மோவாபைக்குறித்த செய்தி
மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போனது; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போனது. எரே 48:22-23எண் 32:3எண் 32:37-38ஆமோ 2:1-2எசேக் 25:8-11ஏசா 15:1-9எரே 25:212 நாளாக 20:10 எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெருமை இனி இருக்காது; அது ஒரு தேசமாக இராமல் அதை அழிப்போம் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய்; பட்டயம் உன்னைத் தொடரும். ஏசா 16:14எரே 31:36எண் 32:37எஸ்த 3:8-14ஏசா 15:1ஏசா 15:5ஏசா 16:8-9ஏசா 25:10 பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும். ஏசா 15:5எரே 48:34எரே 48:5ஏசா 15:2ஏசா 15:8ஏசா 16:7-11ஏசா 22:4எரே 4:20-21 மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது. எஸ்த 8:11எண் 21:27-30சங் 137:9 லூகித்திற்கு ஏறிப்போகிற வழியில் அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியில் நொறுக்குதல் செய்கிறதினால் ஏற்படுகிற கூக்குரலை எதிரிகள் கேட்கிறார்கள். ஏசா 15:5 உங்கள் உயிர் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்திரத்திலுள்ள குறுகிப்போன செடியைப்போலிருப்பீர்கள். எரே 17:6எரே 51:6யோபு 30:3-7ஆதி 19:17எபி 6:18லூக் 17:31-33லூக் 3:7மத் 24:16-18 நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறதினால் நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போகும்; அதின் ஆசாரியர்களும் பிரபுக்களும் எல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள். எண் 21:29எரே 49:3எரே 9:23சங் 52:71 இராஜா 11:331 தீமோ 6:17ஓசி 10:13ஏசா 46:1-2 பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று யெகோவா சொன்னார். எரே 6:26எசேக் 25:9எரே 15:8எரே 25:9எரே 48:18எரே 48:20-25எரே 51:56யோசு 13:17 மோவாபுக்கு இறக்கைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிமக்களில்லாமல் பாழாய்ப்போகும். ஏசா 16:2எரே 48:28சங் 11:1எரே 46:19சங் 55:6வெளி 12:14செப்ப 2:9 யெகோவாவுடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன். 1 இராஜா 20:421 சாமு 15:31 சாமு 15:9நியாயாதி 5:232இராஜா 13:19எண் 31:14-18எரே 50:251 சாமு 15:13-35 மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாக வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் ஊற்றப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை மாறவில்லை. செப்ப 1:12எரே 48:29சகரி 1:15எசேக் 16:49-50நாகூ 2:2ஏசா 16:6ஏசா 24:3சங் 123:4 ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள். நாகூ 2:2எசேக் 25:9-10ஏசா 30:14எரே 48:38ஏசா 16:2எரே 14:3எரே 19:10எரே 25:34 அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும். ஏசா 45:16ஓசி 8:5-6நியாயாதி 11:24எரே 48:391 இராஜா 11:71 இராஜா 12:28-291 இராஜா 18:26-291 இராஜா 18:40 நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் போர்வீரர்களென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன? சங் 33:16ஏசா 10:13ஏசா 10:16பிரச 9:11எசேக் 30:6ஏசா 16:6ஏசா 36:4-5எரே 49:16 மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்திற்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார். எரே 46:18எரே 50:27எரே 51:57ஏசா 40:30-31மல்கி 1:14தானி 4:37ஏசா 34:2-8யாக் 5:4 மோவாபின் ஆபத்து வரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் வேகமாகவருகிறது. ஏசா 13:222 பேது 2:3உபா 32:35எசேக் 12:23எசேக் 12:28ஏசா 16:13-14எரே 1:12 அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் புகழை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள். ஏசா 9:4எசேக் 19:11-14ஏசா 10:5ஏசா 14:4-5ஏசா 16:8எரே 48:31-33எரே 48:39எரே 9:17-20 தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான். ஏசா 47:1எண் 21:30ஏசா 15:2எரே 48:22யோசு 13:17யாத் 17:3எசேக் 19:13ஆதி 21:16 ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியில் நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள். உபா 2:361 சாமு 4:161 சாமு 4:13-141 நாளாக 5:82 சாமு 1:3-42 சாமு 18:24-322 சாமு 24:5எண் 32:34 மோவாப் தோல்வியடைந்ததினால் கலங்கிப்போனது; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள். ஏசா 16:2உபா 2:36ஏசா 15:1-5ஏசா 15:8ஏசா 16:7-11நியாயாதி 11:18எரே 48:1-5யோசு 13:9 சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மெபாகாத்தின் மேலும், யோசு 13:18ஏசா 15:4எரே 48:8எண் 21:23எசேக் 25:9யோசு 21:36-37செப்ப 2:9 தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும், எரே 48:18எண் 33:46எசேக் 6:14எரே 48:1எண் 32:34 கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும், யோசு 13:17எரே 48:1ஆதி 14:5யோசு 13:19எண் 32:38 கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்தில் தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும். ஆமோ 2:2எரே 48:41உபா 4:43யோசு 21:36செப்ப 2:8-10 மோவாபின் கொம்பு வெட்டப்பட்டது; அவன் கை முறிக்கப்பட்டது என்று யெகோவா சொல்லுகிறார். சங் 75:10சங் 10:15யோபு 22:9சகரி 1:19-21தானி 7:8தானி 8:21தானி 8:7-9எசேக் 30:21-25 அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; யெகோவாவுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்தியெடுத்து அதில் புரளுவான்; அவன் பரியாசத்திற்கு இடமாவான். ஏசா 19:14ஏசா 29:9எரே 48:42எரே 51:39தானி 5:23யாத் 5:2எரே 48:39எரே 51:7 இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையை ஆட்டுகிறாயே. எரே 2:26மீகா 7:8-10எசேக் 25:8புலம் 2:15-17செப்ப 2:8எசேக் 26:2-3எசேக் 35:15எசேக் 36:2 மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள். நியாயாதி 6:2சங் 55:6-7உன்னத 2:14ஏசா 2:19எரே 48:9எரே 49:161 சாமு 13:6ஒபதி 1:3-4 அவன் அதிக பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் தற்பெருமையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன். ஏசா 16:6ஏசா 2:11-12சங் 138:6தானி 4:37யாக் 4:6யோபு 40:10-12லூக் 14:11நீதி 18:12 அவன் தற்பெருமையையும் நான் அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார். எரே 50:36ஏசா 16:6ஏசா 37:28-29யோபு 9:12-13நீதி 21:30சங் 33:10 ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனிதரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும். 2இராஜா 3:25ஏசா 15:5எரே 48:36ஏசா 16:7-11 சீப்மாவூரின் திராட்சைச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோனது; அவைகள் யாசேர் கடல்வரை போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சைப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான். ஏசா 16:8-9எண் 21:32யோசு 13:19எரே 40:10எரே 48:15எரே 48:18எரே 48:8யோசு 21:39 பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போனது; திராட்சைரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயச்செய்தேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல. ஆகா 2:16ஏசா 5:10ஏசா 16:9-10ஏசா 24:7-12ஏசா 32:9-14ஏசா 7:23ஏசா 9:3எரே 25:9-10 எஸ்போன் துவங்கி எலெயாலெ, யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்வரை சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் தண்ணீர்களும் வற்றிப்போகும். ஏசா 15:4-6எண் 32:3உபா 34:3ஆதி 13:10எரே 48:2-3எரே 48:5எண் 32:36-37 மோவாப் தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தெய்வங்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 15:2ஏசா 16:12எரே 11:13எரே 48:7எண் 22:40-41எண் 28:14எண் 28:28-30 ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனிதருக்காகவும், என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்துபோகிறதினால் அப்படித் தொனிக்கும். ஏசா 15:7ஏசா 16:11ஏசா 15:5பிரச 5:13-14ஏசா 63:15யாக் 5:2-3எரே 17:11எரே 4:19 தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், இடுப்புகளில் சணலாடைகள் உண்டு. ஆதி 37:34ஏசா 15:2-3எரே 41:5எரே 47:5ஏசா 20:2எரே 16:61 இராஜா 18:281 இராஜா 21:27 மோவாபின் எல்லா வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 22:28ஏசா 22:1எரே 25:342 தீமோ 2:20-21ஓசி 8:8ஏசா 15:3ஏசா 30:14சங் 2:9 மோவாப் எவ்வளவாக முறிந்துபோனதென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும். எசேக் 26:16-18ஏசா 20:4-6எரே 48:17எரே 48:26-27புலம் 1:1புலம் 2:1புலம் 4:1வெளி 18:15-16 இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் இறக்கைகளை விரிப்பான். ஏசா 8:8உபா 28:49எரே 49:22எசேக் 17:3ஓசி 8:1தானி 7:4ஆப 1:8எரே 4:13 கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளில் மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும். ஏசா 13:8ஏசா 21:3எரே 30:6எரே 49:22எரே 6:24மீகா 4:9-101 தெச 5:3ஏசா 26:17-18 மோவாப் யெகோவாவுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டினதினால், அது ஒரு மக்கள் கூட்டமாக இராமல் அழிக்கப்படும். எரே 48:2ஏசா 37:23ஏசா 7:8எரே 30:11எரே 48:26-302 தெச 2:4தானி 11:36எஸ்த 3:8-13 மோவாப் தேசத்தின் விவசாயியே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 24:17-18புலம் 3:47உபா 32:23-25சங் 11:6 திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியில் பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1 இராஜா 19:17எரே 11:23ஆமோ 5:19எரே 46:211 இராஜா 20:30ஆமோ 2:14-15ஆமோ 9:1-4ஓசி 9:7 கடுமையான அடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் ஒதுங்கி நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், நெருப்பு ஜூவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப்தேசத்தின் எல்லைகளையும், கலகம் செய்கிறவர்களின் உச்சந்தலையையும் எரிக்கும் எண் 24:17எண் 21:28ஆமோ 2:2மத் 21:42எண் 21:21எண் 21:26சகரி 10:4 மோவாபே, உனக்கு ஐயோ, கேமோஷ் சிலைக்கு அருகிலுள்ள மக்கள் அழிவார்கள், உன் மகன்களும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் மகள்களும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள். எண் 21:291 இராஜா 11:7நியாயாதி 11:24எரே 48:13எரே 48:72இராஜா 23:13 ஆனாலும் வரும் நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்துடன் முடிந்தது. எரே 49:39எரே 49:6தானி 10:14தானி 2:28உபா 31:29உபா 4:30எசேக் 16:53-55ஓசி 3:5