விடுதலையின் வருடம்
“ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக. உபா 31:10யாத் 23:10-11லேவி 25:2-4யாத் 21:2லூக் 4:18-19ஏசா 61:1-3எரே 36:8-18 விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக. யாக் 2:13லூக் 6:34-38லூக் 7:42மத் 18:25-35மத் 6:12நெகே 5:7-11ஆமோ 8:4-6ஏசா 58:3 அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக. உபா 23:201 கொரி 6:6-7யாத் 22:25கலா 6:10யோவா 8:35மத் 17:25-26 எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்., ஏசா 58:10-11நீதி 28:27உபா 14:29நீதி 11:24-25உபா 28:1-8உபா 28:11நீதி 14:21 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். உபா 28:1-15உபா 11:13-15ஏசா 1:19-20யோசு 1:7லேவி 26:3-14பிலி 1:27சங் 19:11உபா 4:9 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை. உபா 28:12-131 இராஜா 4:21லூக் 6:35நீதி 22:7நெகே 9:27சங் 37:21எஸ்றா 4:20சங் 112:5 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், உபா 15:91 யோவா 3:16-17நீதி 21:13யாக் 2:15-16மத் 18:30 அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. லூக் 6:34மத் 5:42 விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். உபா 24:15மத் 20:15யாத் 22:23யாக் 5:9எரே 17:10மாற் 7:21-22யாத் 3:7யாக் 5:4 அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். நீதி 22:9உபா 14:29எபி 13:161 தீமோ 6:18-19உபா 24:19ஏசா 58:10சங் 41:1-2ஏசா 32:8 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். மத் 26:11மாற் 14:7யோவா 12:8உபா 15:81 யோவா 3:16-18நீதி 22:2அப் 4:32-35லூக் 12:33
வேலைக்காரர்களின் விடுதலை
“உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக. எரே 34:14யாத் 21:2-6லேவி 25:39-41உபா 15:1யோவா 8:35-36 அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல், எரே 22:13மல்கி 3:5நீதி 3:27-28கொலோ 4:1யாத் 3:21ஆதி 31:42லேவி 25:42-44 உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. 1 கொரி 16:2அப் 20:35நெகே 8:10நீதி 10:22சங் 68:10 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். உபா 16:121 யோவா 3:161 யோவா 4:9-11உபா 5:14-15எபே 2:12எபே 4:32யாத் 20:2ஏசா 51:1 ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், யாத் 21:5-6சங் 40:8சங் 40:6 நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். 1 சாமு 1:22லேவி 25:39-42 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். ஏசா 16:14ஏசா 21:16லூக் 17:7-8
முதற்பிறந்த மிருகங்கள்
“உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக. யாத் 13:2யாத் 13:12உபா 12:17உபா 16:14லேவி 27:26எண் 18:15எண் 18:17உபா 12:5-7 யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள். உபா 12:17உபா 12:5-7உபா 14:23 அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம். உபா 17:1மல்கி 1:7-8லேவி 22:19-25 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம். உபா 12:15-16உபா 12:21-22 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக. உபா 12:16உபா 12:23லேவி 7:261 சாமு 14:32எசேக் 33:25