யோபு 31

Job 31
அத்தியாயம் 31

என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் யாக் 1:14-15மத் 5:28-291 யோவா 2:16சங் 119:37நீதி 6:252 சாமு 11:2-4நீதி 4:25ஆதி 6:2

ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி?

அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், யோபு 20:29எபி 13:4யோபு 27:13

உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ?

மாறுபாடானவனுக்கு ஆபத்தும், யோபு 21:30யோபு 34:221 தெச 5:32 பேது 2:12 தெச 1:9ஏசா 28:21யூதா 1:7மத் 7:13

அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும்.

அவர் என் வழிகளைப் பார்த்து, யோபு 34:212 நாளாக 16:9நீதி 5:21யோபு 14:16எரே 32:19நீதி 15:3எரே 16:17சங் 139:1-3

என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ?

நான் மாயையிலே நடந்தேனோ, நீதி 12:11சங் 44:20-21எசேக் 13:8எரே 2:5மீகா 2:11சங் 12:2சங் 4:2சங் 7:3-5

என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று,

சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, தானி 5:27சங் 7:8-91 சாமு 2:3ஏசா 26:7மத் 7:23யோபு 27:5-6யோபு 6:2யோசு 22:22

என் உத்தமத்தை அறிவாராக.

என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், எண் 15:39பிரச 11:9மத் 5:29எசேக் 14:3எசேக் 14:7எசேக் 6:9ஏசா 33:15யோபு 23:11

என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும்,

ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால்,

அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; லேவி 26:16மீகா 6:15உபா 28:38உபா 28:30-33உபா 28:51நியாயாதி 6:3-6யோபு 15:30யோபு 18:19

என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது.

என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, 1 இராஜா 11:4பிரச 7:26நியாயாதி 16:5ஓசி 7:4எரே 5:8யோபு 24:15-16நெகே 13:26நீதி 2:16-19

அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,

அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; எரே 8:102 சாமு 12:11உபா 28:30ஏசா 47:2யாத் 11:5ஓசி 4:13-14மத் 24:41

வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.

அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே. லேவி 20:10உபா 22:22-24யோபு 31:28ஆதி 38:24யாத் 20:14எசேக் 16:38ஆதி 20:9நீதி 6:29-33

அது பாதாளம்வரை எரிக்கும் நீதி 6:27எரே 5:7-9எபி 13:4யோபு 15:30யோபு 20:28யோபு 26:6மல்கி 3:5நீதி 3:33

நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும்.

என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, கொலோ 4:1உபா 15:12-15உபா 24:14-15எபே 6:9யாத் 21:20-21யாத் 21:26-27எரே 34:14-17லேவி 25:43

அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால்,

தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; யாக் 2:13சங் 10:12-15சங் 44:21சங் 9:12சங் 9:19ரோம 3:19சகரி 2:13ஓசி 9:7

அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன்.

தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் நீதி 14:31யோபு 34:19மல்கி 2:10நீதி 22:2யோபு 10:8-12ஏசா 58:7யோபு 10:3நெகே 5:5

அவனையும் உண்டாக்கினார் அல்லவோ?

ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?

ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, உபா 15:7-10ஏசா 38:14அப் 11:29உபா 28:32கலா 2:10யோபு 20:19யோபு 22:7-9யோபு 5:16

விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,

தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், 1 யோவா 3:17அப் 4:32உபா 15:11உபா 15:14எசேக் 18:16எசேக் 18:7யாக் 1:27யோவா 13:29

நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?

என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்;

நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன்.

ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், யோபு 22:61 யோவா 3:182 நாளாக 28:15அப் 9:39ஏசா 58:7யாக் 2:16யோபு 24:4யோபு 29:13

ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,

அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், உபா 24:13யோபு 29:11

அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும்,

ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, யோபு 22:9யோபு 29:12எசேக் 22:7எரே 5:28யோபு 24:9யோபு 6:27மீகா 2:1-2மீகா 7:3

திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால்,

என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, யோபு 31:10யோபு 31:40யோபு 38:15யோசு 22:22-23சங் 137:6சங் 7:4-5

என் கையின் எலும்பு முறிந்துபோவதாக.

