எசேக்கியேல் 25

Ezekiel 25
அத்தியாயம் 25

அம்மோனியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: மனிதகுமாரனே, நீ அம்மோனியர்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, எரே 49:1-6ஆமோ 1:13-15எசேக் 6:2எசேக் 20:46எசேக் 21:2எசேக் 21:28-32எசேக் 35:2ஆதி 19:38 அம்மோனியர்களுக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என்னுடைய பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதமக்கள் சிறையிருப்பிற்கு போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால், எசேக் 36:2நீதி 17:5சங் 70:2-3எசேக் 25:6மீகா 7:8நீதி 24:17-18எசேக் 25:8எசேக் 26:2-21 இதோ, நான் உன்னைக் கிழக்குத்தேசத்தாருக்குச் சொந்தமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்களுடைய கோட்டைகளைக் கட்டி, உன்னில் தங்களுடைய கூடாரங்களை உண்டாக்குவார்கள்; அவர்கள் உன்னுடைய பழங்களைச் சாப்பிட்டு, உன்னுடைய பாலைக் குடிப்பார்கள். உபா 28:33நியாயாதி 6:331 இராஜா 4:30உபா 28:51ஏசா 1:72 சாமு 12:26ஆதி 29:1ஏசா 32:8-9 நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோனியர்களின் தேசத்தை ஆட்டுதொழுவமுமாக்குவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வீர்கள். எசேக் 21:202 சாமு 12:26ஏசா 17:2உபா 3:11எசேக் 24:24எசேக் 25:8எசேக் 26:6எசேக் 30:8 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக நீ கை தட்டி, உன்னுடைய காலால் தட்டி, வஞ்சம் வைத்து, தீங்கு செய்ததினால், ஒபதி 1:12செப்ப 2:8செப்ப 2:10எசேக் 25:15எசேக் 36:5எசேக் 6:11யோபு 27:23நாகூ 3:19 இதோ, உனக்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, உன்னை தேசங்களுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை மக்களுக்குள்ளே நிலையற்றவளாக்கி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை அழிப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய். செப்ப 1:4எசேக் 25:13எசேக் 25:16எசேக் 6:14ஆமோ 1:14-15எசேக் 14:9எசேக் 35:3எரே 49:2

மோவாபியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதமக்கள் எல்லா தேசங்களுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால், ஏசா 15:1-9எரே 25:21எரே 48:1-47ஆமோ 2:1-3ஆமோ 2:11-12உபா 2:5எசேக் 25:12-14எசேக் 35:1-15 இதோ, அம்மோனியர்கள் பெயர் தேசங்களுக்குள் இல்லாதபடி நான் அம்மோனியர்களின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சொந்தமாக ஒப்புக்கொடுக்கிறவிதமாக, எரே 48:23யோசு 13:17யோசு 13:19-20எண் 32:37-381 நாளாக 5:8எரே 48:1யோசு 12:3எண் 32:3 நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடைசி ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து, எசேக் 21:32எசேக் 25:4ஏசா 23:16சங் 83:3-6 மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 11:9எசேக் 16:41எசேக் 25:17எசேக் 25:5எசேக் 30:14எசேக் 30:19எசேக் 35:15எசேக் 39:21

ஏதோமியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஏதோம் யூதா மக்களிடத்தில் கோபத்தைத்தணிக்க, பழிவாங்கி, பெரிய குற்றம்செய்ததால், எரே 49:7-22எசேக் 25:8சங் 137:7ஆமோ 1:11-12ஒபதி 1:10-162 நாளாக 28:17-18எசேக் 35:1-15ஆதி 27:41-42 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்திற்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி அதில் மனிதர்களையும், மிருகங்களையும் இல்லாதபடி அழித்து, அதைத் தேமான் துவங்கித் தேதான்வரை வனாந்திரமாக்குவேன்; வாளினால் விழுவார்கள். எசேக் 29:8எரே 25:23மல்கி 1:3-4எரே 49:7-8ஆமோ 1:12எசேக் 14:13எசேக் 14:17எசேக் 14:19-21 நான் இஸ்ரவேலாகிய என்னுடைய மக்களின் கையினால் ஏதோமியர்களிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என்னுடைய கோபத்தையும், கடுங்கோபத்தையும் ஏதோமுக்கு காட்டுவார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆதி 27:29ஏசா 11:14உபா 32:35-36எசேக் 35:11எபி 10:30-31ஏசா 63:1-6எரே 49:2நாகூ 1:2-4

பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பெலிஸ்தியர்கள் பழிவாங்கிறவர்களாக இருந்து, பழைய விரோதத்தால் கெடுதல்செய்யவேண்டுமென்று, மனதில் வைத்துப் பழிவாங்கினதால், எசேக் 25:6ஏசா 14:29-312 நாளாக 28:18எசேக் 25:12எரே 25:20சகரி 9:5-81 நாளாக 7:211 சாமு 13:1-14 இதோ, நான் பெலிஸ்தியர்களுக்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி, கிரேத்தியர்களை அழித்து, மத்திய தரைக் கடற்கரையில் மீதியானவர்களை அழித்து, 1 சாமு 30:14செப்ப 2:4-15எசேக் 25:13எரே 47:1-72 சாமு 15:18எசேக் 25:7 கடுங்கோபமான தண்டனைகளினால் அவர்களைக் கொடூரமாகப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 25:11எசேக் 25:14எசேக் 5:15சங் 9:16எசேக் 25:5எசேக் 6:7