யோபு 38

Job 38
அத்தியாயம் 38

யெகோவாவின் வார்த்தைகள்

அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: யோபு 40:61 இராஜா 19:112இராஜா 2:11யாத் 19:16-19யோபு 37:1-22இராஜா 2:1உபா 4:11-12எசேக் 1:4

“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? யோபு 42:3யோபு 35:161 தீமோ 1:7யோபு 34:35யோபு 27:11யோபு 12:3யோபு 23:4-5யோபு 24:25

இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; யோபு 40:7யாத் 12:11எரே 1:171 இராஜா 18:461 பேது 1:13யோபு 13:15யோபு 13:22யோபு 23:3-7

நான் உன்னைக் கேட்பேன்;

நீ எனக்குப் பதில் சொல்

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? சங் 104:5எபி 1:10நீதி 30:4எபி 1:2ஆதி 1:1சங் 102:25நீதி 8:22நீதி 8:29-30

நீ அறிவாளியானால் அதைச் சொல்.

அதற்கு அளவு குறித்தவர் யார்? ஏசா 40:12யோபு 11:9சகரி 2:1-22 கொரி 10:16ஏசா 34:11ஏசா 40:22யோபு 28:25நீதி 8:27

அதின்மேல் நூல்போட்டவர் யார்?

இதை நீ அறிந்திருந்தால் சொல்.

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? யோபு 26:7சங் 104:5சங் 93:12 பேது 3:5ஏசா 28:16சங் 118:22சகரி 12:1எபே 2:20-21

அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?

அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, வெளி 5:11யோபு 1:6எஸ்றா 3:11-12வெளி 22:16யோபு 2:1சங் 104:4வெளி 2:28சகரி 4:7

தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.

கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, ஆதி 1:9எரே 5:22நீதி 8:29சங் 104:8-9சங் 33:7யோபு 38:10

அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், ஆதி 1:2

நான் அதற்கு எல்லையைக் குறித்து, எரே 5:22சங் 104:9யோபு 26:10சங் 33:7ஆதி 1:9-10ஆதி 9:15

அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

இதுவரை வா, மீறி வராதே; சங் 89:9நீதி 8:29மாற் 4:39-41சங் 65:6-7லூக் 8:32-33ஏசா 27:8யோபு 2:6சங் 93:3-4

உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, சங் 74:16ஆதி 1:5சங் 148:3-5யோபு 8:92 பேது 1:19லூக் 1:78சங் 136:7-8யோபு 15:7

அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க,

உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, யோபு 37:3சங் 104:35யாத் 14:27யோபு 24:13-17சங் 104:21-22சங் 139:9-12சங் 19:4-6

சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; சங் 104:6சங் 104:2

அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.

துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; சங் 10:15யோபு 18:5சங் 37:17நீதி 4:19யாத் 10:21-23எசேக் 30:22யோபு 18:18யோபு 5:14

மேட்டிமையான கை முறிக்கப்படும். நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? நீதி 8:24யோபு 26:5-6சங் 77:19எரே 51:36

மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? சங் 9:13சங் 107:18யோபு 3:5யோபு 12:22சங் 107:10சங் 107:14சங் 23:4ஆமோ 5:8

மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? எரே 31:37சங் 89:11-12வெளி 20:9ஏசா 40:28யோபு 28:24சங் 74:17

இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்.

வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? எசேக் 32:8ஆமோ 4:13உபா 4:19ஆதி 1:14-18ஆதி 1:3-4ஏசா 45:7யோபு 38:12-13மத் 27:45

இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே?

அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? ஆதி 10:19ஆதி 23:17யோபு 26:10

அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? யோபு 15:7யோபு 38:12யோபு 38:4

உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?

உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? யோபு 37:6சங் 135:7யோபு 6:16சங் 33:7

கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?

ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், யோசு 10:11ஏசா 30:30யாத் 9:18எசேக் 13:11-13யோபு 36:13வெளி 16:21யாத் 9:24யோபு 36:31

பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? யோபு 38:12-13யோனா 4:8மத் 24:27

பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, யோபு 28:26சங் 29:3-10யோபு 36:27-28யோபு 37:3-6

இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,

பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், எரே 14:22எபி 6:7-8சங் 107:35ஏசா 35:1-2ஏசா 43:19-20யோபு 36:27சங் 104:10-14சங் 147:8-9

மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து,

வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், சங் 107:35சங் 104:14

இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? எரே 14:22சங் 147:8எரே 10:13நீதி 3:201 இராஜா 17:11 சாமு 12:17-182 சாமு 1:21ஆமோ 4:7

உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? சங் 147:16-17யோபு 37:10யோபு 38:8யோபு 6:16

ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்?

தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, யோபு 37:10

ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே.

அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? ஆமோ 5:8யோபு 9:9

அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?

நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? யோபு 38:312இராஜா 23:5யோபு 9:9

துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? எரே 31:35-36ஆதி 8:22ஆதி 1:16எரே 33:25யோபு 38:12-13சங் 148:6சங் 119:90-91

அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?

ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று யோபு 22:111 சாமு 12:18ஆமோ 5:8யாக் 5:18யோபு 36:27-28சகரி 10:1

உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?

நீ மின்னல்களை வரவழைத்து, யோபு 36:32யோபு 37:31 சாமு 22:122இராஜா 1:102இராஜா 1:14யாத் 9:23-25யாத் 9:29ஏசா 6:8

அவைகள் புறப்பட்டுவந்து: இதோ,

இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?

மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? யோபு 32:8சங் 51:6பிரச 2:26நீதி 2:6யாக் 1:5யாத் 31:3யோபு 9:4யாக் 1:17

உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? சங் 147:4ஆதி 15:5ஆதி 8:1ஆதி 9:15

தூசியானது பரவலாகவும்,

மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,

வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?

நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, சங் 104:21யோபு 4:10-11சங் 145:15-16சங் 34:10

சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, யோபு 37:8ஆதி 49:9எண் 23:24எண் 24:9

அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, லூக் 12:24மத் 6:26சங் 147:9சங் 104:27-28

ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது,

அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?