ஆதியாகமம் 8

Genesis 8
அத்தியாயம் 8

பெரு வெள்ளத்தின் முடிவு

தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது. ஆதி 30:22ஆதி 19:29சங் 136:23யாத் 2:241 சாமு 1:19சங் 106:4ஆமோ 8:7யாத் 14:21 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது. ஆதி 7:11மத் 8:26-27நீதி 8:28யோபு 37:11-13யோபு 38:37யோனா 2:3மத் 8:9 தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது. ஆதி 7:24ஆதி 7:11 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது. 2இராஜா 19:37ஏசா 37:38எரே 51:27ஆதி 7:17-19 பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. ஆதி 7:11 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஆதி 6:16தானி 6:10 ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது. 1 இராஜா 17:41 இராஜா 17:6யோபு 38:41சங் 147:9லேவி 11:15 பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான். உன்னத 2:14ஆதி 8:10-12மத் 10:16உன்னத 1:15உன்னத 2:11-12 பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான். மத் 11:28சங் 116:7உபா 28:65யோவா 16:33ஏசா 60:8எசேக் 7:16 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான். ஆதி 7:4ஆதி 7:10ஆதி 8:12ஏசா 26:8ஏசா 8:17சங் 40:1ரோம 8:25 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான். நெகே 8:15ரோம 10:15சகரி 4:12-14 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை. ஆதி 8:10ஏசா 25:9ஏசா 26:8ஏசா 30:18ஆதி 2:2-3ஏசா 8:17யாக் 5:7-8சங் 130:5-6 அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது. ஆதி 7:11 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. ஆதி 7:13-14ஆதி 7:11

நோவா யெகோவாவை வழிபடுதல்

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள். ஆதி 7:13சங் 121:8சகரி 9:11அப் 16:37-39தானி 9:25-26ஆதி 7:1ஆதி 7:7யோசு 3:17 உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார். ஆதி 1:22ஆதி 9:1எரே 31:27-28சங் 107:38ஆதி 1:28ஆதி 7:14-15ஆதி 9:7சங் 144:13-14 அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள். சங் 121:8 பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன. அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். எபி 13:15-16ரோம 12:1ஆதி 22:9ஆதி 12:7-81 பேது 2:9லேவி 11:1-471 பேது 2:5யாத் 10:25 சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை. 2 கொரி 2:15எபே 5:2ஆதி 6:5எரே 17:9ஏசா 54:9-10ரோம 3:23பிரச 7:20எசேக் 20:41 பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். யாக் 5:7எரே 5:24சங் 74:16-17எரே 31:35உன்னத 2:11-12எரே 33:20-26யாத் 34:21ஏசா 54:8-9