தேவன் தண்டிப்பார் என்றும், யோபு 13:11சங் 119:1202 கொரி 5:11ஏசா 13:6சங் 76:7ஆதி 39:9யோபு 20:23யோபு 21:20

அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும்,

எனக்குப் பயங்கரமாயிருந்தது.

நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, உபா 8:12-14நீதி 11:28சங் 49:6-7சங் 52:71 தீமோ 6:101 தீமோ 6:17லூக் 12:15நீதி 10:15

தங்கத்தைப்பார்த்து:

நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,

என் செல்வம் அதிகமென்றும், சங் 62:10தானி 4:30உபா 8:17-18எஸ்த 5:11எசேக் 28:5ஆப 1:16ஓசி 12:8ஏசா 10:13-14

என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,

சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், எசேக் 8:16உபா 4:19உபா 17:32இராஜா 23:112இராஜா 23:5எரே 44:17எரே 8:2உபா 11:16

நான் அதை நோக்கி:

என் மனம் இரகசியமாக மயங்கி, உபா 13:6உபா 11:161 இராஜா 19:18ஓசி 13:2ஏசா 44:20சங் 2:12ரோம 1:21ரோம 1:28

என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,

இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; உபா 17:2-7யோபு 31:11சங் 50:6உபா 17:9ஆதி 18:25நியாயாதி 11:27யோபு 23:7யோபு 9:15

அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, நீதி 24:17-18நீதி 17:5ஒபதி 1:12சங் 35:13-14சங் 35:25-262 சாமு 1:122 சாமு 16:5-82 சாமு 4:10-11

பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ?

அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, 1 பேது 3:9ரோம 12:141 பேது 2:22-23யாத் 23:4-5யாக் 3:9-10மத் 5:22மத் 5:43-44பிரச 5:2

வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.

அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று 1 சாமு 24:101 சாமு 24:41 சாமு 26:82 சாமு 16:9-102 சாமு 19:21-22எரே 40:15-16யோபு 19:22யோபு 22:7

என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ?

அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; எபி 13:2ஆதி 19:2-3நியாயாதி 19:20-211 பேது 4:9ஏசா 58:7மத் 25:35ரோம 12:131 தீமோ 5:10

வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, நீதி 28:13அப் 5:81 யோவா 1:8-10ஆதி 3:12ஓசி 6:7யோசு 7:11ஆதி 3:7-8

என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?

மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, யாத் 23:2நீதி 29:252 கொரி 5:16ஆமோ 5:11-13எஸ்த 4:11எஸ்த 4:14யாத் 32:27எரே 38:16

மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது,

நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ?

ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; யோபு 13:21-22யோபு 40:4-5யோபு 13:24யோபு 13:3யோபு 17:3யோபு 19:23-24யோபு 19:7யோபு 23:3-7

இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும்,

என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.

அதை நான் என் தோளின்மேல் வைத்து, ஏசா 22:22யாத் 28:12ஏசா 62:3யோபு 29:14பிலி 4:1

எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே.

அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, யோபு 13:15எபே 3:12எபி 4:15-161 யோவா 3:19-21ஆதி 32:28யோபு 1:3யோபு 14:16யோபு 29:25

ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.

எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், ஆப 2:11யாக் 5:4யோபு 20:27சங் 65:13

அதின் வரப்புகள்கூட அழுகிறதும்,

கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, 1 இராஜா 21:19யாக் 5:41 இராஜா 21:13-16எசேக் 22:12-13எசேக் 22:6ஆதி 4:12ஏசா 26:21நீதி 1:19

பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,

அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், ஆதி 3:17-18ஏசா 7:23மல்கி 1:3சங் 72:20செப்ப 2:9

வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.