நீதிமொழிகள் 21

Proverbs 21
அத்தியாயம் 21

யெகோவாவின் ஆளுகை

ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; நீதி 16:9எஸ்றா 6:22நீதி 20:24அப் 7:10நீதி 16:1எஸ்றா 7:27-28தானி 4:35சங் 106:46

அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; நீதி 16:2லூக் 16:15நீதி 16:25எரே 17:10நீதி 30:121 சாமு 16:7நீதி 24:12யாக் 1:22

யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.

பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம். 1 சாமு 15:22ஓசி 6:6மீகா 6:6-8நீதி 15:8மாற் 12:33ஏசா 1:11-17எரே 7:21-23சங் 50:8

மேட்டிமையான பார்வையும், 1 பேது 5:5நீதி 6:17ஏசா 2:17லூக் 18:14நீதி 8:13நீதி 15:8நீதி 21:27ஏசா 3:16

அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே. ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், நீதி 10:4நீதி 13:41 தெச 4:11-12எபே 4:28நீதி 27:23-27நீதி 14:29நீதி 28:22நீதி 20:21

பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.

பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது நீதி 13:11நீதி 10:2எரே 17:11நீதி 20:21நீதி 8:361 தீமோ 6:9-102 பேது 2:3நீதி 20:14

சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.

துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், நீதி 21:21எபே 5:6மீகா 3:9-12நீதி 22:22-23சங் 7:16சகரி 5:3-4எசேக் 18:18எசேக் 22:13-14

அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.

குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; 1 கொரி 3:31 யோவா 2:291 யோவா 3:3தானி 12:10நீதி 2:15சங் 14:2-31 பேது 1:22-23அப் 15:9

சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.

சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, நீதி 19:13நீதி 21:19நீதி 25:24நீதி 27:15-16நீதி 12:4நீதி 17:1நீதி 15:17

வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; 1 யோவா 2:16மீகா 3:2-3நீதி 3:291 கொரி 10:6ஏசா 32:6-8மாற் 7:21-22சங் 36:41 சாமு 25:8-11

அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.

பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; நீதி 19:25நீதி 18:15அப் 5:5நீதி 9:9உபா 21:21நீதி 18:11 கொரி 10:6-11உபா 13:11

ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; நீதி 14:11சங் 107:43சங் 37:35-362 பேது 3:6-7நீதி 14:321 கொரி 10:52 பேது 2:4-9ஆமோ 4:11

துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், மத் 6:14நீதி 1:28நீதி 28:27யாக் 2:13-16எரே 34:16-17மத் 18:30-35மத் 7:2ஏசா 1:15-17

தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; நீதி 19:6நீதி 18:161 சாமு 25:35மத் 6:3-4நீதி 17:8ஆதி 32:20ஆதி 43:11நீதி 17:23

மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.

நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், நீதி 10:29மத் 7:23பிரச 3:12ஏசா 64:5யோபு 29:12-17மத் 13:41-42சங் 40:8யோவா 4:34

அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும்.

விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். எபி 10:38சங் 125:51 யோவா 2:19எபி 10:26-27சங் 49:14செப்ப 1:6எபே 2:1எபி 6:4-6

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; நீதி 23:211 தீமோ 5:62 தீமோ 3:4நீதி 5:10-11நீதி 21:20லூக் 15:13-16லூக் 16:24-25

மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.

நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், நீதி 11:8ஏசா 43:3-4ஏசா 53:4-51 பேது 3:18ஏசா 55:8-9

செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.

சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட நீதி 21:9சங் 55:6-7சங் 120:5-6எரே 9:2

வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மத் 25:3-4பிரச 5:19சங் 112:3பிரச 7:11நீதி 15:6லூக் 15:14நீதி 10:22சங் 23:5

மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் மத் 5:61 கொரி 15:58நீதி 22:41 தீமோ 6:11எபி 12:14நீதி 15:92 தீமோ 2:22ஏசா 51:1

நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, பிரச 7:19நீதி 24:5பிரச 9:13-182 சாமு 20:16-222 சாமு 5:6-9

அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான்.

தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் நீதி 13:3நீதி 18:21நீதி 17:27-28யாக் 1:26நீதி 12:13நீதி 10:19யாக் 3:2-13

தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், சங் 1:1பிரச 7:8-9மத் 2:16நீதி 1:22நீதி 18:12நீதி 19:29எஸ்த 3:5-6ஏசா 16:6

அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.

சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், நீதி 13:4மத் 25:26நீதி 12:24நீதி 19:24நீதி 12:27நீதி 15:19நீதி 26:16நீதி 24:30-34

அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.

அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; சங் 37:26அப் 20:33-35சங் 112:9எபே 4:281 தெச 2:5-92 கொரி 8:7-9லூக் 6:30-36மத் 5:42

நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.

துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; ஏசா 66:3மத் 23:13நீதி 15:8எரே 6:201 சாமு 15:21-23ஆமோ 5:21-22ஏசா 1:11-161 சாமு 13:12-13

அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.

பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; 2 கொரி 4:13நீதி 19:5நீதி 19:9உபா 19:16-19நீதி 25:182 கொரி 1:17-20அப் 12:15யாத் 23:1

செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான்.

துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; 1 தெச 3:11ஆகா 1:7நீதி 11:5எசேக் 18:28ஆகா 2:18-19எரே 44:16-17எரே 5:3எரே 8:12

செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.

யெகோவாவுக்கு விரோதமான அப் 5:39நீதி 19:21எரே 9:23ஏசா 14:271 கொரி 3:19-20ஏசா 8:9-10அப் 4:27-28ஏசா 46:10-11

ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; சங் 20:7ஏசா 31:1சங் 33:17-18சங் 147:10சங் 3:3சங் 68:20பிரச 9:11சங் 3:8

வெற்றியோ யெகோவாவால் வரும்.