1 யோவான் 1

1 John 1
அத்தியாயம் 1

கிறிஸ்துவ அன்பின் பொருள்

ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அப் 4:20யோவா 20:271 யோவா 4:14யோவா 1:1-18லூக் 24:39யோவா 5:26யோவா 8:582 பேது 1:16-18 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 1 யோவா 5:20யோவா 1:41 தீமோ 3:16யோவா 17:31 யோவா 3:8யோவா 14:6தீத் 1:21 யோவா 3:5 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 1 கொரி 1:9யோவா 17:3யோவா 17:21அப் 4:20பிலி 2:12 கொரி 13:141 யோவா 1:7எபி 3:14 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். யோவா 15:11யோவா 16:242 யோவா 1:122 கொரி 1:24ஆப 3:17-18எபே 3:19யோவா 3:29ஏசா 61:10

வெளிச்சத்தில் நடத்துதல்

தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது. யோவா 8:12யாக் 1:17ஏசா 60:19சங் 27:1யோவா 1:9யோவா 1:4வெளி 22:5யோவா 12:35-36 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம். 1 யோவா 2:41 யோவா 4:20யோவா 3:19-21யோவா 8:12நீதி 4:18-191 யோவா 1:10நீதி 2:13யோவா 12:35 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். எபே 5:8ரோம 13:12வெளி 1:5எபே 1:71 யோவா 2:9-10வெளி 7:14எபி 9:141 யோவா 1:5 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது. ரோம 3:23பிரச 7:20யாக் 3:2ஏசா 53:61 யோவா 2:41 யோவா 1:10யோபு 15:14நீதி 20:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார். சங் 32:5நீதி 28:13எரே 33:8சங் 51:2-51 யோவா 1:7எசேக் 36:25எபி 10:231 தீமோ 1:15 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது. 1 யோவா 1:81 யோவா 5:101 யோவா 2:4சங் 130:32 யோவா 1:21 யோவா 2:14கொலோ 3:16யோபு 24:25