இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். சங் 10:4சங் 53:1ரோம 3:10-12ரோம 1:21-32சங் 92:6எபே 2:1-3ஆதி 6:5மத் 12:34
அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, ரோம 3:11எபி 11:6சங் 33:13-14சங் 102:19-20ஆதி 6:12மத் 13:152 நாளாக 19:3தானி 12:10
யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; ரோம 3:10-12ஏசா 53:6ஏசா 64:6ரோம 3:23சங் 14:1ஏசா 59:13-15ஏசா 59:7-8யோபு 14:4
நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? சங் 79:6எரே 10:25சங் 82:5ஏசா 64:7ரோம 1:28ஆமோ 8:4எபே 4:17-18சங் 27:2
அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;
அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; சங் 112:2சங் 73:15சங் 24:6ஏசா 43:1-21 பேது 2:9எஸ்த 8:7யாத் 15:16ஏசா 41:10
தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், சங் 9:9சங் 4:2சங் 42:10தானி 3:15எசேக் 35:10ஏசா 37:10-11மத் 27:40-43நெகே 4:2-4
நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; சங் 53:6சங் 85:1
யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும்,
இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.