ஏசாயா 5

Isaiah 5
அத்தியாயம் 5

திராட்சைத்தோட்டத்தைக் குறித்த பாடல்

இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத்தோட்டத்தைக்குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத்தோட்டம் உண்டு. மாற் 12:1லூக் 20:9யோவா 15:1எரே 2:21மத் 21:33சங் 80:8உபா 31:19-22உன்னத 2:16 அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களை அகற்றி, அதிலே உயர்ந்தரக திராட்சைச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டாக்கி, அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. எரே 2:21உபா 32:32-33ஏசா 1:2-41 கொரி 9:7லூக் 13:6-7மாற் 11:13வெளி 14:18-20லூக் 20:10-18 எருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, எனக்கும் என் திராட்சைத்தோட்டத்திற்கும் நியாயந்தீருங்கள். எரே 2:4-5லூக் 20:15-16மத் 21:40-41மீகா 6:2-3மாற் 12:9-12சங் 50:4-6சங் 51:4ரோம 2:5 நான் என் திராட்சைத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? மத் 23:37மீகா 6:3-4அப் 7:51-60எரே 2:5எசேக் 24:13ஏசா 1:5எரே 2:30-31எரே 6:29-30 இப்போதும் நான் என் திராட்சைத்தோட்டத்திற்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதிக்கப்பட்டுப்போகும். ஏசா 28:18புலம் 1:15லூக் 21:24உபா 28:49-52ஆதி 11:4ஆதி 11:7ஏசா 10:6ஏசா 28:3 அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். ஏசா 7:23-25எரே 25:11ஏசா 24:1-31 இராஜா 17:12 நாளாக 36:19-21ஆமோ 4:7உபா 28:23-24உபா 29:23 சேனைகளின் யெகோவாவுடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனிதர்களே; அவர் நியாயத்திற்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறையிடுதல். சங் 80:8-11யாக் 5:4எரே 12:10மத் 3:8-101 கொரி 6:8-11உபா 15:9யாத் 3:7ஏசா 1:6

சாபங்கள் மற்றும் நியாயத்தீர்ப்புகள்

தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகும்வரை, வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ, மீகா 2:2ஆப 2:9-12எரே 22:13-17லூக் 12:16-241 இராஜா 21:16-20எசேக் 11:15எசேக் 33:24மத் 23:13 சேனைகளின் யெகோவா என் காது கேட்கச் சொன்னது: உண்மையாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும். மத் 23:38ஆமோ 3:7ஆமோ 5:11ஏசா 22:142 நாளாக 36:21ஆமோ 6:11ஏசா 27:10ஏசா 5:6 பத்து ஏர் நிலமாகிய திராட்சைத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும். லேவி 26:26ஆகா 1:6ஆகா 2:16ஆகா 1:9-11எசேக் 45:10-11யோவே 1:17லேவி 27:16 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ, நீதி 23:29-30நீதி 20:1ரோம 13:13ஏசா 5:22பிரச 10:16-17ஏசா 28:7-81 கொரி 6:101 தெச 5:6-7 அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் யெகோவாவின் செயலை கவனிக்கிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. சங் 28:5ஆமோ 6:4-6யோபு 21:11-14யோபு 34:27தானி 5:23யூதா 1:12தானி 5:1-4ஆதி 31:27 என் மக்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் துவண்டுபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். ஓசி 4:6ஏசா 1:3ஏசா 1:7ஏசா 27:11யோவா 3:19-20ரோம 1:282 பேது 3:5ஏசா 42:22-25 அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். ஆப 2:5லூக் 21:34நீதி 30:16சங் 55:15ஏசா 30:33மத் 7:13நீதி 27:20வெளி 20:13-15 சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோகும். ஏசா 2:11ஏசா 2:9எரே 5:4-51 பேது 5:5தானி 4:37யாத் 9:17ஏசா 10:12ஏசா 10:33 சேனைகளின் யெகோவா நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராக விளங்குவார். சங் 46:101 நாளாக 29:11ஏசா 12:41 பேது 2:15எசேக் 36:23ஏசா 29:23எசேக் 38:23ஏசா 33:5 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அனுபவிப்பார்கள். செப்ப 2:6ஏசா 7:25செப்ப 2:14ஆமோ 4:1-3உபா 28:33உபா 32:15ஓசி 8:7ஏசா 1:7 மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து, எரே 23:14எசேக் 13:22எரே 23:10எரே 5:31சங் 36:22 சாமு 16:20-23அப் 26:9எசேக் 13:10-11 நாம் பார்க்கும்படி, அவர் துரிதமாகத் தமது கிரியையைச் சீக்கிரமாக நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் தெரிந்துகொள்ளும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ, எசேக் 12:22எரே 17:152 பேது 3:3-4ஆமோ 5:18-19ஏசா 66:5எரே 23:36எரே 5:12-13எசேக் 12:27 தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ, நீதி 17:152 தீமோ 3:1-5லூக் 16:15மல்கி 2:17யோபு 17:12மத் 6:22-232 பேது 2:12 பேது 2:18-19 தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ, 1 கொரி 3:18-20நீதி 3:7ரோம 12:16நீதி 26:12நீதி 26:16யோவா 9:41யோபு 11:12ரோம 1:22 சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, ஏசா 5:11ஆப 2:15ஏசா 28:7ஏசா 56:12நீதி 23:19-20ஏசா 28:1-3 லஞ்சத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாகப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ, ஏசா 10:2யாக் 5:6நீதி 17:15சங் 94:21ஏசா 1:23மீகா 3:11மீகா 7:3நீதி 31:4-5 இதினிமித்தம் நெருப்புத்தழல் வைக்கோலை சுட்டெரிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்களுடைய வேர் வாடி, அவர்களுடைய துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டை செய்தார்களே. ஏசா 30:12யோபு 18:16யோவே 2:5லூக் 3:17ஏசா 47:14யாத் 15:7ஏசா 30:91 கொரி 3:12-13 ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. ஏசா 10:4ஏசா 9:212இராஜா 9:37ஏசா 9:17தானி 9:16எரே 4:241 தெச 2:162 நாளாக 36:16 அவர் தூரத்திலுள்ள தேசத்தாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் தூரமான இடங்களிலிருந்து சைகைகாட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் துரிதமும் வேகமுமாக வருவார்கள். சகரி 10:8உபா 28:49ஏசா 7:18ஏசா 18:3ஏசா 11:12மல்கி 1:11ஆப 1:8ஏசா 13:2 அவர்களில் சோர்வடைந்தவனும் தடுமாறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், காலணிகளின் வார் அறுந்துபோவதும் இல்லை. யோபு 12:18யோவே 2:7-8யோபு 12:211 இராஜா 2:5தானி 5:6உபா 32:25எபே 6:13-14ஏசா 11:5 அவர்களுடைய அம்புகள் கூர்மையும், அவர்களுடைய வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்களுடைய உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும். சங் 45:5எசேக் 21:9-11நாகூ 2:3-4ஏசா 21:1நியாயாதி 5:22எரே 47:3எரே 5:16மீகா 4:13 அவர்களுடைய கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, காப்பாற்றுகிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஏசா 42:22ஏசா 49:24-25மீகா 5:8சகரி 11:3ஆமோ 3:8ஆதி 49:9ஓசி 11:10ஏசா 10:6 அந்நாளில், கடல் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும். ஏசா 8:22யோவே 2:10எரே 4:23-28வெளி 16:10-11எசேக் 32:7-8ஏசா 13:10எரே 6:23லூக் 21:25-26