2 யோவான் 1

2 John 1
அத்தியாயம் 1

நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், 1 தீமோ 2:41 யோவா 3:18யோவா 8:321 பேது 1:22-231 பேது 5:12 யோவா 1:13-152 யோவா 1:51 யோவா 2:21 தெரிந்துகொள்ளப்பட்டத் தாயாருக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது: 1 யோவா 1:81 யோவா 2:141 யோவா 2:172 பேது 1:12கொலோ 3:16யோவா 15:71 பேது 1:23-252 தீமோ 1:5 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும், சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடும்கூட உங்களோடு இருப்பதாக. 1 யோவா 4:10ரோம 1:71 தீமோ 1:21 தீமோ 1:14கலா 5:62 யோவா 1:12 தீமோ 1:131 யோவா 2:23-24 பிதாவினால் நாம் பெற்ற கட்டளையின்படி உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். 3 யோவா 1:3-4எபே 5:81 யோவா 2:6எபே 5:2ஓசி 14:91 யோவா 1:6-7மல்கி 2:61 தெச 3:6-10 இப்பொழுதும் தாயாரே, நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்று, உமக்குப் புதிய கட்டளையாக எழுதாமல், ஆரம்பம் முதல் நமக்கு உண்டாயிருக்கிற கட்டளையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 1 யோவா 3:11யோவா 13:34-35யோவா 15:121 தெச 4:91 யோவா 3:231 யோவா 4:201 யோவா 3:14-181 பேது 4:8 நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கட்டளை இதுவே. 1 யோவா 5:31 யோவா 2:24யோவா 15:10யோவா 14:151 யோவா 2:5கலா 5:13-14யோவா 15:14ரோம 13:8-9 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான். 1 யோவா 4:1-31 யோவா 2:261 யோவா 2:18-222 பேது 2:1-31 தீமோ 3:16யோவா 1:14வெளி 12:9வெளி 13:14 உங்களுடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருங்கள். எபி 10:35வெளி 3:111 கொரி 3:141 கொரி 3:8எபி 12:15கலா 3:4யோவா 4:36மாற் 13:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். யோவா 7:16-17கொலோ 3:161 யோவா 2:22-241 யோவா 1:3யோவா 15:6அப் 2:42யோவா 14:6யோவா 5:23 ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். தீத் 3:10ரோம 16:17-182 தெச 3:62 தெச 3:142 தீமோ 3:5-61 கொரி 5:112 யோவா 1:111 கொரி 16:22 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான். 1 தீமோ 5:22எபே 5:11சங் 50:18வெளி 18:4 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனம் இல்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருப்பதற்காக உங்களிடம் வந்து, முகமுகமாகப் பேசலாம் என்று நம்பியிருக்கிறேன். 3 யோவா 1:13-14யோவா 16:121 கொரி 16:5-71 யோவா 1:4யோவா 15:11யோவா 17:13எண் 12:8ரோம 15:24 தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென். 1 பேது 5:132 யோவா 1:1-13