எசேக்கியேலின் அழைப்பு
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே 1, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். தானி 10:11எசேக் 3:17எசேக் 4:1எசேக் 3:1எசேக் 3:4எசேக் 5:1அப் 9:6மத் 16:13-16 இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன். எசேக் 3:24எசேக் 3:12எண் 11:25-261 சாமு 16:13தானி 8:18எசேக் 3:14எசேக் 36:27நியாயாதி 13:25 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள். எரே 3:251 சாமு 8:7-8தானி 9:5-13உபா 9:242 நாளாக 36:15-162இராஜா 17:17-20அப் 7:51உபா 9:27 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல். எசேக் 3:7ஏசா 48:4எரே 5:3எரே 6:15சங் 95:81 இராஜா 22:142 நாளாக 30:82 நாளாக 36:13 கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். எசேக் 33:33எசேக் 3:27யோவா 15:22மத் 10:12-15அப் 13:46எசேக் 2:7லூக் 10:10-122 கொரி 2:15-17 மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள். எரே 1:8ஏசா 51:121 பேது 3:142 தீமோ 1:7லூக் 10:19எரே 1:17மத் 10:28மீகா 7:4 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. எரே 23:28எசேக் 2:5எசேக் 3:10எசேக் 3:17எரே 1:7எரே 1:17எரே 26:2யோனா 3:2 மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார். வெளி 10:9எரே 15:16ஏசா 50:5எசேக் 3:1-31 பேது 5:31 தீமோ 4:14-16எசேக் 3:101 இராஜா 13:21-22 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது. எசேக் 8:3தானி 10:10எசேக் 3:1வெளி 10:8-11வெளி 5:1-5தானி 10:16-18தானி 5:5எபி 10:7 அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது. வெளி 8:13ஏசா 3:11ஏசா 30:8-11ஆப 2:2எரே 36:29-32வெளி 11:14வெளி 9:12