அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; சங் 33:3வெளி 5:9சங் 148:1எபி 2:12ஏசா 42:10சங் 98:1சங் 116:18சங் 144:9
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சங் 100:1-3சங் 95:6ஏசா 52:7ஏசா 54:5உபா 7:6-7யோவே 2:23யோபு 35:10லூக் 19:38
மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, எரே 31:131 நாளாக 15:28-292 சாமு 6:142 சாமு 6:16யாத் 15:20சங் 81:2நியாயாதி 11:34சங் 150:3-5
தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சங் 147:111 பேது 3:4சங் 35:27சங் 132:16செப்ப 3:17சங் 22:8சங் 117:2எரே 32:41
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, யோபு 35:10சங் 42:81 பேது 1:8சங் 118:15சங் 145:10சங் 132:16சங் 23:1சங் 63:5-6
தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், எபி 4:12சங் 66:17வெளி 1:16வெளி 19:6நெகே 9:5சங் 96:4லூக் 2:14சங் 145:3-5
அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், சகரி 14:17-191 சாமு 15:2-3வெளி 19:11-211 சாமு 15:18-23நியாயாதி 5:23எண் 31:2-3சங் 137:8-9சகரி 9:13-16
அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும்,
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், நியாயாதி 1:6-7யோசு 10:23-24யோசு 12:7யோபு 36:8
அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். 1 கொரி 6:2-3சங் 148:14சங் 137:8உபா 32:42-43உபா 7:1-2எசேக் 28:26ஏசா 14:22-23வெளி 17:14-16
அல்லேலூயா.