எசேக்கியேல் 35

Ezekiel 35
அத்தியாயம் 35

ஏதோமிற்கு எதிரான தீர்க்கதரிசனம்

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 பேது 1:21எசேக் 21:1எசேக் 22:1எசேக் 34:1 மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, எசேக் 25:8எசேக் 6:2ஆதி 32:32 நாளாக 20:102 நாளாக 20:22-232 நாளாக 25:11-14ஆமோ 1:11-12உபா 2:5 அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு எதிராக வந்து, என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவேன். எரே 6:12எசேக் 35:7எசேக் 6:14எரே 15:6எசேக் 21:3எசேக் 25:13எசேக் 29:10எசேக் 29:3 உன்னுடைய பட்டணங்களை வனாந்திரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய். எசேக் 35:9மல்கி 1:3-4யாத் 14:4யாத் 9:14எசேக் 35:12எசேக் 6:6-7யோவே 3:19 நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் மக்களுடைய அக்கிரமம் நிறைவேறும்போது அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே வாளின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால், சங் 137:7ஒபதி 1:10-16ஆமோ 1:11எசேக் 21:25எசேக் 21:29எசேக் 25:12எசேக் 25:15ஆதி 27:41-42 நான் இரத்தப்பழிக்கு உன்னை ஒப்படைப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காததினால் இரத்தம் பின்தொடரும். ஏசா 63:2-6ஒபதி 1:15வெளி 18:24மத் 7:2சங் 109:16-17வெளி 16:5-7வெளி 18:6வெளி 19:2-3 நான் சேயீர்மலையைப் பாழும் பாலைவன இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்பவர்கள் இல்லாதபடி அழியச்செய்து, எசேக் 29:11எசேக் 35:3நியாயாதி 5:6-72 நாளாக 15:5-6எசேக் 33:28எசேக் 35:9 அதின் மலைகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்புவேன்; உன்னுடைய மேடுகளிலும் உன்னுடைய பள்ளத்தாக்குகளிலும் உன்னுடைய எல்லா ஆறுகளிலும் வாளால் வெட்டப்பட்டவர்கள் விழுவார்கள். எசேக் 31:12எசேக் 32:4-5எசேக் 39:4-5ஏசா 34:2-7 நீ என்றைக்கும் பாலைவனமாக இருக்கும்படி செய்வேன்; உன்னுடைய பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 25:13எசேக் 35:4எசேக் 6:7மல்கி 1:3-4எசேக் 36:11எசேக் 7:4எசேக் 7:9எரே 49:13 இரண்டு இனத்தார்களும் இரண்டு தேசங்களும் கர்த்தரிடத்தில் இருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சொந்தமாக்கிக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால், எசேக் 36:5எசேக் 48:35சங் 83:4-12எசேக் 36:2சங் 48:1-3ஏசா 12:6ஒபதி 1:13சங் 132:13-14 நீ அவர்கள்மேல் வைத்த வஞ்சத்தினால் செய்த உன்னுடைய கோபத்திற்குத்தக்கதாகவும், உன்னுடைய பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்து, யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் உன்னை நியாயம்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். மத் 7:2சங் 9:16ஆமோ 1:11சங் 137:7சங் 73:17-18எசேக் 25:14யாக் 2:13 இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாகச் சொன்ன உன்னுடைய நிந்தனைகளையெல்லாம் யெகோவாகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய். எசேக் 36:2சங் 83:12எசேக் 35:9எசேக் 6:7எரே 50:7சங் 94:9-10 நீங்கள் உங்களுடைய வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்களுடைய வார்த்தைகளைப் பெருகச்செய்தீர்கள்; அதை நான் கேட்டேன். தானி 11:361 சாமு 2:3எசேக் 35:12ஏசா 36:20எரே 29:232 நாளாக 32:152 நாளாக 32:192இராஜா 19:28 பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஏசா 14:7-8ஏசா 65:13-15எரே 51:48 இஸ்ரவேல் மக்களின் தேசம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே நடக்கச்செய்வேன்; சேயீர்மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்களென்று சொன்னார் என்று சொல்லு. எசேக் 35:3-4ஏசா 34:5-6புலம் 4:21ஒபதி 1:12ஒபதி 1:15சங் 137:7எசேக் 35:9எசேக் 36:2-5