சங்கீதங்கள் 63

Psalms 63
சங்கீதம் 63

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.

தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; சங் 143:6சங் 84:2சங் 42:1-2மத் 6:33சங் 91:2வெளி 7:16-17ஏசா 41:18யாத் 15:2

வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,

என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.

இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, சங் 27:4சங் 105:4சங் 84:2-11சங் 96:61 நாளாக 16:112 கொரி 4:4-61 சாமு 4:21-22யாத் 33:18-19

உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

உயிரைவிட உமது கிருபை நல்லது; பிலி 1:23சங் 51:15சங் 69:16எபி 13:15சங் 30:51 கொரி 6:20ரோம 12:1சங் 30:12

என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.

என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, சங் 104:33சங் 134:2சங் 28:21 இராஜா 8:22-66சங் 145:1-3ஆப 3:10சங் 146:1-2

உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.

நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; சங் 36:7-9ஏசா 25:6சங் 17:15சங் 43:4எஸ்றா 3:11-13சங் 118:14-15சங் 135:3சங் 65:4

என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, சங் 42:8சங் 119:147-148சங் 149:5சங் 119:55புலம் 2:19சங் 139:17-18சங் 77:4-6உன்னத 5:2

இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், 2 கொரி 1:10சங் 61:4சங் 27:9சங் 17:8சங் 54:3-4சங் 57:11 சாமு 17:37சங் 5:11

உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.

என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; ஏசா 41:10சங் 18:35சங் 73:23உன்னத 2:6சங் 37:24ஏசா 42:1சங் 73:25சங் 94:18

உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, சங் 55:15சங் 40:14சங் 9:171 சாமு 25:29ஏசா 14:19எண் 16:30-33சங் 86:13எசேக் 32:18-32

பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

அவர்கள் வாளால் விழுவார்கள்; எரே 18:21எசேக் 35:5எசேக் 39:41 சாமு 26:101 சாமு 31:1-6எசேக் 39:17-20வெளி 19:17-18உன்னத 2:15

நரிகளுக்கு இரையாவார்கள்.

ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; உபா 6:13சங் 21:1ஏசா 45:23ஏசா 65:16ரோம 3:19எபி 6:131 சாமு 23:171 சாமு 24:20

தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்

அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;

பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.