எரேமியா 17

Jeremiah 17
அத்தியாயம் 17

யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களின் கொம்புகளிலும் பதிந்திருக்கிறது. நீதி 3:32 கொரி 3:3நீதி 7:3லேவி 4:25யோபு 19:23-24ஓசி 12:11லேவி 4:17-18 உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்கள் அருகில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது. 2 நாளாக 24:18எரே 2:202 நாளாக 33:3ஏசா 1:29ஏசா 17:8நியாயாதி 3:72 நாளாக 33:19எசேக் 20:28 வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் சொத்துக்களையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன். எரே 15:132இராஜா 24:13எரே 26:18ஏசா 39:4-62இராஜா 25:13-16எசேக் 16:39எசேக் 6:3எசேக் 7:20-22 அப்படியே நான் உனக்குக் கொடுத்த நிலத்தை நீ தானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் எதிரிகளுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் நெருப்பை மூட்டிவிட்டீர்களே. எரே 15:14புலம் 5:2ஏசா 5:25எரே 7:20மாற் 9:43-49உபா 4:26-27ஏசா 14:3எரே 16:13 மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார். சங் 118:8-9சங் 146:3-4ஏசா 2:222 நாளாக 32:8ஏசா 31:1-9ஏசா 30:1-7ஏசா 36:6சங் 62:9 அவன் அந்தரவெளியில் உலர்ந்துபோன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்திரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். யோபு 20:17உபா 29:23சங் 1:4எரே 48:6யோபு 15:30-34யோபு 39:6யோபு 8:11-13நியாயாதி 9:45 யெகோவாமேல் நம்பிக்கைவைத்து, யெகோவாவை தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனிதன் பாக்கியவான். ஏசா 26:3-4சங் 34:8சங் 40:4சங் 125:1ஏசா 30:18சங் 84:12நீதி 16:20சங் 146:5 அவன் தண்ணீர் அருகில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், வெயில் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைகுறைவான வருடத்திலும் வருத்தமில்லாமல் தவறாமல் பழங்களைக் கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். சங் 1:3ஏசா 58:11எசேக் 47:12எசேக் 31:4-10சங் 92:10-15யோபு 8:16எரே 14:1-6 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? மாற் 7:21-22மத் 15:19பிரச 9:3நீதி 28:26எபி 3:12ஆதி 6:5யாக் 1:14-15ஆதி 8:21 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். 1 சாமு 16:7ரோம 8:27எரே 11:20எபி 4:12-13வெளி 2:23சங் 139:23-24எரே 32:19எரே 20:12 அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அடைகாத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதில் அதைவிட்டு, தன் முடிவில் மூடனாயிருப்பான். நீதி 28:20நீதி 21:6எரே 22:17எரே 22:13நீதி 15:27நீதி 28:82 பேது 2:14பிரச 5:13-16 எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது. சங் 96:6எசேக் 43:7எரே 3:17எசேக் 1:26எரே 14:21எபி 12:2எபி 4:16ஏசா 6:1 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும். வெளி 7:17யோவா 4:14யோவா 7:37-38யோவா 4:10வெளி 22:1சங் 36:8-9வெளி 21:6யோவா 8:6-8 யெகோவாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னைக் காப்பாற்றும், அப்பொழுது காப்பாற்றப்படுவேன்; தேவரீரே என் துதி. சங் 6:2உபா 32:39சங் 106:47லூக் 4:18சங் 6:4ஏசா 57:18-19உபா 10:21சங் 109:1 இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள். ஏசா 5:19எசேக் 12:22எசேக் 12:27-28எரே 20:7-82 பேது 3:3-4ஆமோ 5:18 நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது. அப் 20:20அப் 20:27எரே 4:19-202 கொரி 1:122 கொரி 2:17ஆமோ 7:14-15எசேக் 3:14-19எசேக் 33:7-9 நீர் எனக்குப் பயங்கரமானவராக இருக்காதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம். நாகூ 1:7எரே 16:19சங் 59:16சங் 88:15-16யோபு 31:23எரே 17:13எரே 17:7சங் 41:1 நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரச்செய்து, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும். சங் 35:4சங் 40:14சங் 25:2-3சங் 83:17-18எரே 11:20எரே 20:11சங் 35:8எரே 16:18

ஓய்வுநாளை பரிசுத்தமாக அனுசரித்தல்

யெகோவா என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் போக்கும் வரத்துமாயிருக்கிற இந்த மக்களின் பிள்ளைகளுடைய வாசலிலும் 1 எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு, எரே 26:2எரே 7:2அப் 5:20எரே 19:2எரே 36:10எரே 36:6நீதி 1:20-22நீதி 8:1 அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் நுழைகிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிமக்களுமாகிய நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். எரே 19:3எசேக் 2:7எரே 22:2சங் 49:1-2ஆமோ 4:1எசேக் 3:17ஓசி 5:1எரே 13:18 நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராமலிருக்கவும். நெகே 13:15-21எண் 15:32-36யோவா 5:9-12உபா 11:16உபா 4:15உபா 4:23உபா 4:9எபி 12:15-16 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாமலிருக்கவும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 20:12யாத் 20:8-10ஏசா 56:2-6ஏசா 58:13உபா 5:12-15யாத் 16:23-29யாத் 23:12யாத் 31:13-17 அவர்களோ கேளாமலும், கீழ்ப்படியாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள். நீதி 29:1அப் 7:51எரே 11:10எரே 19:15எரே 7:24-26எசேக் 20:21ஏசா 48:4எரே 32:33 நீங்களோவென்றால், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராமலும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்க என் சொல்லைக் கேட்பீர்களானால், உபா 11:13எரே 17:21-222 பேது 1:5-10யாத் 15:26உபா 11:22ஏசா 21:7ஏசா 55:2ஏசா 58:13-14 அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிமக்களும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் நுழைவார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும். எரே 22:4ஏசா 9:72 சாமு 7:16எபி 12:22எரே 33:15எரே 33:17எரே 33:211 இராஜா 9:4-5 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான வேறுதேசத்திலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து 2 மக்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், சாப்பிட உணவுபலிகளையும், நறுமணப்பொருட்களையும், நன்றிபலிகளையும் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவருவார்கள். எரே 32:44எரே 33:13சகரி 7:7சங் 107:22எரே 33:11சங் 116:171 பேது 2:51 பேது 2:9-10 நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்க ஓய்வுநாளில் சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கவும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களென்றால், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை எரித்தும், அணைந்துபோகாதிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். 2இராஜா 25:9எரே 7:20எரே 21:14ஆமோ 1:14ஆமோ 2:4-5எசேக் 22:8எரே 52:13புலம் 4:11