தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; சங் 10:4சங் 14:1-7லூக் 12:20ரோம 3:10-31ரோம 1:281 இராஜா 14:24யோபு 15:16சங் 10:11
அவர்கள் தங்களைக் கெடுத்து,
அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, ஏசா 55:62 நாளாக 15:2எரே 16:17சங் 27:8எரே 23:24சங் 111:102 நாளாக 19:3சங் 33:13-14
தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; ரோம 3:12ஏசா 64:6ஏசா 53:6சங் 14:3எரே 8:5-63 யோவா 1:111 யோவா 2:292 கொரி 7:1
நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? எரே 4:22எரே 10:25சங் 27:2ஏசா 27:11சங் 94:8மத் 23:17-39வெளி 17:16
அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே;
அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், நீதி 28:1லேவி 26:36எசேக் 6:5எரே 6:30சங் 141:7லேவி 26:17சங் 83:16-171 சாமு 14:15
பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்;
தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; எரே 30:18சங் 14:7ஏசா 12:6ஏசா 12:1-3ஏசா 14:32நெகே 12:43சங் 106:46-48சங் 126:1-4
தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.