எசேக்கியேல் 29

Ezekiel 29
அத்தியாயம் 29

எகிப்திற்கு விரோதமான தீர்க்கதரிசனம்

பாபிலோனின் சிறையிருப்பின் பத்தாம் வருடம் பத்தாம் மாதத்தின் பன்னிரண்டாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எசேக் 26:1எசேக் 29:17எசேக் 20:1எசேக் 1:2எசேக் 40:1எசேக் 8:1 மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: எசேக் 6:2எரே 44:30எரே 46:2-16எசேக் 20:46எசேக் 21:2எசேக் 25:2எசேக் 28:21-22எசேக் 30:1 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, எசேக் 32:2ஏசா 27:1எரே 44:30உபா 8:17எசேக் 29:9-10தானி 4:30-31எசேக் 28:2எசேக் 28:22 உன்னுடைய வாயிலே துறடுகளை மாட்டி, உன்னுடைய நதிகளின் மீன்களை உன்னுடைய செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன்னுடைய நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன்னுடைய நதிகளின் மீன்கள் எல்லாம் உன்னுடைய செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். 2இராஜா 19:28எசேக் 38:4ஆமோ 4:2ஆப 1:14-15ஏசா 37:29யோபு 41:1-2 உன்னையும் உன்னுடைய நதிகளின் எல்லா மீன்களையும் வனாந்திரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன். எசேக் 32:4-6எரே 34:20எரே 7:33எரே 8:2எரே 25:33சங் 110:5-61 சாமு 17:44எசேக் 31:18 அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே. 2இராஜா 18:21ஏசா 36:6யாத் 14:18யாத் 9:14எசேக் 28:22-24எசேக் 28:26ஏசா 20:5-6ஏசா 30:2-7 அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய். ஏசா 36:6எசேக் 17:15-17எரே 17:5-6எரே 37:5-11நீதி 25:19சங் 118:8-9சங் 146:3-4 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் வாளை வரச்செய்து, உன்னில் மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போடுவேன். எசேக் 14:17யாத் 12:12எசேக் 25:13எசேக் 29:19-20எசேக் 30:10எசேக் 30:4எசேக் 32:10-13ஆதி 6:7 எகிப்துதேசம் பாழும் வனாந்திரமுமாகும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்: நைல் நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே. எசேக் 29:3எசேக் 29:10-12நீதி 16:18நீதி 18:12எசேக் 30:13-19எசேக் 30:7-8எரே 43:10-13நீதி 29:23 ஆகையால், இதோ, நான் உனக்கும் உன்னுடைய நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்திரங்களாக்குவேன். எசேக் 30:12யாத் 14:2எசேக் 29:11எசேக் 30:6-9ஆப 3:8எரே 44:1எரே 46:14 மனிதனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருடம் குடியில்லாதிருக்கும். எசேக் 32:13எரே 43:11-122 நாளாக 36:21தானி 9:2எசேக் 30:10-13எசேக் 31:12எசேக் 33:28எசேக் 36:28 எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகச்செய்வேன்; அதின் பட்டணங்கள் வெறுமையாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருடங்கள் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன். எசேக் 30:23எசேக் 30:7எரே 46:19எசேக் 30:26எரே 25:15-19எரே 27:6-11 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருடங்கள் முடியும்போது, நான் எகிப்தியர்களை அவர்கள் சிதறப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு, ஏசா 19:22எரே 46:26 எகிப்தியர்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய பிறப்பின் தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரச்செய்வேன்; அங்கே அவர்கள் முக்கியமில்லாத ராஜ்ஜியமாக இருப்பார்கள். எசேக் 30:14ஏசா 11:11எரே 44:11 நாளாக 1:12ஆதி 10:14 அது இனி தேசங்களின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்ஜியங்களிலும் முக்கியமற்றதாக இருக்கும்; அவர்கள் இனி தேசங்களை ஆளாதபடி அவர்களைக் குறுகிப்போகச்செய்வேன். எசேக் 30:13சகரி 10:11எசேக் 17:14எசேக் 17:6எசேக் 31:2எசேக் 32:2நாகூ 3:8-9தானி 11:42-43 அவர்களின் பின்னேபோய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேலர்கள் எனக்குத் தங்களுடைய அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடி, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாக இல்லாமற்போவார்கள்; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். எசேக் 29:6-7ஓசி 8:13ஏசா 20:5எசேக் 21:23ஏசா 30:1-6ஏசா 64:9எரே 14:10எரே 2:36-37 பாபிலோனின் சிறையிருப்பின் இருபத்தேழாம்வருடம் முதலாம் மாதம் முதலாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எசேக் 29:1எசேக் 1:2எசேக் 24:1 மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன்னுடைய சேனையினிடத்தில் கடும் வேலை வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையானது; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த வேலையினால் அவனுக்கோ அவனுடைய சேனைக்கோ கூலி கிடைக்கவில்லை. எரே 27:6எசேக் 26:7-12எரே 25:9எரே 48:37 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான மக்களைச் சிறைபிடித்து அதின் செல்வத்தைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாக இருக்கும். எசேக் 30:24-25எரே 43:10-13எசேக் 30:10-12எசேக் 32:11எசேக் 30:4எசேக் 29:8-10 அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஏசா 10:6-7எரே 25:9ஏசா 45:1-32இராஜா 10:30 அந்த நாளிலே நான் இஸ்ரவேல் மக்களின் கொம்பை முளைக்கச்செய்து, அவர்களுடைய நடுவிலே தாராளமாகப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வார்கள் என்றார். 1 சாமு 2:10லூக் 21:15சங் 132:17ஆமோ 3:7-8எசேக் 24:27எசேக் 33:22லூக் 1:69சங் 92:10