யோபுவின் வார்த்தைகள்
அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, எரே 20:14-15சங் 106:33சங் 39:2-3யோபு 1:22யோபு 2:5யோபு 2:9-10யோபு 3:3யோபு 35:16 வசனித்துச் சொன்னது என்னவென்றால்: நியாயாதி 18:14
நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக. எரே 20:14-18எரே 15:10யோபு 10:18-19
அந்த நாள் இருளாக்கப்படுவதாக; அப் 27:20ஆமோ 5:18உபா 11:12யாத் 10:22-23யோவே 2:2மத் 27:45வெளி 16:10
தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும்,
வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
கடுமையான இருளும் யோபு 10:21-22யோபு 28:3எரே 2:6சங் 23:4உபா 4:11எசேக் 34:12ஏசா 9:2எரே 13:16
மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி,
மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
அந்த இரவை இருள் பிடிப்பதாக;
வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. ஏசா 13:20-22ஏசா 24:8எரே 7:34வெளி 18:22-23
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், யோபு 41:1யோபு 41:102 நாளாக 35:25ஆமோ 5:16எரே 9:17-18யோபு 41:25மத் 11:17மாற் 5:38
அதைச் சபிப்பார்களாக.
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, யோபு 41:18எரே 13:16எரே 8:15யோபு 30:26
அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், பிரச 6:3-5ஆதி 20:18எரே 20:171 சாமு 1:5பிரச 11:10ஆதி 29:31யோபு 10:1யோபு 23:2
என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
நான் கர்ப்பத்தில் அழியாமலும், ஏசா 46:3யோபு 10:18-19ஓசி 9:14எரே 15:10சங் 139:13-16சங் 22:9-10சங் 58:8சங் 71:6
கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
என்னை ஏந்திக்கொள்ள மடியும், ஆதி 30:3ஏசா 66:12ஆதி 50:23எசேக் 16:4-5
நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
அப்படியில்லாதிருந்தால், பிரச 9:10யோபு 14:10-12யோபு 21:13பிரச 6:3-5யோபு 10:22யோபு 17:13யோபு 19:27யோபு 21:23
அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும், யோபு 15:28ஏசா 14:10-16சங் 49:14சங் 89:481 இராஜா 11:43பிரச 8:8எசேக் 26:20எசேக் 27:18-32
அல்லது, பொன்னை உடையவர்களும், 1 இராஜா 10:27யோபு 22:25செப்ப 1:18ஏசா 2:7யோபு 12:21யோபு 27:16-17எண் 22:18சகரி 9:3
தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், சங் 58:8பிரச 6:31 கொரி 15:8
வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; வெளி 14:13யோபு 17:16எபி 4:11எபி 4:9ஏசா 57:1-2யோபு 14:132 தெச 1:6-7லூக் 12:4
பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; யோபு 39:7யாத் 5:15-19யாத் 5:6-8ஏசா 14:3-4நியாயாதி 4:3
ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; பிரச 12:7பிரச 8:8யோபு 30:23பிரச 12:5எபி 9:27லூக் 16:22-23சங் 49:14-20சங் 49:2
அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, எரே 20:18யோபு 7:15-161 சாமு 1:10நீதி 31:62இராஜா 4:27யோபு 3:16யோபு 33:30யோபு 6:9
புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, வெளி 9:6நீதி 2:41 இராஜா 19:4யோனா 4:3யோனா 4:8எண் 11:15
அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும்,
மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, யோபு 19:8புலம் 3:7ஏசா 40:27ஓசி 2:6யோபு 12:14யோபு 19:12புலம் 3:9சங் 31:8
தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; சங் 102:9சங் 42:3-4சங் 80:5சங் 38:8ஏசா 59:11யோபு 33:20யோபு 6:7யோபு 7:19
என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; யோபு 1:5யோபு 30:15யோபு 31:23
நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
எனக்குச் சுகமுமில்லை, யோபு 7:14யோபு 27:9சங் 143:11
நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை;
எனக்குத் துன்பமே வந்தது.