நீதிமொழிகள் 16

Proverbs 16
அத்தியாயம் 16

தேவ ஞானமும் நீதியும்

மனதின் யோசனைகள் மனிதனுடையது; நீதி 19:21நீதி 16:9லூக் 21:14-15பிலி 2:13நீதி 20:24மத் 10:19-20லூக் 12:11-12எரே 10:23

நாவின் பதில் யெகோவாவால் வரும்.

மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; நீதி 21:21 சாமு 16:7லூக் 16:15நீதி 30:12எரே 17:10நீதி 24:12சங் 36:2நீதி 16:25

யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; சங் 37:4-5நீதி 3:6சங் 55:22பிலி 4:61 பேது 5:7யோபு 22:28யோபு 5:8லூக் 12:22

அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.

யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; 2 பேது 2:9ஏசா 43:21ரோம 9:22ஏசா 43:71 பேது 2:8வெளி 4:112 பேது 2:3யோபு 21:30

தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதி 6:16-17நீதி 11:21நீதி 8:13ரோம 2:8-9யாக் 4:6யோபு 40:12ஏசா 3:11யாத் 20:7

கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; நீதி 14:162 கொரி 7:1யோபு 28:28தானி 4:27லூக் 11:41நீதி 14:27நீதி 8:13யோபு 1:1-8

யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.

ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், ரோம 8:311 யோவா 3:222 நாளாக 17:10கொலோ 1:10எரே 15:11எபி 13:21ஆதி 33:4ஆதி 32:28

அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.

அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நீதி 15:16சங் 37:161 தீமோ 6:6-9எரே 17:11நீதி 21:6-7மீகா 6:10

நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.

மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; நீதி 19:21சங் 37:23நீதி 16:1நீதி 20:24எரே 10:23நீதி 21:30ஏசா 46:10

அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.

ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; ஏசா 32:1-2ஆதி 44:15ஆதி 44:51 இராஜா 3:282 சாமு 23:3-4ஆமோ 5:7உபா 17:18-20ஓசி 10:4

நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.

நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; நீதி 11:1நீதி 20:10நீதி 20:23உபா 25:13-15எசேக் 45:10ஓசி 12:7லேவி 19:35-36ஆமோ 8:5

பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதி 25:5நீதி 29:14லூக் 12:48நீதி 28:9உபா 25:16நீதி 20:18சங் 99:4வெளி 19:11

நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நீதி 14:35நீதி 22:11சங் 101:5-7

நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; நீதி 20:2நீதி 19:12பிரச 10:42 கொரி 5:202இராஜா 6:31-33அப் 12:20தானி 3:13-25லூக் 12:4-5

ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.

ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; சங் 72:6யோபு 29:23-24அப் 2:28ஓசி 6:3நீதி 19:12சங் 21:6சங் 30:5சங் 4:6

அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.

பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! மத் 16:26நீதி 8:10-11நீதி 8:19லூக் 12:21பிரச 7:12நீதி 3:15-18நீதி 4:7யோபு 28:13-28

வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை

தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; ஏசா 35:8நீதி 10:9நீதி 19:16யூதா 1:21நீதி 4:24-27வெளி 3:10தீத் 2:10-14அப் 10:35

தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.

அழிவுக்கு முன்னானது அகந்தை; நீதி 11:2ஏசா 2:11-12நீதி 18:12ஒபதி 1:3-4நீதி 29:231 தீமோ 3:6நீதி 17:19ரோம 11:20

விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, மத் 5:3ஏசா 57:15சங் 138:6யாத் 15:9சங் 34:18ஏசா 53:12லூக் 1:51-53லூக் 18:13-14

சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.

விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; எரே 17:7-8ஏசா 26:3-4ஏசா 30:18சங் 2:12சங் 34:8தானி 6:23நீதி 19:8சங் 146:5

யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.

இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; நீதி 16:23-24ஏசா 50:4நீதி 15:7நீதி 27:9யாக் 3:17யோவா 7:46லூக் 4:221 இராஜா 3:12

உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.

புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. நீதி 13:14யோவா 5:24யோவா 6:63மத் 15:14நீதி 10:11நீதி 18:4யோவா 6:68மத் 23:16-26

ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; நீதி 15:28மத் 12:34-35கொலோ 3:16நீதி 22:17-18சங் 37:30-31சங் 45:1

அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், நீதி 12:18நீதி 24:13-14நீதி 25:11-12நீதி 4:22நீதி 23:16நீதி 3:8சங் 119:103நீதி 27:9

எலும்புகளுக்கு மருந்தாகும்.

மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; நீதி 14:122 கொரி 13:5நீதி 12:15நீதி 12:26ஏசா 28:15-19யோவா 7:47-49அப் 26:9யோவா 9:40

அதின் முடிவோ மரண வழிகள்.

உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; பிரச 6:7நீதி 14:232 தெச 3:8-12நீதி 9:121 தெச 4:11-12

அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

வீணான மகன் கிண்டிவிடுகிறான்; யாக் 3:6நீதி 6:141 சாமு 25:17ஏசா 5:18நீதி 6:12சங் 17:14-15சங் 52:2-4சங் 57:4

அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.

மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; நீதி 17:9யாக் 3:14-16நீதி 15:18நீதி 18:8ரோம 1:29நீதி 6:141 தீமோ 6:3-5ஆதி 3:1-13

கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.

கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, நீதி 2:12-152 பேது 3:17நீதி 12:26நீதி 1:10-14நீதி 3:311 சாமு 19:111 சாமு 19:171 சாமு 22:7-9

அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.

அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, மத் 13:15நீதி 6:12-14ஏசா 6:10யோவா 3:20மத் 14:7-8மத் 27:23-26மீகா 7:3நீதி 10:10

தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.

நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது நீதி 20:29லேவி 19:32நீதி 3:1-21 சாமு 12:2-5நீதி 17:6பிரச 4:13ஆதி 47:7-10லூக் 1:6

மகிமையான கிரீடம்.

பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; யாக் 1:19நீதி 15:18நீதி 25:28நீதி 14:29நீதி 19:11ரோம 12:21சங் 103:8எபே 5:1

பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.

சீட்டு மடியிலே போடப்படும்; நீதி 18:18அப் 1:26யோனா 1:71 சாமு 14:41-42நீதி 29:26யோசு 18:5யோசு 7:14நெகே 11:1

காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.