ஆமோனின் மகனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எசேக்கியாவின் மகனாகிய அமரியாவுக்கு மகனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் மகன் செப்பனியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம். எரே 1:22 நாளாக 34:1-332இராஜா 22:1-202 பேது 1:19எசேக் 1:3ஓசி 1:1எரே 25:32 தீமோ 3:16
யெகோவாவுடைய மாபெரும் நாள்
தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 2இராஜா 22:16-17மீகா 7:13எசேக் 33:27-29எரே 36:292 நாளாக 36:21ஆதி 6:7ஏசா 6:11எரே 24:8-10 மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஓசி 4:3எசேக் 7:19எசேக் 14:13-21ஏசா 27:9எரே 12:4மத் 23:39எசேக் 14:3-7எசேக் 15:6-8 நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும், ஓசி 10:52இராஜா 23:4-5மீகா 5:132 நாளாக 34:42இராஜா 21:13ஏசா 14:26-27எரே 6:12யாத் 15:12 வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும், 2இராஜா 17:33எரே 19:131 இராஜா 11:331 இராஜா 18:212இராஜா 17:412இராஜா 23:121 இராஜா 11:5ஆமோ 5:26 யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன். ஏசா 1:4எரே 2:13எரே 15:6எரே 2:17எசேக் 3:20எபி 10:38-39ஓசி 11:7ஏசா 9:13 யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். ஆப 2:20சகரி 2:13செப்ப 1:14ஏசா 34:6எரே 46:10ஏசா 13:61 சாமு 16:5ஆமோ 5:18-20 யெகோவாவுடைய பலியின் நாளிலே நான் அதிபதிகளையும் இளவரசர்களையும் வேறுதேசத்து ஆடைகளை அணிந்த அனைவரையும் தண்டிப்பேன். ஏசா 24:212இராஜா 25:19-21ஏசா 3:18-24ஏசா 39:7எரே 22:11-19எரே 22:24-30எரே 39:6-72இராஜா 23:30-34 வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை 1 நிரப்புகிற அனைவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். 1 சாமு 5:5ஆமோ 3:101 சாமு 2:15-162இராஜா 5:20-27நெகே 5:15நீதி 29:12அப் 16:19 அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா அழிவின் இரைச்சலும் உண்டாகுமென்று யெகோவா சொல்லுகிறார். 2 நாளாக 33:142இராஜா 22:14ஆமோ 8:3எரே 4:19-21நெகே 3:32 நாளாக 3:12 நாளாக 32:222 சாமு 5:7 மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள். யாக் 5:1எசேக் 21:12ஓசி 12:7-8எரே 25:34ஓசி 9:6எரே 4:8யோவா 2:16யோவே 1:13 அக்காலத்திலே நான் எருசலேமைப் பட்டணத்தை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனிதர்களைத் தண்டிப்பேன். ஆமோ 6:1எரே 48:11எசேக் 8:12எசேக் 9:9மல்கி 3:14-15ஆமோ 9:1-32 பேது 3:4எரே 10:5 அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. ஆமோ 5:11மீகா 6:15உபா 28:30உபா 28:39எசேக் 7:21எரே 15:13எரே 9:19உபா 28:51 யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது மிகவும் நெருங்கி வேகமாக வருகிறது; யெகோவாவுடைய நாள் என்கிற சத்தத்திற்குப் பராக்கிரமசாலி முதலாக அங்கே மனங்கசந்து அலறுவான். எசேக் 30:3மல்கி 4:5செப்ப 1:71 தெச 4:16எசேக் 7:12ஏசா 15:4ஏசா 33:7யோவே 2:11 அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் நெருக்கமுமான நாள்; அது அழிவும் வெறுமையுமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். யோவே 2:2ஏசா 22:5வெளி 6:17ஆமோ 5:18-20எரே 30:72 பேது 3:7யோபு 3:4-8யோவே 2:11 அது பாதுகாப்பான நகரங்களுக்கும், உயரமான கோட்டைமதில்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். ஆமோ 3:6ஓசி 8:1ஏசா 2:12-15ஏசா 32:14ஓசி 5:8ஏசா 59:10எரே 4:19-20சங் 48:12-13 மனிதர்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தபடியால், அவர்கள் குருடர்களைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்களுடைய இரத்தம் புழுதியைப்போல் ஊற்றப்படும்; அவர்களுடைய உடல்கள் எருவைப்போல் கிடக்கும். சங் 83:10வெளி 3:172 பேது 1:9எரே 10:18எரே 2:17மத் 15:14மீகா 7:131 யோவா 2:11 யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களைத் தப்புவிக்காது; அவருடைய எரிச்சலின் நெருப்பினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிமக்களையெல்லாம் விரைவாக அழிப்பார். செப்ப 3:8எசேக் 7:19நீதி 11:4செப்ப 1:2-3எரே 9:11மத் 16:26செப்ப 1:11செப்ப 1:15