தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; 2 கொரி 1:10யாத் 34:6-7சங் 40:1-3சங் 18:18-19சங் 119:1322 கொரி 5:20-21சங் 25:16சங் 17:6
நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;
எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.
மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, நீதி 1:22ஓசி 4:7சங் 3:3எரே 2:11சங் 106:20சங் 5:61 சாமு 12:21பிரச 8:11
வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; யோவா 15:16சங் 34:152 தெச 2:13-14சங் 91:14-152 பேது 2:92 தீமோ 2:191 பேது 2:9தீத் 2:14
நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; எபே 4:26சங் 77:6சங் 63:6நீதி 3:7சங் 46:102 கொரி 13:5யோபு 28:28சங் 33:8
உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். எபி 13:15-16சங் 37:3சங் 51:191 பேது 4:19உபா 33:19சங் 62:8ஏசா 1:11-18மத் 5:23
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; சங் 80:19எண் 6:26சங் 119:135சங் 80:7சங் 67:1சங் 89:15சங் 44:3சங் 49:16-20
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.
அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, ஏசா 9:3சங் 63:2-5சங் 37:4சங் 43:4அப் 14:17சங் 92:4நியாயாதி 9:27எரே 48:33
அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; நீதி 3:24சங் 3:5யோபு 11:18-19சங் 16:8-91 தெச 5:10உபா 12:10லேவி 25:18-19ஓசி 2:18
யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.