யோபு 14

Job 14
அத்தியாயம் 14

“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் யோபு 5:7பிரச 2:23யோபு 25:4யோபு 7:1மத் 11:11யோபு 15:14யோபு 7:6யோபு 9:25

வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.

அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; ஏசா 40:6-81 பேது 1:24யோபு 8:9சங் 103:15-161 நாளாக 29:15யாக் 4:14யாக் 1:10-11சங் 144:4

நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.

ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, சங் 144:3சங் 143:2சங் 8:4யோபு 13:25யோபு 13:27யோபு 7:17-18யோபு 9:19-20யோபு 9:32

உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ?

அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? யோவா 3:6யோபு 15:14எபே 2:3ரோம 8:8-9யோபு 25:4-6லூக் 1:35சங் 51:5ரோம 5:12

ஒருவனுமில்லை.

அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், சங் 39:4அப் 17:26யோபு 12:10எபி 9:27சங் 104:29தானி 5:26யோபு 21:21லூக் 12:20

அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது;

அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.

அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். யோபு 7:19சங் 39:13யோபு 7:1-2யோபு 10:20யோபு 7:16மத் 20:1-8

ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; ஏசா 27:6ஏசா 11:1யோபு 14:14தானி 4:23-25யோபு 19:10தானி 4:15

அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும்,

அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;

அதின் வேர் தரையிலே பழையதாகி, 1 கொரி 15:36ஏசா 26:19யோவா 12:24

அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,

தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, ரோம 11:17-24எசேக் 17:22-24எசேக் 17:3-10எசேக் 19:10

இளமரம்போலக் கிளைவிடும்.

மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், யோபு 19:26ஆதி 49:33யோபு 7:7-10நீதி 14:32அப் 5:10யோபு 11:20யோபு 14:12யோபு 17:13-16

மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே?

தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, ஏசா 19:5எரே 15:18யோபு 6:15-18

வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல,

மனிதன் படுத்துக்கிடக்கிறான், யோபு 10:21-22பிரச 3:19-21ஏசா 26:19யோபு 3:132 பேது 3:10-132 பேது 3:7யோபு 30:231 தெச 4:14-15

வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை,

தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.

நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, ஏசா 26:20-21ஏசா 57:1-2மாற் 13:32அப் 1:7அப் 17:31ஆதி 8:1ஏசா 12:1யோபு 3:17-19

உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து,

என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.

மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? 1 கொரி 15:51-52அப் 26:8யோபு 7:1சங் 27:14யோவா 5:28-29யோபு 13:15யோபு 14:5பிலி 3:21

எனக்கு மாறுதல் எப்போது வருமென்று

எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.

என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; யோபு 13:22சங் 138:81 பேது 4:19யோபு 10:3யோபு 10:8யோபு 7:211 யோவா 2:281 தெச 4:17

உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக.

இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; யோபு 10:6யோபு 31:4யோபு 34:21நீதி 5:21சங் 139:1-4எரே 32:19யோபு 33:11யோபு 13:27

என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.

என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு உபா 32:34ஓசி 13:12யோபு 21:19

முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர்.

மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; வெளி 6:14யோபு 18:4எரே 4:24ஏசா 40:12ஏசா 41:15-16ஏசா 54:10ஏசா 64:1மத் 27:51

கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும்.

தண்ணீர் கற்களைக் குடையும்; யோபு 19:10யோபு 27:8யோபு 7:6எசேக் 37:11ஆதி 6:17ஆதி 7:21-23லூக் 12:19-20சங் 30:6-7

பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்;

அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.

நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; பிரச 8:8யோபு 14:14யோபு 2:12புலம் 4:8

அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர்.

அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; பிரச 9:5பிரச 2:18-19ஏசா 63:161 சாமு 4:20ஏசா 39:7-8சங் 39:6

அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான்.

அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; யோபு 19:26யோபு 19:20யோபு 19:22யோபு 33:19-21லூக் 16:23-24நீதி 14:32

அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான்.