ஏசாயா 23

Isaiah 23
அத்தியாயம் 23

தீருவைக்குறித்த தீர்க்கதரிசனம்

தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. யோவே 3:4-8ஆமோ 1:9-10ஆதி 10:4ஏசா 2:16எரே 25:22எரே 47:41 இராஜா 10:221 இராஜா 22:48 தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள். ஏசா 47:5எசேக் 27:3-4எசேக் 27:8-36எசேக் 28:2ஆப 2:20ஏசா 41:1சங் 46:10 சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது. 1 நாளாக 13:5எரே 2:18உபா 11:10எசேக் 27:3-23எசேக் 27:33எசேக் 28:4ஏசா 19:7ஏசா 23:8 சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது. வெளி 18:23எசேக் 26:3-6ஆதி 10:15ஆதி 10:19ஓசி 9:11-14எரே 47:3-4 எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும். யாத் 15:14-16யோசு 2:9-11எசேக் 26:15-21எசேக் 27:29-36எசேக் 28:19வெளி 18:17-19ஏசா 19:16 கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள். ஏசா 23:12ஏசா 16:7ஏசா 21:15ஏசா 23:10ஏசா 23:1-2 ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும். ஏசா 22:2பிரச 10:7ஏசா 32:13ஏசா 47:1-2யோசு 19:29 கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே. உபா 29:24-28எசேக் 28:12-18எசேக் 28:2-6ஏசா 10:8ஏசா 36:9எரே 50:44-45வெளி 18:8 சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார். ஏசா 13:11யாக் 4:6யோபு 40:11-12ஏசா 2:11தானி 4:371 கொரி 1:26-29அப் 4:28எபே 1:11 தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை. 1 சாமு 28:20ஏசா 23:14யோபு 12:21சங் 18:32ஆகா 2:22புலம் 1:6ரோம 5:6 யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் 1 அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து: சகரி 9:3-4யாத் 14:21யாத் 15:8-10எசேக் 26:10எசேக் 26:15-19எசேக் 27:34-35எசேக் 31:16ஆதி 10:15-19 ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார். வெளி 18:22எசேக் 26:13-14ஏசா 23:1-2ஏசா 47:1உபா 28:64-67எசேக் 27:6ஆதி 10:15-19ஆதி 49:13 கல்தேயருடைய 2 தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார். ஆப 1:62 நாளாக 33:112இராஜா 17:242இராஜா 20:12அப் 7:4தானி 4:30எசேக் 26:7-21எசேக் 29:18 தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது. ஏசா 23:1எசேக் 27:25-30ஏசா 2:16ஏசா 23:6வெளி 18:11-19 அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும். எரே 25:22தானி 7:14தானி 8:21எசேக் 27:25எசேக் 29:11ஓசி 2:15எரே 25:9-11எரே 27:3-7 மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு. எரே 30:14நீதி 7:10-12 எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும். நாகூ 3:4எசேக் 27:6-36வெளி 19:21 பேது 5:21 தீமோ 3:31 தீமோ 3:8அப் 15:14உபா 23:18 அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும். சங் 72:10உபா 26:12-14பிலி 4:17-18உபா 12:18-19யாத் 28:36கலா 6:62 நாளாக 2:11-162 நாளாக 2:7-9