பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? யோபு 14:5-6சங் 39:4யோபு 5:7யோபு 14:13-14லேவி 25:50உபா 15:18பிரச 8:8ஏசா 40:2
அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
ஒரு வேலையாள் நிழலை விரும்பி, லேவி 19:13உபா 24:15யாக் 5:4மல்கி 3:5எரே 6:4சங் 119:131சங் 143:6
ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, சங் 6:6பிரச 1:14யோபு 16:7யோபு 29:2சங் 39:5
பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? உபா 28:67யோபு 7:13-14சங் 77:4யோபு 30:17சங் 130:6சங் 6:6யோபு 17:12ஏசா 54:11
இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி,
விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது.
என் உடல் பூச்சிகளினாலும், ஏசா 14:11யோபு 17:14யோபு 2:7-8அப் 12:23எசேக் 20:43ஏசா 1:6ஏசா 66:24யோபு 19:26
அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது;
என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; யோபு 9:25யோபு 17:15யோபு 17:111 பேது 1:24ஏசா 38:12-13ஏசா 40:6-7யோபு 16:22நீதி 14:32
அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், யாக் 4:14சங் 78:39எரே 15:15சங் 89:47யோபு 10:21-22சங் 74:18சங் 89:50ஆதி 42:36
என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; யோபு 20:9சங் 37:36யோபு 8:18யோபு 13:27யோபு 14:3சங் 39:11சங் 90:8-9
உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
மேகம் பறந்துபோகிறதுபோல, 2 சாமு 14:14யோபு 10:21யோபு 30:152 சாமு 12:23யோபு 14:10-14யோபு 16:22சங் 39:13ஏசா 38:11
பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான்.
இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், யோபு 8:18யோபு 20:9சங் 103:16யோபு 27:21யோபு 27:23
அவனுடைய இடம் இனி அவனை அறியாது.
ஆகையால் நான் என் வாயை அடக்காமல், 1 சாமு 1:10சங் 40:9யோபு 10:1ஏசா 38:15ஏசா 38:17யோபு 21:25யோபு 6:262 கொரி 2:4
என் ஆவியின் வேதனையினால் பேசி,
என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? எசேக் 32:2-3யோபு 38:6-11யோபு 7:17புலம் 3:7யோபு 41:1-34
நான் ஒரு திமிங்கிலமோ?
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், சங் 6:6சங் 77:4யோபு 7:3-4யோபு 9:27-28
என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால்,
நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, தானி 2:1ஆதி 40:5-7ஆதி 41:8நியாயாதி 7:13-14மத் 27:19
தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்.
அதினால் என் ஆத்துமா, 2 சாமு 17:23மத் 27:5
நெருக்கப்பட்டு சாகிறதையும்,
என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட,
மரணத்தையும் விரும்புகிறது.
இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; 1 இராஜா 19:4யோபு 10:1யோபு 14:6யோபு 9:21யோபு 10:20யோபு 6:9யோனா 4:8சங் 39:13
எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்;
என் நாட்கள் மாயைதானே.
மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், எபி 2:6சங் 8:4சங் 144:3யோபு 34:14-15யோபு 7:121 சாமு 24:14
அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், 1 பேது 1:7ஏசா 38:12-13எரே 9:7தானி 12:10உபா 8:16யாத் 20:5ஆதி 22:1ஏசா 26:14
நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும்,
அவன் எம்மாத்திரம்?
நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், யோபு 9:18யோபு 14:6சங் 13:1-3சங் 6:3சங் 94:3வெளி 6:10
என்னை விடாமலும் இருப்பீர்.
மனிதர்களைக் காப்பவரே, புலம் 3:12யோபு 3:24யோபு 7:11-12சங் 36:6யோபு 13:26யோபு 14:16யோபு 16:12-14யோபு 22:5
பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன?
நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல்,
நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன?
என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? தானி 12:2யோபு 10:141 யோவா 1:9பிரச 12:7ஏசா 64:9புலம் 5:20-221 யோவா 3:52 சாமு 24:10
இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்;
விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.