ஞானத்தினால் தொடர்ந்துவரும் பலன்கள்
என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; யோவா 14:21-24நீதி 4:5உபா 6:6-9சங் 119:16நீதி 1:8சங் 119:34சங் 119:93உபா 8:1
உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், எபே 6:1-3நீதி 4:10சங் 91:16நீதி 9:11சங் 128:6ரோம 15:13சங் 21:4சங் 119:165
நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; 2 கொரி 3:3நீதி 7:3எபி 10:16உபா 11:18-21மல்கி 2:6நீதி 6:21எபே 5:1-2எபே 5:9
நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி,
அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். லூக் 2:521 சாமு 2:26ரோம 14:18சங் 111:10ஆதி 39:2-4ஆதி 39:21அப் 2:47தானி 1:9
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், சங் 37:5எரே 17:7-8நீதி 28:26சங் 37:3சங் 62:8ஏசா 26:3-4ஏசா 12:2சங் 37:7
உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; நீதி 16:3சங் 32:8பிலி 4:6நீதி 16:9எரே 10:23யாக் 1:5ஏசா 30:21ஏசா 48:17
அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யோபு 28:28ரோம 12:16நீதி 26:12நீதி 16:6பிரச 12:13யோபு 1:1ஏசா 5:21சங் 34:11-14
யெகோவாவுக்குப் பயந்து,
தீமையை விட்டு விலகு.
அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், நீதி 4:22சங் 147:3நீதி 16:24யோபு 21:24எசேக் 16:4-5ஏசா 1:6எரே 30:12-13
உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும்.
உன்னுடைய பொருளாலும், உபா 26:2-151 கொரி 16:2யாத் 23:19நீதி 14:31பிலி 4:17-18மல்கி 3:8-10யாத் 22:292 கொரி 8:2-3
உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.
அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; நீதி 19:17உபா 28:8நீதி 11:24-25யோவே 2:24நீதி 22:92 கொரி 9:6-11பிரச 11:1-2ஆகா 2:19
உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, யோபு 5:17வெளி 3:19எபி 12:5-12சங் 94:12ஏசா 40:30-311 கொரி 11:322 கொரி 4:16-172 கொரி 4:1
அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, உபா 8:5வெளி 3:19நீதி 29:17நீதி 13:24சங் 103:13
யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.
ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், நீதி 8:32-35நீதி 4:5-9பிரச 9:15-181 இராஜா 10:1-91 இராஜா 10:23-24நீதி 2:4நீதி 18:1
புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், நீதி 16:16நீதி 8:19யோபு 28:13-19வெளி 3:182 நாளாக 1:11-12மத் 16:26நீதி 2:4நீதி 8:10-11
அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.
முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீதி 8:11யோபு 28:18நீதி 31:10சங் 73:25-26ரோம 8:18நீதி 20:15சங் 63:3மத் 13:44-46
நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.
அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், நீதி 3:22 கொரி 6:10நீதி 22:41 இராஜா 3:131 தீமோ 4:8மாற் 10:301 கொரி 3:21-23நீதி 4:6-10
அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
அதின் வழிகள் இனிதான வழிகள், லூக் 1:79ஏசா 26:3பிலி 4:8-9நீதி 2:10சங் 119:165மத் 11:28-30நீதி 22:18சங் 112:1
அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், நீதி 11:30நீதி 15:4வெளி 2:7ஆதி 2:9ஆதி 3:22நீதி 13:12வெளி 22:2
அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, சங் 104:24எரே 10:12யோவா 1:3எரே 51:15சங் 136:5நீதி 8:27-29
புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.
அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆதி 7:11சங் 65:9-12ஆதி 1:9ஆதி 27:28யோபு 36:27-28யோபு 38:26-28யோபு 38:8-11உபா 33:28
ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; யோசு 1:8உபா 6:6-9உபா 32:46-47நீதி 4:21எபி 2:1-3உபா 4:91 யோவா 2:27யோவா 8:31
மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.
அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், நீதி 4:22நீதி 1:9ஏசா 38:16யோவா 12:49-50
உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.
அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், நீதி 10:9நீதி 4:12சங் 121:3சங் 91:11-12சங் 121:8சங் 37:23-24சங் 37:31நீதி 2:8
உன்னுடைய கால் இடறாது.
நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; சங் 3:5சங் 4:8நீதி 6:22யோபு 11:19சங் 121:4-7எரே 31:26லேவி 26:6சங் 127:2
நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
திடீரென வரும் திகிலும், ஏசா 41:10-14சங் 112:71 பேது 3:14சங் 91:5ஏசா 8:12-13யோவா 14:1யோபு 11:13-15லூக் 21:18-28
துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.
யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, நீதி 14:26சங் 91:31 சாமு 2:9சங் 91:9-10ஆப 3:17-18
உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. கலா 6:10யாக் 2:15-16ரோம 13:7யாக் 5:4ஆதி 31:29மீகா 2:1தீத் 2:14
உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: லேவி 19:13உபா 24:12-152 கொரி 8:11பிரச 9:101 தீமோ 6:18பிரச 11:62 கொரி 9:3நீதி 27:1
நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற நீதி 6:14மீகா 2:1-2நீதி 16:29-30சங் 35:20சங் 55:20சங் 59:3எரே 18:18-20நீதி 6:18
உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, 2 தீமோ 2:24நீதி 29:22ரோம 12:18-21நீதி 18:6நீதி 25:8-9நீதி 17:14மத் 5:39-411 கொரி 6:6-8
காரணமின்றி அவனோடு வழக்காடாதே.
கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; நீதி 24:1சங் 37:1பிரச 5:8கலா 5:21நீதி 23:17நீதி 12:12நீதி 24:19-20நீதி 1:15-18
அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; சங் 25:14நீதி 11:20யோவா 15:15நீதி 17:15நீதி 8:13யோவா 14:21-24மத் 13:11சங் 18:26
நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.
துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, சங் 37:22லேவி 26:14-46யோபு 8:6-7சங் 91:10மல்கி 2:2உபா 7:26நீதி 21:122 சாமு 6:11
நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
இகழ்வோரை அவர் இகழுகிறார்; யாக் 4:61 பேது 5:5சங் 138:6நீதி 9:12நீதி 21:24ஏசா 57:15நீதி 9:7-8நீதி 19:29
தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; சங் 132:18ஏசா 65:13-151 சாமு 2:30தானி 12:2-3சங் 73:24நீதி 13:8நீதி 4:8
மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.