எசேக்கியேல் 26

Ezekiel 26
அத்தியாயம் 26

தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எசேக் 20:1எசேக் 1:2எசேக் 8:1எரே 39:2 மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால், ஏசா 23:1-18எசேக் 36:2எரே 25:22யோவே 3:42 சாமு 5:11ஆமோ 1:9-10எசேக் 25:10எசேக் 25:2-3 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன். எரே 51:42ஏசா 5:30எசேக் 27:32-34மீகா 4:11எசேக் 21:3எசேக் 27:26எசேக் 28:22எசேக் 38:3 அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் மதில்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இல்லாமல் விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன். ஆமோ 1:10ஏசா 23:11எசேக் 26:9எசேக் 24:7-8எசேக் 26:12எரே 5:10லேவி 14:41-45சகரி 9:3 அது வலைகளை விரிக்கிற இடமாக கடலின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அது தேசங்களுக்குக் கொள்ளையாகும். எசேக் 29:19எசேக் 25:7எசேக் 26:19எசேக் 27:32எசேக் 47:10எசேக் 26:14 வெளியில் இருக்கிற அதின் மகள்களோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 16:46எசேக் 26:8எசேக் 16:48எசேக் 25:11எசேக் 25:14எசேக் 25:17எசேக் 25:5எசேக் 25:7 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன். தானி 2:37எஸ்றா 7:12எசேக் 23:24நாகூ 2:3-4ஓசி 8:10ஏசா 10:8எரே 25:9எரே 52:32 அவன் வெளியில் இருக்கிற உன்னுடைய மகள்களை வாளினால் கொன்று, உனக்கு விரோதமாக மதில்களைக் கட்டி அணைபோட்டு, கேடயங்களை எடுத்து, எசேக் 21:22எரே 32:24எரே 52:4எரே 6:62 சாமு 20:15 உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான். 2 நாளாக 26:15 அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும். எசேக் 26:15எசேக் 27:28எரே 47:3எசேக் 26:7எரே 4:13யோசு 6:20யோசு 6:5நாகூ 2:3-4 தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். ஏசா 26:5ஏசா 5:28ஆப 1:8எரே 43:13எரே 51:27 அவர்கள் உன்னுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடி, மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன்னுடைய கல்லுகளையும், மரங்களையும், மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள். ஏசா 23:82 நாளாக 32:27ஆமோ 5:11சகரி 9:3-42 நாளாக 36:10தானி 11:8எசேக் 26:5எசேக் 27:3-36 உன்னுடைய பாட்டுகளின் சத்தத்தை ஓயச்செய்வேன்; உன்னுடைய சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை. ஏசா 23:16எரே 7:34ஏசா 14:11ஏசா 24:8-9எரே 16:9எரே 25:10ஆமோ 6:4-7எசேக் 28:13 உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற இடமாக இருப்பாய்; இனிக் கட்டப்படமாட்டாய்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். யோபு 12:14மல்கி 1:4உபா 13:16எசேக் 26:4-5ஏசா 14:27எண் 23:19எசேக் 17:21-24எசேக் 21:32 தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ? எசேக் 27:35எரே 49:21எசேக் 26:18எசேக் 31:16எசேக் 27:28எசேக் 32:10எபி 12:26-27ஏசா 2:19 கடலரசர் எல்லோரும் தங்களுடைய சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்களுடைய சால்வைகளைக் கழற்றி, தங்களுடைய சித்திரத்தையலாடைகளை கழற்றிப்போடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து, உனக்காக வியப்படைவார்கள். எசேக் 32:10ஓசி 11:10யோபு 8:22யோனா 3:61 பேது 5:5ஏசா 3:26சங் 35:26தானி 5:6 அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: ஏசா 14:12எசேக் 19:12 சாமு 1:25-27எசேக் 19:14எசேக் 27:2-36எசேக் 32:16எசேக் 32:2ஏசா 23:4

கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ,

உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,

நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; எசேக் 26:15ஏசா 23:5-7எசேக் 27:28-30எசேக் 27:35ஏசா 23:10-12ஏசா 41:5

நீ அகன்றுபோகும்போது கடலில் உள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: எசேக் 26:3ஏசா 8:7-8தானி 11:40தானி 9:26வெளி 17:15

நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும்,

மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாக நான் உன்மேல் கடலை வரச்செய்யும்போதும்,

ஆரம்பகாலத்தின் மக்களின் அருகில் குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னை இறங்கச்செய்வேன்; லூக் 10:15சங் 27:13எசேக் 28:25-26எசேக் 32:18-32சகரி 2:8ஆமோ 9:2எசேக் 34:1-31எசேக் 39:25-29

நீ குடியேறாமலிருக்க ஆரம்பகாலம் முதற்கொண்டு பாழாய் இருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே

குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னைத் தங்கியிருக்கச்செய்வேன்;

ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.

உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; எசேக் 27:36எசேக் 28:19வெளி 18:21சங் 37:36எசேக் 26:14-16எரே 51:64

நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய்

என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.