ஏசாயாவின் வேலை
உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய ஆடையின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. யோவா 12:41வெளி 15:8தானி 7:9வெளி 7:15-17சங் 113:5மத் 25:31ஏசா 66:1யோவா 1:18 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து; வெளி 4:8எசேக் 1:11சங் 103:20சங் 104:41 இராஜா 6:24ஏசா 6:6சங் 18:10சகரி 3:4 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். வெளி 4:8-9சங் 72:19யாத் 15:11எஸ்றா 3:11எண் 14:21யாத் 15:20-21ஏசா 11:9-10ஏசா 40:5 சொன்னவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைக்கால்கள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. வெளி 15:81 இராஜா 8:10-122 நாளாக 5:13யாத் 40:34வெளி 11:19எசேக் 10:5ஆமோ 9:1சங் 18:8 அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். லூக் 5:8-9யாக் 3:6-10எரே 1:6எரே 9:3-8மத் 12:34-37யாத் 6:30யாத் 4:10எசேக் 2:6-8 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, வெளி 8:3-5எபி 9:22-26எசேக் 10:2எபி 1:7எபி 13:10ஏசா 6:2லேவி 16:12அப் 2:3 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். எரே 1:91 யோவா 1:7ஏசா 43:25தானி 10:16எபி 9:13-14ஏசா 53:10ஏசா 53:5மத் 9:2 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். யாத் 4:10-13அப் 26:16-17எபே 3:8அப் 22:21ஏசா 65:1மத் 4:20-22அப் 20:24உபா 4:33-36 அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். மத் 13:14-15லூக் 8:10மாற் 4:12யோவா 12:40அப் 28:26-27ரோம 11:8ஏசா 29:13ஏசா 43:8 இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார். மத் 13:15அப் 28:27எரே 5:21எரே 6:10யோவா 3:19-20சகரி 7:11ஏசா 29:10ஏசா 63:17 அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி, ஏசா 1:7ஏசா 24:1-12ஏசா 3:26லேவி 26:31சங் 90:13சங் 94:3சங் 79:5சங் 74:10 யெகோவா மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார். எரே 4:29உபா 28:642இராஜா 25:112இராஜா 25:21ஏசா 26:15எரே 12:7எரே 15:4எரே 52:28-30 ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார். யோபு 14:7-9ரோம 11:5-6ஆதி 22:18ஏசா 65:8-9ரோம 11:16-29எஸ்றா 9:2கலா 3:16-19கலா 3:28-29