ஏசாயா 24

Isaiah 24
அத்தியாயம் 24

பூமியின்மேல் அழிவு

இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார். ஏசா 2:19நாகூ 2:10ஏசா 24:20ஏசா 42:152இராஜா 21:13எசேக் 12:20எசேக் 35:14ஏசா 6:11-12 அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும். ஓசி 4:9எசேக் 7:12-13புலம் 5:12-142 நாளாக 36:14-172 நாளாக 36:20தானி 9:5-8உபா 23:19-20எபே 6:8-9 தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை. ஏசா 24:1ஏசா 6:112 நாளாக 36:21உபா 29:23உபா 29:28எசேக் 36:4ஏசா 21:17ஏசா 22:25 தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து மக்களிலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள். ஓசி 4:3ஏசா 2:11-12ஏசா 3:26ஏசா 33:9ஏசா 28:1ஏசா 64:6எரே 12:4எரே 4:28 தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். எபி 13:20ரோம 8:20-21தானி 7:25எபி 9:12 நாளாக 33:92இராஜா 17:7-232இராஜா 22:13-172இராஜா 23:26-27 இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள். மல்கி 4:1மத் 7:14சகரி 5:3-4எசேக் 5:3லேவி 26:22மல்கி 4:6ரோம 9:272 பேது 3:10 திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள். ஏசா 16:10ஏசா 16:8யோவே 1:10-12ஓசி 9:1-2ஏசா 32:9-13 மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும். ஓசி 2:11எசேக் 26:13எரே 7:34வெளி 18:22எரே 16:9எரே 25:10ஏசா 23:15-16ஏசா 5:12 பாடலோடே திராட்சைரசம் குடிக்கமாட்டார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும். பிரச 9:7ஏசா 5:22ஆமோ 6:5-7ஆமோ 8:10ஆமோ 8:3எபே 5:18-19ஏசா 5:11-12ஏசா 5:20 வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும். வெளி 18:2வெளி 17:5-62இராஜா 25:42இராஜா 25:9-10ஆதி 11:9ஏசா 23:1ஏசா 24:12ஏசா 25:2 திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும். ஓசி 7:14ஆமோ 5:16-20ஏசா 16:10ஏசா 24:7-9ஏசா 32:13ஏசா 8:22ஏசா 9:19எரே 48:33 நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும். ஏசா 32:14எரே 9:11புலம் 1:1புலம் 1:4புலம் 2:9புலம் 5:18மீகா 1:12மீகா 1:9 ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும். ஏசா 1:9எசேக் 11:16-20எசேக் 14:22-23எசேக் 6:8-11எசேக் 7:16எசேக் 9:4-6ஏசா 10:20-22ஏசா 17:5-6 அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; யெகோவாவுடைய மகத்துவத்திற்காக சமுத்திரத்திலிருந்து ஆர்ப்பரிப்பார்கள். ஏசா 12:1-6ஏசா 25:1ஏசா 26:1ஏசா 27:2ஏசா 35:10ஏசா 35:2ஏசா 40:9ஏசா 44:23 ஆகையால் யெகோவாவை, சூரியன் உதிக்கும் திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள். மல்கி 1:11ஏசா 42:10ஏசா 42:4ஏசா 49:1ஏசா 51:5ஏசா 60:91 பேது 1:71 பேது 3:15 நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன். ஏசா 21:2ஏசா 33:1எரே 3:20எரே 5:11அப் 13:47யாத் 15:11ஆப 1:3ஓசி 5:7 தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும். எரே 48:43-441 இராஜா 19:17ஆமோ 5:19எசேக் 14:21எரே 8:3லேவி 26:21-22 அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். ஆதி 7:11சங் 18:7ஆமோ 5:19யோபு 20:24யோசு 10:10-11சங் 18:15சங் 46:2-31 இராஜா 20:29-30 தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும். ஏசா 34:4-10உபா 11:6ஏசா 24:1-5எரே 4:23-28நாகூ 1:5வெளி 20:11ஆப 3:6மத் 24:3 வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது. ஏசா 19:14தானி 11:19ஏசா 29:9ஆமோ 8:14ஓசி 4:1-5வெளி 18:21புலம் 1:14சகரி 5:5-8 அக்காலத்தில் யெகோவா உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். சங் 76:12சகரி 14:12-19ஏசா 34:2-17ஏசா 10:12சங் 149:6-9எசேக் 38:1-23ஏசா 10:25-27ஏசா 14:1-2 அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். சகரி 9:11ஏசா 42:22எரே 38:6-13எசேக் 38:8ஏசா 10:4ஏசா 2:19ஏசா 24:17யோசு 10:16-17 அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார். ஏசா 60:19ஏசா 13:10வெளி 21:23வெளி 22:5எபி 12:22ஏசா 12:6ஏசா 30:26மீகா 4:7