நாகூம் 2

Nahum 2
அத்தியாயம் 2

நினிவேயின் அழிவு

சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து. யோவே 3:9-112 நாளாக 25:8எரே 51:20-23எரே 51:11-12எரே 50:23எரே 46:3-10ஏசா 14:6நாகூ 3:14-15 வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார். எசேக் 37:23சங் 80:12-13செப்ப 3:11ஏசா 60:15ஆதி 49:22-23ஓசி 10:1ஏசா 10:5-12எரே 25:29 அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். எசேக் 23:14-15ஏசா 63:1-3ஏசா 14:8வெளி 12:3வெளி 6:4சகரி 1:8சகரி 11:2சகரி 6:2 இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும். எரே 4:13எசேக் 26:10ஏசா 66:15நாகூ 3:2-3தானி 11:40ஏசா 37:24 அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். எரே 46:12ஏசா 21:5ஏசா 5:27எரே 50:29எரே 51:27-28நாகூ 3:18நாகூ 3:3 ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும். ஏசா 45:1-22 பேது 3:10-11 அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். ஏசா 38:14ஏசா 59:11ஏசா 32:12லூக் 23:27லூக் 23:48 நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. ஆதி 10:11ஏசா 13:14ஏசா 47:13ஏசா 48:20எரே 46:5எரே 50:16எரே 51:13எரே 51:30 வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது. 2 நாளாக 36:10தானி 11:8எசேக் 26:12ஏசா 33:4எரே 25:34எரே 51:56நாகூ 2:12-13ஏசா 33:1 அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது. தானி 5:6யோவே 2:6சங் 22:14ஏசா 13:7-8எரே 30:6ஏசா 21:3ஏசா 24:1செப்ப 2:13-15 சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே? ஏசா 5:29எரே 2:15எசேக் 19:2-8ஆதி 49:9ஏசா 31:4எரே 4:7எரே 50:17எரே 50:44 சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று. எரே 51:34ஏசா 10:6-14சங் 17:12 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 21:13நாகூ 3:5சங் 46:92இராஜா 19:232இராஜா 19:9எசேக் 5:8ஏசா 49:24-25யோசு 11:9