 25:91 கொரி 6:7-81 தீமோ 2:8
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு. லூக் 12:58-59நீதி 25:8எபி 3:13ஏசா 55:6-7லூக் 14:31-32எபி 3:7லூக் 13:24-251 இராஜா 22:26-27 இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் . மத் 18:34லூக் 12:592 தெச 1:9யாக் 2:13லூக் 16:26மத் 25:41மத் 25:46
விபசாரம் செய்யாதே
விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உபா 5:18நீதி 6:32யாத் 20:14லேவி 20:10உபா 22:22-24மத் 5:21 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான். 1 யோவா 2:16யாக் 1:14-15நீதி 6:25யாத் 20:172 சாமு 11:2யோபு 31:12 பேது 2:14ஆதி 34:2 உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். ரோம 8:13மாற் 9:43-48கொலோ 3:5ரோம 6:61 பேது 4:1-31 கொரி 9:27கலா 5:24லூக் 9:24-25 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். மாற் 9:43மத் 5:291 பேது 2:8ரோம 14:20-211 கொரி 8:13லூக் 17:2மத் 18:6-7மத் 13:21
விவாகரத்து
தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. எரே 3:1உபா 24:1-4மத் 19:7மத் 19:3மாற் 10:2-9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான். ரோம 7:3லூக் 16:181 கொரி 7:10-111 கொரி 7:4மத் 19:8-9மாற் 10:5-12மல்கி 2:14-16மத் 5:28
பொய் சத்தியம்
அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உபா 23:21லேவி 19:12பிரச 5:4-6உபா 23:23எண் 30:2-16சங் 76:11உபா 5:11யாத் 20:7 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். யாக் 5:12ஏசா 66:1உபா 23:21-23மத் 23:16-22பிரச 9:2ஏசா 57:15 பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். சங் 48:22 நாளாக 6:6மல்கி 1:14வெளி 21:10சங் 99:5வெளி 21:2சங் 87:2 உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே. லூக் 12:25மத் 6:27மத் 23:16-21 உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். யாக் 5:12கொலோ 4:6கொலோ 3:92 கொரி 1:17-20யோவா 8:44எபே 4:252 தெச 3:3மத் 13:19
பழிவாங்காதிருப்பாயாக
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். லேவி 24:19-20உபா 19:21யாத் 21:22-27உபா 19:19மத் 5:27 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு. 1 தெச 5:151 பேது 3:9ரோம 12:17-19நீதி 20:22லூக் 6:29-301 பேது 2:20-23லேவி 19:18புலம் 3:30 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு. லூக் 6:291 கொரி 6:7 ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ. லூக் 23:26மத் 27:32மாற் 15:21 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. நீதி 19:17எபி 13:16லூக் 6:30-361 தீமோ 6:17-19சங் 112:5-9சங் 37:211 யோவா 3:16-18உபா 15:7-14
அன்பாக இருங்கள்
உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். லேவி 19:18சங் 139:21-22கலா 5:13-14மத் 19:19ரோம 13:8-10உபா 23:6யாக் 2:8மாற் 12:31-34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். ரோம 12:141 பேது 3:9லூக் 6:27-28ரோம 12:20-21நீதி 25:21-22லூக் 23:341 பேது 2:23அப் 7:60 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். சங் 145:9லூக் 6:35அப் 14:17யோபு 25:3எபே 5:1மத் 5:9யோவா 13:351 யோவா 3:9 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? லூக் 6:32-351 பேது 2:20-23மத் 11:19மத் 9:10-11லூக் 15:1லூக் 18:13மத் 18:17மத் 6:1 உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? லூக் 6:32மத் 5:201 பேது 2:20லூக் 10:4-5மத் 10:12 ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள். 1 பேது 1:15-16யாக் 1:4லேவி 19:2உபா 18:13லூக் 6:36எபே 5:1-21 யோவா 3:3கொலோ 1:28